Published:Updated:

புதிய வரி நிவாரணத் திட்டம்... ஏற்றுமதியை அதிகரிக்குமா? - ஏற்றுமதியாளர்களுக்கு என்ன சாதகம்..?

ஏற்றுமதி
பிரீமியம் ஸ்டோரி
News
ஏற்றுமதி

EXPORT

ற்றுமதியாளர்களுக்கான புதிய சலுகைத் திட்டத்தை (RoDTEP - Remission of Duties and Taxes on Exported Products) 01.01.2021 முதல் மத்திய அரசின் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தப் புதிய திட்டம் யாருக்கெல்லாம் பயன் தரும் என்று பார்ப்போம்.

வரி நிவாரணத் திட்டத்தின் அவசியம்...

இதுவரை நடைமுறையில் இருந்த MEIS (Merchandise Exports from India Scheme) அதாவது, ஏற்றுமதிப் பொருள் களுக்கான ஊக்கத் திட்டம், பன்னாட்டு வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிரானது என்று அமெரிக்க அரசு, சர்வதேச வர்த்தக அமைப்பிடம் (World Trade Organization) புகார் வழங்கியது.

அமெரிக்க அரசின் புகாரை விசாரித்த சர்வதேச வர்த்தக அமைப்பு, இந்தியாவின் ஏற்றுமதி சலுகைத் திட்டம், பன்னாட்டு வர்த்தக நெறிமுறைகளுக்கு புறம் பானது என அக்டோபர் 2019-ல் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பால் இந்திய ஏற்றுமதியாளர்கள் பெருமளவு பாதிக்கப்படும் அபாயம் எழவே, பன்னாட்டு வர்த்தக விதி முறைகளுக்கு உட்பட்ட வகையிலான ஏற்றுமதி வரி நிவாரணத் திட்டத்தை தற்போது மத்திய அரசு அறிமுகப் படுத்தியுள்ளது.

ஏற்றுமதி
ஏற்றுமதி

திட்டத்தின் சிறப்பம்சங்கள்..!

முந்தைய திட்டத்தில, ஏற்றுமதிப் பொருள்களை உற்பத்தி செய்யத் தேவைப்படும் மூலப் பொருள்களின் மீதான ஜி.எஸ்.டி வரி, இறக்குமதி வரி ஆகியவை மட்டுமே தள்ளுபடி செய்யப்படுகின்றன அல்லது ஏற்றுமதியாளருக்கே திரும்ப வழங்கப் பட்டு வந்தன. ஆனால், ஜி.எஸ்.டி வரையறைக்குள் வராத வாட் (பெட்ரோலிய பொருள்கள்), மின்சாரம் மீதான வரி, கிடங்கு வரி, உள்ளூர் வரிகள் போன்றவை ஏற்றுமதியாளர்களுக்குத் திரும்ப வழங்கப்படுவதில்லை. ஆனால், புதிய வரி நிவாரணத் திட்டத்தின்கீழ், ஏற்றுமதி செய்வதற்கு முன் செலுத்தப் படும் அனைத்து வகையான வரிகளும் புதிய திட்டத்தில் சலுகை பெற தகுதி யானவையாகக் கொள்ளப்படும்.

புதிய வரி நிவாரணத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளின் அளவு மற்றும் முன்னுரிமை பெறும் துறைகள் ஆகியவை ஜி.கே.பிள்ளை தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைகள் அடிப் படையில் நிர்ணயிக்கப்படும்.

ஏற்றுமதியாளர்களுக்கான வரி நிவாரணம், மின்னணு வடிவில் சுங்கத்துறை பேரேட்டில் (Customs Ledger) பராமரிக்கப்படும். ஏற்றுமதி யாளர்கள் தாங்கள் இறக்குமதி செய்யும் பொருள்களின் மீதான சுங்க வரி விலக்குக்கு, மத்திய அரசின் வரி நிவாரண சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தமக்கு தேவைப் படாதபோது, பிற இறக்குமதியாளர் களுக்கு மின்னணு வடிவில் பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.

முந்தைய ஏற்றுமதி சலுகைத் திட்டத்தில் (MEIS), உள்ளூர் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்கும் தொழில்துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டதுபோல தற்போதும் வழங்கப்படுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ஏற்றுமதியைப் பெருக்குவோம்...

ஒரு நாட்டின் துரிதமான பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதி எந்தளவுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதற்கு சீனா ஒரு மிகச் சிறந்த உதாரணம். இந்தியாவிலும், எப்போதெல்லாம் ஏற்றுமதி சிறப்பாக இருந்திருக்கிறதோ, அப்போதெல்லாம் நம் பொருளாதாரம் வெகு வேகமான வளர்ச்சியையே கண்டிருக்கிறது.

ஏற்றுமதி சந்தையில் வியட்நாம், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் கடும் போட்டி, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்து வருவது, கொரோனா காரணமாக மேற்கத்திய நாடுகளில் விதிக்கப்படும் கட்டுப் பாடுகள் என நெருக்கடிகளால் திணறிவரும் இந்திய ஏற்றுமதியாளர் களுக்கு உரிய உதவிகள் கிடைக்கும் பட்சத்தில் சர்வதேச சந்தையில் இந்தியாவின் கை ஓங்கியிருக்கும் என்பதுடன் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்!