Published:Updated:

புதிய கல்விக்கொள்கை... நன்மையா, தீமையா?

கல்விக்கொள்கை
பிரீமியம் ஸ்டோரி
கல்விக்கொள்கை

கல்வியும் கேள்வியும்

புதிய கல்விக்கொள்கை... நன்மையா, தீமையா?

கல்வியும் கேள்வியும்

Published:Updated:
கல்விக்கொள்கை
பிரீமியம் ஸ்டோரி
கல்விக்கொள்கை
கொரோனா பெருந்தொற்று பதற்றத்தையும் கடந்து புதிய கல்விக்கொள்கை குறித்த விவாதங்கள் அனல் பறக்கின்றன. இந்தக் கல்விக்கொள்கை மிகவும் ஆபத்தானது என்று ஒரு தரப்பினரும், இதுதான் மிகச்சிறந்த கல்விக்கொள்கை என்று இன்னொரு தரப்பினரும் சொல்ல... ஆதரவும் எதிர்ப்பும் அலைமோதுகின்றன. இருதரப்பினரும் என்ன சொல்கிறார்கள்?

இதை வைத்து எப்படி உலகத்தரத்துக்குச் செல்ல முடியும்?

பேராசிரியர் வசந்திதேவி

புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறோம் என்றால், இப்போது நடைமுறையில் உள்ள கல்வி நிலை அற்புதமாக இருக்கிறது என்று பொருள் அல்ல. இதில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று நீண்ட காலமாகப் போராடி வருகிறோம். ஆனால், அதற்கு நேர்மாறான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளனர்.

புதிய கல்விக்கொள்கை... நன்மையா, தீமையா?

பின்லாந்து, நார்வே, ஸ்வீடன், கனடா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவைதாம் கல்வியில் பல காலமாக முன்னணியில் இருக்கின்றன. அங்குள்ள கல்வி அமைப்புதான் அந்த நாடுகளின் வளர்ச்சிக்குக் காரணம். அந்த நாடுகள் கல்வியைப் பொறுத்த வரையில் முழுக்க முழுக்க அதிகாரப் பரவல் செய்துள்ளன. மத்தியில் அதிகாரக் குவியலே கிடையாது. எல்லா அதிகாரங்களும் மாநில அரசுகளிடம்தான் இருக்கும்.

அந்தந்தப் பகுதியில் உள்ள வளர்ச்சி நிலைகளுக்குத் தகுந்தாற்போல் அங்கே கல்வி அமைப்பு இருக்கும். ஆனால், இந்தியாவில் எல்லா அதிகாரங்களையும் மத்தியில் குவிக்கின்றனர். பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டில் ஒரே ஒரு மையத்தில் அதிகாரம் குவிக்கப்படுவது ஏற்புடையதல்ல.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேற்குறிப்பிட்ட நாடுகளில் அனைத்துக் குழந்தைகளும் முழுக்க முழுக்க அரசின் நிதியில் இலவசமாகத் தரமான கல்வியைப் பெறுகின்றனர். ‘காசு கொடுத்து கல்வி’ என்ற நடைமுறையே அங்கு கிடையாது. ஆராய்ச்சி படிப்புவரை அதுதான் நிலைமை.

புதிய கல்விக்கொள்கை... நன்மையா, தீமையா?

அரசின் கட்டுப்பாடுகள் இருக்கும்போதே தனியார் கல்வி நிறுவனங்களின் கொள்ளை எல்லை மீறிவிட்டதையும், கறுப்புப்பணம் அங்குதான் அதிகம் குவிகிறதென்பதையும் நாம் அறிவோம். ஆனால், புதிய கல்விக்கொள்கையோ தனியார் நிறுவனங்களைப் புனிதப்படுத்திச் சொல்கிறது. ‘தனியார் கல்வி நிறுவனங்கள் கொள்ளையடித்தால் என்ன செய்வது?’ என்று கேட்டால், அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். ரிசல்ட் எப்படி வருகிறது என்பதை மட்டும்தான் பார்க்க வேண்டுமே ஒழிய கல்வி நிறுவனங்களின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்கின்றனர்.

