`கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட, பொதுமக்களின் விழிப்புணர்வும் அறிவார்ந்த செயல்பாடுகளுமே ஆயுதங்கள். அந்த அறிவாயுதத்தை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நம் உள்ளூர் தலைவர்களுக்கு உண்டு’ இப்படிச் சொல்வது நியூயார்க் நகரத்தின் முன்னாள் மேயர் ரூடால்ப் கியூலானி. பயங்கரவாதத் தாக்குதலில் இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்டபோது மொத்த நகரத்தின் மக்களும் அச்சத்தில் ஒடுங்கிப்போனார்கள். அவர்களை மீட்டெடுத்த பெருமை இவரையே சேரும்.

ரூடால்ப் கியூலானி, இரண்டு முறை நியூயார்க் நகரத்தின் மேயராக இருந்தவர். 2001 செப்டம்பர் 11-ம் தேதி நடந்த இரட்டைக்கோபுரத் தகர்ப்பு நிகழ்வை மேயராக அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதை ‘தலைமைத்துவம்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார். அதில், இதுபோன்ற ஆபத்தான சூழலில் எப்படி ஒரு தலைவன் உருவாக முடியும் என்பதையும் விவரித்திருக்கிறார்.

‘என் வாழ்நாளில் இப்படி ஒரு நிகழ்வைச் சந்திக்கப்போகிறோம் என நான் நினைத்துப்பார்க்கவேயில்லை. இப்படியும் அமெரிக்காவை நிலைகுலையவைக்க முடியுமா என அதிர்ந்துபோனேன். நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அமெரிக்கர்களும் அதிர்ந்துபோனார்கள். உளவியல்ரீதியாக ஒடுங்கிப்போனார்கள். நியூயார்க் நகரை, உயிர் பயம் சூழந்துகொண்டது.

அன்றைய சராசரி மனிதன் `அமெரிக்கா, இவ்வளவு பலவீனப்பட்ட சூழ்நிலைக்கு வந்துவிட்டதே!’ என ஒடுங்கிப்போனான். அப்படியான சூழலில் ‘அருகில் நான் இருக்கிறேன்’ என்று ஒரு தலைவன் பணி செய்தால் ஒட்டுமொத்த சூழலையும் மாற்றிவிடலாம். அதைத்தான் மேயராக நான் செய்தேன்’ என்கிறார்.

பதவி என்பது நமக்கு மதிப்புக் கூட்டும் அடையாளமல்ல, அது ஒரு பொறுப்பு. பொறுப்பை நிறைவேற்றுவது ஒரு கடமை. அதற்காகத்தான் அதிகாரமும் நிதியும் வழங்கப்படுகின்றன. இப்படியான பேரிடர் சூழல்கள்தான், பதவியில் இருப்பவர்களை தலைமைத்துவப் பண்பு களைக்கொண்டவராக மாற்றிக்காட்டும் வாய்ப்புகளை அளிக்கின்றன. குறிப்பாக, உள்ளாட்சி அளவில் இருக்கும் உள்ளூர் தலைவர்களுக்கான வாய்ப்பு இது.

தேசியத் தலைமை, மாநிலத் தலைமை இவையெல்லாம் உதவிக்கு வரும். ஆனால், உள்ளாட்சி அளவில் உள்ளூர் தலைவர்கள்தான் செயலில் இறங்கி மக்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும். உள்ளாட்சித் தலைவர்களே மக்களுடன் நேரடி தொடர்புகொண்டவர்கள். எனவே, ஓசையின்றி மக்கள் தேவைகளை அறிந்து சேவைகளைச் செய்தால், உள்ளூர் தலைமையின்மேல் நம்பிக்கை அதிகரிக்கும் என்பதை அந்தப் புத்தகத்தின் வாயிலாக விளக்கியுள்ளார் ரூடால்ப் கியூலானி.

‘மேயராக நான் அலுவலகத்துக்குள் இருந்து இயங்கவில்லை. களத்தில் இறங்கி மக்களுடன் செயல்பட்டேன். அதுவே மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. இரட்டைக்கோபுரம் தாக்குதலில் இறந்தவரை ஈமச்சடங்குக்கு எடுத்துச் செல்வதாக இருந்தாலும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதாக இருந்தாலும் நான் உடன் இருந்தேன். அதுவே, எல்லா வேலைகளும் தொய்வின்றி போர்க்கால அடிப்படையில் நடைபெற ஊக்கமளித்தது. உள்ளூர் தலைவர்கள் இப்படித்தான் எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும்’ என்று பதிவுசெய்துள்ளார் அவர்.

