Published:Updated:

2K kids: 100 வயசு... விஞ்சை விலாஸின் கதை!

விஞ்சை விலாஸ்
பிரீமியம் ஸ்டோரி
விஞ்சை விலாஸ்

ஜா.ஜாய்ஸ்லின்

2K kids: 100 வயசு... விஞ்சை விலாஸின் கதை!

ஜா.ஜாய்ஸ்லின்

Published:Updated:
விஞ்சை விலாஸ்
பிரீமியம் ஸ்டோரி
விஞ்சை விலாஸ்

``1924-ம் வருஷம் என் தாத்தா ஆரம்பிச்ச ஹோட்டல் இது... இன்னும் மூணு வருஷத்துல சதம் அடிக்கப் போறோம்’’ என்று உற்சாகமாகச் சொல்கிறார், சண்முகசுந்தரம். திருநெல்வேலியில், நெல்லையப்பர் கோயி லுக்குச் செல்லும் முக்கிய சாலையில் அமைந் திருக்கிறது விஞ்சை விலாஸ்.

சண்முகசுந்தரம்
சண்முகசுந்தரம்

‘`நெல்லை மட்டுமில்லாம சுத்து வட்டாரத்துலயும், ஒவ்வொரு வீட்டுலயும், பூட்டி, பாட்டி, அம்மா, மகள், பேத்தினு தலை முறை தலைமுறையா விஞ்சை விலாஸின் ருசிக்கு ரசிகர்கள் இருக்காங்க’’ என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.

“அந்தக் காலத்துல எங்க தாத்தா குறைஞ்ச விலையில தரமான, ருசியான உணவுனு ஆரம்பிச்ச ஹோட்டல் இது. மேலும், உணவு வகைகள்ல புதுமையைக் கொண்டுவரணும்னு நினைச்ச அவர், நன்னாரி பாலை எங்க ஹோட்டலோட சிறப்பா நிறுவினார். இப்போ வரை அது தொடருது. எங்க ஹோட்டலுக்கு வர்றவங்க நன்னாரி பால் சாப்பிடாம போக மாட்டாங்க. இது எங்களோட பிரத்யேக தயாரிப்பு. கேரளாவுல இருந்து நன்னாரி வேர் வாங்கிட்டு வந்து, தாமிரபரணி தண்ணியில ஊறவெச்சு, வேகப்போட்டுனு ஒரு பிரத்யேக மான செய்முறையில நன்னாரி பால் தயாரிப் போம். மேலும் அப்பா விதவிதமான பன்னீர் சோடாவும் தயாரிச்சார்’’ என்கிறார் சண்முக சுந்தரம்.

நன்னாரி பால்
நன்னாரி பால்
2K kids: 100 வயசு... விஞ்சை விலாஸின் கதை!

காலை மற்றும் இரவு டிபன் மட்டுமே உண்டு இங்கே. இட்லி, தோசை, பூரி போன்ற வழக்கமான உணவுகளே இங்கு தனித்துவத் துடன் இருக்க, தக்காளி தோசை, வெங்காயப் பொடி தோசை போன்ற ஸ்பெஷல் உணவுகள், ஒருமுறை சாப்பிட்டால் நாவிலும் நினைவிலும் இருந்து அகலவே அகலாது எனும் அளவுக்கு ருசியில் அசத்துகின்றன.

‘`தென்காசி, கன்னியாகுமரினு பக்கத்து மாவட்டங்கள்ல இருந்தெல்லாம் மக்கள் விஞ்சை விலாஸ்ல சாப்பிடுறதுக்காகவே வருவாங்க. பல ஊர்கள், நாடுகள்லயும் செட் டில் ஆகியிருக்குற நெல்லைவாசிகள் ஊருக்கு வந்ததும், அவங்க கால்கள் தேடிப் போற இடம் இந்த ஹோட்டல்தான்’’ என்கிறார்கள் இதன் ரெகுலர் வாடிக்கையாளர்கள்.

2K kids: 100 வயசு... விஞ்சை விலாஸின் கதை!
2K kids: 100 வயசு... விஞ்சை விலாஸின் கதை!
2K kids: 100 வயசு... விஞ்சை விலாஸின் கதை!

‘’பொதுவா, ஹோட்டல் உணவைக் குழந்தைகளுக்குக் கொடுக்கத் தயங்குவோம். ஆனா, உள்ளூர்ல பல வீடுகள்லயும் குழந்தை களுக்காகவே இங்க வந்து உணவு வாங்கிட்டுப் போவாங்க. அந்தளவுக்கு இந்த ஹோட்டல்ல வீட்டுச் சமையல் பக்குவத்துல, ஆரோக்கியத் துக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க’’ என்கிறார்கள் ஊர்ப் பெண்கள்.

100 வருடங்களை நெருங்கிவிட்டது. உள்ளூர், வெளியூர் எனத் தேடி வருபவர் களுக்குக் குறைவில்லை. ஆனாலும், இன்று வரை அது நான்கைந்து பென்ச்சுகளே உள்ள குட்டி ஹோட்டல்தான்.

எளிமையின் ருசி அப்படித்தான்!