Published:Updated:

‘நியூ நார்மல்’ தீபாவளியில் ‘புது மாதிரி’ கொண்டாட்டங்கள்!

‘நியூ நார்மல்’ தீபாவளி
பிரீமியம் ஸ்டோரி
‘நியூ நார்மல்’ தீபாவளி

பாதுகாப்பு

‘நியூ நார்மல்’ தீபாவளியில் ‘புது மாதிரி’ கொண்டாட்டங்கள்!

பாதுகாப்பு

Published:Updated:
‘நியூ நார்மல்’ தீபாவளி
பிரீமியம் ஸ்டோரி
‘நியூ நார்மல்’ தீபாவளி

அனுசுயா எம்.எஸ்

ண்ணுக்குத் தெரியாத நுண்கிருமி ஒன்று குறுகிய காலகட்டத்திற்குள் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் மிகப் பெரிது. கொரோனா அச்சம், ரேகை தேயும் அளவுக்குக் கழுவிய கைகள், முகத்தின் அங்கமாகிவிட்ட மாஸ்க் என நாம் பல மாற்றங்களுக்கு ஆளாகியிருக்கும் இந்த ‘நியூ நார்மல்’ காலகட்டத்தில் கொண்டாடப்படும் முதல் பெரிய பண்டிகை... தீபாவளி. வழக்கத்தைபோல் அல்லாமல் இந்த வருடம் ‘புது மாதிரி’யான கொண்டாட்டமாக அமையப்போகும் விஷயங்களைப் பார்ப்போம்.

கோயம்பேடு கூட்டம் குறையும்!

தீபாவளியின் முக்கிய அம்சம், கூடடையும் பறவைகள்போல பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது. இதனால் தீபாவளி விடுமுறைக்கு முந்தைய நாள்களில் மூச்சுத்திணறிப் போகும் சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம். கோயம்பேடு மட்டுமல்லாது, ஆம்னி பேருந்துகள் செல்லும் சென்னை சாலைகள் முழுக்கவே அப்போது ஊர்ந்துகொண்டுதான் இருக்கும். இந்த வருடம் லாக்டௌன் காரணங்களால் வேலையிழப்பு, மற்றும் பெரும்பாலான நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலைபார்த்துக்கொண்டிருப்பதால், கோயம்பேடு, சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களை ஸ்தம்பிக்கவைக்கும் கூட்டம் ஓரளவு குறையும் என்று எதிர்பார்க்கலாம். அது குறித்த செய்தியை டிவியில் பார்த்தபடி, ‘போன வருஷம் இந்நேரம்லாம் நானும் இந்தக் கூட்டத்துல’ என்று நாஸ்டால்ஜிக் கதை பேசப்போகிறார்கள் பலர்.

சமூக இடைவெளி வாழ்த்து!

‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பது பொருந்தாத இந்தச் சூழலில், ‘தீபாவளிக்கு அத்தை வீட்டுக்குப் பலகாரம் கொடுக்கப் போறேன்’, ‘தாத்தாகிட்ட ஆசீர்வாதம் வாங்கப் போறேன்’ என்று கிளம்புபவர்கள் எல்லாம் கொஞ்சம் பிரேக் போடுங்கள் ப்ளீஸ். குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், வயதானவர்கள் என இவர்களையெல்லாம் நீங்கள் ‘தீபாவளிக்கு பார்த்துட்டு’ வந்தபிறகு அவர்களுக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டால், அவர்களுக்கும் அவஸ்தை, உங்களுக்கும் சங்கடம். எனவே, சுற்றமும் நட்பும் சூழப் பண்டிகைகளைக் கொண்டாடிப் பழகியவர்கள், இம்முறை அதே சுற்றம், நட்பின் நலத்தை கருத்தில்கொண்டு அவரவர் வசிப்பிடத்திலேயே கொண்டாடுவோம் தீபாவளியை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சானிட்டைஸர் வெர்சஸ் பட்டாசு!

சானிட்டைஸரில் ஆல்கஹால் இருப்பதால் அது எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ள ஆபத்து பற்றி பலமுறை அறிவுறுத்தப்பட்டிருக்கிறோம். எனவே, சானிட்டைஸர் தடவியபடி பட்டாசு வெடிக்கச் செல்லாமல் இருப்பது, இந்த தீபாவளியில் ஒவ்வொரு குடும்பமும் மறக்காமல் கவனத்தில்கொள்ள வேண்டிய எச்சரிக்கை தகவல். எப்போதும் பட்டாசு போட்டுவிட்டுக் கை கழுவுவோம். ஆனால் இம்முறை சானிட்டைஸர் போகுமளவு கைகழுவிய பின்னரே பட்டாசு வெடிக்க வேண்டும் நோட் இட்!

 ‘நியூ நார்மல்’ தீபாவளியில் ‘புது மாதிரி’ கொண்டாட்டங்கள்!

வீடே கோயில்!

தீபாவளியன்று கோயிலுக்குச் செல்வது பலரின் வழக்கம். இந்த வருடம் அதை பரிசீலித்து, வீட்டிலேயே பிரார்த்தனைகளை முடித்துக்கொள்வோம். கோயிலுக்குச் சென்றேதான் ஆகவேண்டும் என்பவர்கள், கூட்டம் குறைவாக இருக்கும் நேரமாகப் பார்த்துச் செல்வது, தகுந்த சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சென்றுவருவது என்று திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

வீட்டிலேயே ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ!

தீபாவளி என்றாலே புதுப்பட ரிலீஸ் என்றிருந்த நிலையில் தமிழ் திரைப்பட ரசிகர்களின் தீபாவளி வரலாற்றில் முதன்முறையாக திரையரங்குகளில் டாப் ஸ்டார்களின் புதுப்பட ரிலீஸ் எதுவுமில்லாத தீபாவளி இது. என்றாலும், நயனும், சூர்யாவும் ஓ.டிடி வழியாக நம் வீட்டுக்கே வருகிறார்கள். பெரும்பாலான பெண்களுக்கு இன்றளவும் கிடைக்காத சந்தோஷம், ‘முதல் நாள் முதல் காட்சி’. லாக்டௌனில் பல படங்களும் ஓ.டி.டி-யிலேயே ரிலீஸ் ஆனதால், நாமும் பல FDFSக்களை பார்த்துவிட்டோம். அந்த வகையில் இந்த தீபாவளி நமக்கும் FDFS தீபாவளியாக இருக்கப்போகிறது. வழக்கமாக டிக்கெட்டுக்கு முண்டியடித்து, முன்பதிவு செய்து, தியேட்டரில் அமர்ந்து பாப்கார்னுடன் படங்களைப் பார்த்த நாம், இந்த வருடம் தீபாவளி பலகாரங்களைக் கொறித்தபடி வீட்டு சோஃபாவில் அமர்ந்தபடியே ஓ.டி.டி-யில் தீபாவளி ரிலீஸ் படங்களைப் பார்க்கப்போவது நிச்சயம் ஒரு புதுவித அனுபவமாக இருக்கப்போகிறதுதானே?!

ஹாப்பி நி.நா(அட, நியூ நார்மல்ங்க) தீபாவளி!