Published:Updated:

விற்பனை உலகை மாற்றும் பிசினஸ் மாடல்! - புதிய தொடர் - 1

ஃப்ரான்சைஸ் பிசினஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ரான்சைஸ் பிசினஸ்

ஃப்ரான்சைஸ் பிசினஸ்!

விற்பனை உலகை மாற்றும் பிசினஸ் மாடல்! - புதிய தொடர் - 1

ஃப்ரான்சைஸ் பிசினஸ்!

Published:Updated:
ஃப்ரான்சைஸ் பிசினஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ரான்சைஸ் பிசினஸ்

ன்றைய காலகட்டத்தில் ஒரு பொருளை எப்படி வாங்குகிறோம்..? அது என்ன பிராண்ட் என்பதை முதலில் பார்த்துவிட்டுப் பிறகு வாங்குகிறோம்.

குறிப்பிட்ட சில பிராண்ட் பொருள்களை மட்டுமே எல்லோரும் வாங்கினால், பிற பிராண்டுகளைத் தயாரிப்பவர்கள், புதிதாகத் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்ன செய்வார்கள்... சந்தையில் பல பொருள்களும் சேவைகளும் கொட்டிக்கிடக்கின்றன. இந்த நிலையில், புதிதாக ஒரு பிராண்டை உருவாக்கி, அதைச் சந்தைப்படுத்தி, பிரபலமாக்குவதற்குக் குறைந்தது சில ஆண்டுகளாவது ஆகும். அதுவரை பொறுமை காக்கப் பலருக்கும் விருப்பமிருப்பதில்லை.

ஐயப்பன் ராஜேந்திரன்
ஐயப்பன் ராஜேந்திரன்

ஒரு பிரபல நிறுவனம், தன் பொருளை அல்லது சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கும். ஆனால், அதன் கிளையை அனைத்து இடங்களுக்கும் நேரடியாகக் கொண்டு செல்ல முடியாது. அதற்கு வரையறுக்கப்பட்ட நிதி, மனிதவளம், குறைவான நேரம், ஆற்றல் எனப் பல விஷயங்கள் தடையாக இருக்கும். பற்பலப் பொருள்களும் சேவைகளும் போட்டி போட்டுக்கொண்டு மக்களின் கவனத்தைப் பெற்றிருக்கும் கடந்த பத்தாண்டுகளில், ஆர்வமுள்ள தொழில்முனைவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்த இரு பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வுதான். அது, `ஃப்ரான்சைஸ்’ என்னும் பிசினஸ் மாடல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃப்ரான்சைஸ் தொழில்கள் இந்தியச் சந்தையில் 35 பில்லியன் அமெரிக்க டாலர் பங்களிப்பை அளிக்கின்றன.

ஒரு வணிகத்தைத் தொடங்குவதற்கும், வெற்றிகரமாக ஓடும் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும் தனித்துவமான பாதையை இது வழங்குகிறது. உலக அளவில் நவீன வணிகத்தின் முக்கிய பிசினஸ் மாடலாகத் திகழும் ஃப்ரான்சைஸ் என்றால் என்ன, உலகிலேயே மக்கள்தொகை அதிகம்கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவில், அதுவும் இளைஞர்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டிருக்கும் இந்த வேளையில் ஃப்ரான்சைஸின் எதிர்காலம் என்ன போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை இந்தத் தொடரில் பார்ப்போம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஃப்ரான்சைஸ்

சந்தைப்படுத்தப் பட்ட பிராண்டான ஒரு பொருள் அல்லது சேவையைக்கொண்ட நிறுவனம், தன் தொழிலை தன் பெயரி லேயே நடத்துவதற் கான உரிமத்தை ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு வழங்குகிறது. அந்த உரிமத்தின் பெயர்தான் `ஃப்ரான்சைஸ்.’ அதை வழங்குபவர் `ஃப்ரான்சைஸர்’ (Franchisor) என்றும், பெறுபவர் `ஃப்ரான்சைஸி’ (Franchisee) என்றும் அழைக்கப்படு கிறார்கள். அதாவது, ஃப்ரான்சைஸர் தொழிலுக்கென சில அடிப்படைத் தேவைகளான விளம்பரம், லைசென்ஸ், இயந்திரம் போன்றவை அனைத்தையும் தந்துவிடுவார். இந்த ஐடியாக்களைப் பெற்று, தொழில் நடத்துபவர்தான் ஃப்ரான்சைஸி. இவர் முதலீடு மட்டுமே செய்வார்.

விற்பனை உலகை மாற்றும் பிசினஸ் மாடல்! - புதிய தொடர் - 1

மேலும், இருவருக்கும் இடையில் தொழிலின் காலஅளவு, என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பது போன்ற தகவல்களுடனான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்படும்.

பிராண்டுக்கு முதல் மரியாதை!

ஃப்ரான்சைஸில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், பிராண்ட். எந்த பிராண்ட் மக்களிடம் பிரபலமாக இருக்கிறது, எது மிக எளிமையாக அவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கப்படுகிறது, ஒரு பிராண்டுக்கு விளம்பரம் எந்த அளவுக்கு செய்யப்படுகிறது, வாடிக்கையாளர்களின் ரசனை மற்றும் தேவை என்னென்ன, ஃப்ரான்சைஸ் தொழில் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் ஆகியவற்றைப் பொறுத்து, நாம் ஃப்ரான்சைஸ் பெற வேண்டிய பிராண்டை முடிவு செய்யலாம்.