அடுத்ததாகத் தேர்வுகள்... அந்த நாடுகளிலெல்லாம் தேர்வு என்பதே கிடையாது. ஆசிரியர்கள் தினமும் குழந்தைகளின் எல்லாத் திறமைகளையும் கண்காணித்து (Continuous Cumulative Assessment) ரிப்போர்ட் கார்டு கொடுப்பார்கள். அங்கு யாருமே ஃபெயில் கிடையாது. பின்தங்கிய மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி கொடுத்து முன்னேற்றுவார்கள். ஆனால், இங்கோ...

3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு, மெடிக்கல், இன்ஜினீயரிங் போல கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கும் நுழைவுத் தேர்வு என்கின்றனர்.

இறுதியில் மொழி திணிப்பு. ‘சம்ஸ்கிருதம் தான் இந்த நாட்டு கலாசாரத்தின் உயிர் நாடி. அதைப் படித்துதான் இந்தியக் கலாசாரத்தை நாம் மக்களுக்குக் கொண்டு செல்ல முடியும்’ என்கின்றனர். பண்டைய காலத்து கல்வி பாரம்பர்யத்தைத் திரும்பக் கொண்டு வர வேண்டும் என்கிறார்கள். முழுக்க முழுக்க சாதிய ஆதிக்கம், ஆண் ஆதிக்கம், பெண் அடிமைத்தனம் நிறைந்ததுதானே பண்டைக் கால நம் கல்வி பாரம்பர்யம். சம்ஸ்கிருத மொழியை மேல் சாதிக்காரர்களைத் தவிர வேறு யாரும் பயில முடியாது. மேல் சாதியில் உள்ள பெண்களுக்கே அந்த உரிமை கிடையாது என்ற நிலைதானே இருந்தது. இப்படியான மொழியையும் கல்வி பாரம்பர்யத்தையும் எதற்காக ஒரு ஜனநாயக நாட்டில் வலியுறுத்த வேண்டும். இதை வைத்து எப்படி உலகத் தரமான கல்வியை அடைய முடியும்?

குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக்கொண்டிருக்க வேண்டுமா?

பானுகோம்ஸ், அரசியல் விமர்சகர்

புதிய கல்விக்கொள்கையை ஒட்டு மொத்தமாக வரவேற்கிறேன். கல்வி என்பது கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கக் கூடாது. ஒரு மாணவருக்கு 10-ம் வகுப்பு படிக்கும்போது ஒரு குறிப்பிட்ட சப்ஜெக்ட்டில் விருப்பம் இருக்கலாம். ப்ளஸ் டூ போகும்போது அந்த விருப்பம் மாறலாம். கல்லூரியில் வேறொரு படிப்பின்மீது விருப்பம் ஏற்படலாம். ஆக, ஒருவன் எதை எதையெல்லாம் கற்றுக்கொள்ள விரும்புகிறானோ அவை எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளக்கூடிய வகையில் கல்வி அமைய வேண்டும் என்பதுதான் என்னுடைய பார்வை. புதிய கல்விக்கொள்கை அதைச் சாத்தியப்படுத்துகிறது. ஏதாவதொரு காரணத்தால் ‘டிராப் அவுட்’ ஆகும் மாணவர்கள் அவர்கள் விட்ட இடத்திலிருந்து படிப்பைத் தொடரலாம் என்பது எவ்வளவு பெரிய வரவேற்கத்தக்க அம்சம். மாணவர்கள் பக்கமிருந்தும் இதுவரை ‘டிராப் அவுட்’ ஆனவர்கள் பக்கமிருந்தும் சிந்தித்தால் மட்டுமே இது புரியும்.

புதிய கல்விக்கொள்கை... நன்மையா, தீமையா?