அவர் சொல்வது உண்மைதான். ஒவ்வொரு நேரத்துக்கும் ஒவ்வொரு தலைமைத்துவம் தேவைப்படுகிறது. இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், வீரம்மிக்க உரைகள் மற்றும் செயல்கள் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். பொருளாதார மந்தநிலை வந்தபோது, அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் தன் பேச்சுத்திறமையால் மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கிச் செயல்பட வைத்தார். அமெரிக்கா, வலுவான பொருளாதார நாடாக உருவெடுத்தது. ரீகன் அதிபராக வந்தபோது, புதிய பொருளாதாரக் கொள்கைக்கு வழிவகுத்து, பொருளாதாரம் மேம்படுவதை கண்கூடாக மக்களுக்குக் காண்பித்தார்.

அந்தத் தலைவர்கள் சொன்னதை மக்கள் நம்பினார்கள். அதேபோல் தாங்கள் சொன்னதை அந்தத் தலைவர்களும் நடத்திக் காட்டினார்கள். சிலர் சந்தர்ப்ப வசத்தால் பதவிகளுக்கு வரலாம். அவர்கள் மக்களுக்கான செயல்பாடுகளில் தங்களை நிரூபிக்கவில்லையென்றால், தலைவர்களாக வரலாறு அவர்களை பதிவுசெய்யாது.

‘பேச்சுத்திறமையால் மக்கள் மத்தியில் தலைவர்கள் பிரபலமாகத் திகழ்கிறார்கள்’ என்று பலரும் கூறுவார்கள். தலைவர்களுக்கு பேச்சுத்திறமை மட்டும் போதாது, செயல்பாடு மிக முக்கியம். உரத்த குரலில் பேசுவோரைவிட, ஓசையின்றி மக்கள் தேவைகளைப் பூர்த்திசெய்வோரை வரலாறு என்றும் மறப்பதில்லை.

நல்ல தலைவர்கள் எப்போதுமே ‘குறைவான வாக்குறுதிகள் அதிக செயல்பாடுகள்’ என்ற நிலைப்பாட்டில் செயல்படுவார்கள். அப்படிச் செயல்படுபவர்கள், மக்களின் உணர்வுடன் தொடர்பில் இருப்பார்கள். அப்படிப்பட்ட தலைவர்கள் தங்களின் பிரதிநிதிகளை எல்லா இடங்களிலும் நிறுத்திவைத்திருப்பார்கள். அவர்கள், மக்களுக்கு அரசு தருவதை அப்படியே கொண்டு சேர்த்து தலைவனுக்கு புகழ் சேர்த்துவிடுவார்கள்.

‘ஒரு தலைவனின் உன்னதமான செயல்பாட்டுக்கு, தன்னலமற்ற அறிவுஜீவிகளை பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். பேரிடர்களை மக்கள் சந்திக்கும்போது இந்தத் தலைவர்கள் தங்கள் உயிரை துச்சமென பணயம் வைத்து செயல்பட வேண்டும். அவர்களின் சிந்தனைப்போக்கு, செயல்பாடு ஆகியவை அசாதாரண நிலையில் இயங்குவதை அவர்களே பார்த்து வியப்பார்கள்’ - நியூயார்க் மக்களை மீட்டெடுத்த கதையை இப்படி விளக்கியுள்ளார் ரூடால்ப் கியூலானி.

இன்று இந்திய மக்கள் சந்திக்கும் இந்த இக்கட்டான சூழலில் இதுபோன்ற தலைவர்களை சொற்ப அளவிலே பார்க்க முடிகிறது. மத்திய, மாநில அரசுகளின் முடிவுகளை அடித்தளத்திலிருந்து செயல்படுத்த வேண்டிய உள்ளாட்சித் தலைவர்கள் ஒளிந்துகொண்டார்களா அல்லது ஓரம்கட்டப் பட்டுவிட்டார்களா? கடைநிலையில் மக்களுடன் இணைந்து செயல்படும் உள்ளாட்சிகள் ஏன் களத்தில் வீரியத்துடன் இல்லை என்ற கேள்விதான் இன்று நம் முன் நிற்கிறது.

கேரளா, ஒடிசா போன்ற அரிதாக சில மாநிலங்களைத் தவிர, பேரிடர் காலத்தில் நம் உள்ளாட்சிகளால் செயல்பட முடியாதா? ஒருவேளை, இன்றைக்கு நிலவும் அசாதாரண சூழலில் உள்ளாட்சியும் இணைந்து செயல்பட்டிருந்தால் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்கு இன்னும் அதிக பலன் கிடைத்திருக்கும். நமது ஆட்சியாளர்களுக்கு உள்ளாட்சியின் மீது நம்பிக்கையில்லை அல்லது அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள விருப்பமில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.