Published:Updated:

STOP போ, வராதே புகையே!

நியூஸிலாந்து
பிரீமியம் ஸ்டோரி
நியூஸிலாந்து

நியூஸிலாந்து

STOP போ, வராதே புகையே!

நியூஸிலாந்து

Published:Updated:
நியூஸிலாந்து
பிரீமியம் ஸ்டோரி
நியூஸிலாந்து

‘புகைபிடித்தல் உடல்நலனுக்குத் தீங்கானது’ என்று சிகரெட் பாக்கெட்டுகளில் அச்சிடுவது, லொக் லொக் என இருமியபடி திரைப்படங்களில் விளம்பரம் செய்வது - இவற்றையெல்லாம் தாண்டியிருக்கிறது நியூஸிலாந்து.

1970களில் மூன்றில் ஒரு நியூஸிலாண்டருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது. 90களின் பிற்பகுதியில் கிரிக்கெட் போட்டிகள், F1 போட்டிகள் என எல்லாவற்றிலும் பளிச்சிட்டன சிகரெட் பிராண்டுகள். ஆனால், அதன்பின் நியூஸிலாந்து கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை மாற்றிக்கொள்ளத் தொடங்கியது. Smoke-free Environments Act என்பதை இயற்றி விளம்பரங்கள், விற்பனைக்கூடங்களில் விளம்பரப்படுத்துவது, விளையாட்டுப் போட்டிகளில் ஸ்பான்ஸர்ஷிப், பிராண்டிங் என எல்லாவற்றிலும் சிகரெட் கம்பெனிகளுக்குத் தடை விதித்தது. விமான நிலையங்கள், பார், ஹோட்டல்கள் என எங்கும் தடா எதிலும் தடா தான்.. சிகரெட் பாக்கெட்டின் மூன்று பக்கத்திலும் எச்சரிக்கை வாசகங்கள் இருக்கும். 2010ல் சிகரெட் விலையில் 70% வெறும் வரிகள்தான். 2016க்கு பின்னர் இதை ஒவ்வொரு ஆண்டுக்கும் பத்து சதவிகிதம் அதிகப்படுத்த வேண்டும் என முடிவெடுத்தது நியூஸி அரசு. தற்போது 15-17 வயது வரை இப்பழக்கம் உள்ளவர்கள் 3% தான். 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த எண்ணிக்கை 83%. நியுசிலாந்திலிருக்கும் 8 லட்ச மௌரி இன மக்களில் 38.6% பேர் புகைப்பழக்கத்துக்கு அடிமையாக இருக்கிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு 2025 டார்கெட் நோக்கி அடியெடுத்து வைத்திருக்கிறது.

STOP போ, வராதே புகையே!

2022ம் ஆண்டு அமைச்சரவையில் சில தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளது. புகையிலைப் பொருட்களில் நிகோட்டினை குறைப்பது, சிகரெட்டுகள் கிடைக்கும் இடங்களைக் குறைப்பது ( தற்போது 5000 கடைகள் மட்டுமே அதற்கான லைசன்ஸ் வைத்திருக்கின்றன) என பலவற்றை பட்டியலிட்டு வருகிறார்கள். அதில் முக்கியமானது தான் 2004ம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்களுக்கு புகையிலைப் பொருட்கள் தடை என்பது.

50 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு குட்டி தேசத்தில் எல்லாமே சாத்தியம்தான் என நாம் சால்ஜாப்பு சொல்ல முடியும். ஆனால், சாம்பல் மேடுகளையும் சூழும் புகை மண்டலங்களையும் தாண்டியும் ஒரு தேசம் நிறைய மெனக்கெட வேண்டியதிருக்கிறது என்பது மட்டும் நிதர்சனம்.