புதிய கல்விக்கொள்கை சம்ஸ்கிருதத்தை தான் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. மூன்றாவதாக ஏதாவதொரு மொழியைக் கற்றுக்கொடுங்கள் என்றுதான் சொல்கிறது. தமிழும் சம்ஸ்கிருத மும் தொன்மையான ஆதி மொழிகள். ஜெர்மனிலும் சீனாவிலும் சம்ஸ்கிருதத்தைக் கற்றுக்கொடுக்கிறார்கள். அவர்களுக்கு அதன் மகிமையும் அதில் உள்ள அறிவும் தெரிந்துள்ளது. இப்போது நாம் சம்ஸ்கிருதத்தை வேண்டாம் என்றால் இன்னும் எழுபது எண்பது வருடங்கள் கழித்து ஒருவர் வந்து தமிழ் வேண்டாம் என்பார் நாம் விட்டுவிடுவோமா? நம் மொழியைக் காக்க வேண்டுமென்றால் சம்ஸ்கிருதத்தையும் சேர்த்து இழுத்துக்கொண்டுதான் போக வேண்டும். ஏனென்றால், நமக்கு ஒரு துணை தேவை.

இப்போது 10-ம் வகுப்புக்கும் 12-ம் வகுப்புக்கும் நடைபெறும் பொதுத்தேர்வு போல 3, 5, 8 வகுப்புகளுக்கு நடத்தப்படும் தேர்வுகள் இருக்கும் என்ற எண்ணத்தில் அப்படிச் சொல்கிறார்கள். ஆனால், முற்றிலும் மாறுபட்ட தேர்வு முறைதான் வரப்போகிறது. ஒரு குழந்தையினுடைய எல்லா திறமைகளையும் கணக்கில் கொண்டுதான் தேர்வுகள் கட்டமைக்கப்படவிருக்கின்றன. ஆனாலும் 3-ம் வகுப்புக்குத் தேர்வு என்பதை நானும் ஏற்றுக்கொள்ளவில்லை. 5-ம் வகுப்பிலிருந்து நடத்தலாம்.

அடுத்ததாக, புதிய கல்விக்கொள்கையால் மாநில உரிமைகள் பறிபோவதாகச் சொல்வதில் நியாயமே இல்லை. பணி நியமனங்களை யெல்லாம் மாநில அரசுதான் செய்யப் போகிறது. ‘தேர்வுக்கான வடிவமைப்பைதான் அவர்கள் செய்யப்போகின்றனர். இதில் மாநில உரிமைகள் எங்கே பறிபோகும்? அடுத்ததாகத் தனியார் மயம் என்கிறார்கள். பள்ளிக்கல்வி முற்றிலும் இலவசம் என எல்லா மாநில அரசுகளும் அறிவிக்கட்டும் யார் வேண்டாம் என்கிறார்கள்.

இலவசக் கல்வியை நானும் வலியுறுத்து கிறேன். மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டுமென்றில்லை. மாநில அரசுகளே அறிவிக்கலாம். ஆனால், எந்தக் கட்சியும்

அதைச் செய்யாது. ஏனென்றால், பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்களை நடத்துபவர்களே இப்போது மும்மொழிக்கொள்கை வேண்டாம் என்று சொல்கிற கட்சிக்காரர்கள்தாம்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும்?

புதிய கல்விக்கொள்கை... நன்மையா, தீமையா?

பி.ஜே.பி மாநில இளைஞரணி செயலாளர் ப்ரீத்தி லட்சுமி, “இந்தி மொழி அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழி. பெரும்பாலான மக்கள் உபயோகிக்கும் இந்தியைக் கற்பதால் இளைஞர்களுக்குக் கிடைக்கும் பயன்கள் ஏராளம். இளைஞர்கள் ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ளும்போது அவர்களது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மேலும், தொழில் மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமாக மாநிலங்களுக்கு இடையே சென்று வருவதற்கும் வசதியாக இருக்கும். அதேபோல, மத்திய அரசின் பணிகளில் சேர்வது சுலபமாக இருக்கும். இந்தியாவில் 43 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் பேசக்கூடிய மொழி இந்தி. அந்த நபர்களுடன், அவர்களின் உள்ளூர் மொழியில் தொடர்புகொள்ளமுடிந்தால் அது மாநிலங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் ஊக்கப்படுத்தும். தனியார் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ பிரிவு மாணவர்கள், இந்தி மொழியைக் (மூன்றாவது மொழி) கற்கும் சுதந்திரத்தைப் பெற்றுவிடுகிறார்கள். அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஏன் இந்த வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகிறார்.