உலக அளவில் ஃப்ரான்சைஸ் பிசினஸ்

உலகப் பொருளா தாரத்தில் ஃப்ரான்சை ஸின் பங்களிப்பு நான்கு டிரில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.280 லட்சம் கோடி); அமெரிக்கா வில் மட்டும் ஏறத்தாழ 450 பில்லியன் டாலர். அங்கு மட்டும் சுமார் 80 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது ஃப்ரான்சைஸ் தொழில். உலக அளவில் எட்டு லட்சம் ஃப்ரான்சைஸ்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

ஃப்ரான்சைஸ், அமெரிக்கப் பொருளாதாரத்தில் கணிசமான பங்குவகிக்கிறது. அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு ஃப்ரான்சைஸ் மூலம் கிடைக்கிறது. 300-க்கும் மேற்பட்ட பொருள்களும் சேவைகளும் அமெரிக்காவில் ஃப்ரான்சைஸாக வழங்கப்படுகின்றன. நமக்குப் பரிச்சயமான பிராண்ட்டுகளான மெக் டொனால்ட்ஸ், கே.எஃப்.சி., சப்வே ஆகிய மூன்று நிறு வனங்களை மட்டும் எடுத்துக் கொண்டாலே, உலகம் முழுவதிலும் அவற்றுக்காக ஒரு லட்சம் ஃப்ரான்சைஸ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவில் ஃப்ரான்சைஸ்

இந்தியாவில் மட்டும் 850-க்கும் அதிகமான சப்வே ஃப்ரான்சைஸ்கள் இயங்குகின்றன. இவை மூன்று முக்கியமான பிராண்டுகள் பற்றிய தகவல்கள் மட்டுமே. இவை தவிர, பல பிரபலமான பிராண்டுகள் உலகெங்கிலும் கிளை பரப்பியிருக்கின்றன.

ஃப்ரான்சைஸ் பிசினஸ்
ஃப்ரான்சைஸ் பிசினஸ்

ஃப்ரான்சைஸ் மட்டும் இந்தியச் சந்தையில் ஏறத்தாழ 35 பில்லியன் அமெரிக்க டாலர் பங்களிப்பை அளிக்கிறது. சுமார் 4,500-க்கும் மேற்பட்ட பிராண்டுகளின் ஃப்ரான்சைஸ் இந்தியாவில் கிடைக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை உணவு மற்றும் பானம், சில்லறை வியாபாரம், கல்வி, ஆட்டோமொபைல், மருத்துவம், தொழில்துறை, விளையாட்டு, பொழுதுபோக்கு ஆகிய துறைகளைச் சார்ந்தவை. இந்தியாவில் இயங்கும் ஃப்ரான்சைஸ்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 1,80,000 முதல் 2,00,000. இங்கு மட்டும் குறைந்தது 10 லட்சம் வேலை வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது; இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஃப்ரான்சைஸின் பங்களிப்பு தோராயமாக 2% இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இயங்கும் ஃப்ரான்சைஸின் எண்ணிக்கை ஏறத்தாழ 1,80,000 முதல் 2,00,000. இங்கு மட்டும் குறைந்தது 10 லட்சம் வேலை வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஃப்ரான்சைஸின் எதிர்காலம்

இன்று தலை சீவும் சீப்பிலிருந்து அழகு சாதனப் பொருள்கள், உணவுப் பொருள்கள், ஆடைகள், காலணிகள் அனைத்துமே பிராண்ட்-ஆகப் பெரும்பாலான இடங்களில் கிடைக்கின்றன. அதற்குக் காரணம், ஃப்ரான் சைஸ். ஃப்ரான்சைஸில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலைக்கு வளர்ந்து வருகிறது இந்தியா. ஆண்டொன்றுக்கு குறைந்தது 30% வளர்கிறது. இதனால் இந்திய மக்கள்தொகை, நம் மக்களின் வயது வரம்பு, அவர்கள் விரும்பும் விஷயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவிலுள்ள பல நிறுவனங்களும் இங்கு ஃப்ரான்சைஸ் வழங்க முன்வருகிறார்கள்.

`உணவு, உடை, வாங்கும் பொருள்கள் என அனைத்திலுமே மேற்கத்திய சாயல் இருக்க வேண்டும்’ என்று நினைப்பவர்கள் இந்தியாவில் ஏராளம். அவர்களை மையப்படுத்தியே பல பொருள்களின் ஃப்ரான்சைஸ் கொடுக்கப்படு கிறது. அதிவேகமாக மாறிவரும் வாழ்க்கைமுறை யும், தொழில்நுட்ப வளர்ச்சியும், ஃப்ரான்சைஸின் தேவையை அதிகப் படுத்தியிருக்கிறது. ஃப்ரான்சைஸ் வழங்குவதில் என்னென்ன முறைகள் பின்பற்றப்படுகின்றன? அடுத்த இதழில் பார்ப்போம்.

(ஜெயிப்போம்)

- ஐயப்பன் ராஜேந்திரன், நிறுவனர், Stargazer Francais Consulting Services

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism