Published:Updated:

விழுப்புரம்:ரூ.51,000 கொரோனா நிவாரண நிதி!-மணக்கோலத்தில் அமைச்சரைச் சந்தித்து வழங்கிய புதுமணத் தம்பதி

அமைச்சரிடம் கொரோனா நிவாரண நிதி கொடுத்த தம்பதி
அமைச்சரிடம் கொரோனா நிவாரண நிதி கொடுத்த தம்பதி ( தே.சிலம்பரசன். )

கொரோனா பொது நிவாரண நிதிக்கு, பலரும் பல வகையில் உதவித்தொகை கொடுத்துவருகின்றனர். அந்த வரிசையில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதியர் மணக்கோலத்தில், அமைச்சர் பொன்முடியைச் சந்தித்து 51,000 ரூபாய் நிவாரண நிதி கொடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவரின் மகன் ஹரிபாஸ்கர் (எ) தினேஷ். இவர் பத்தர் தொழில் செய்துவருகிறார். இவருக்கும் மணலூர்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவருடைய மகள் சாருமதிக்கும், இந்த மாதம் (மே) 17-ம் தேதி திருமணம் செய்யவிருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையி, கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை பரவல் அதிகரித்துவருவதால், தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது அரசு.

அமைச்சருடன் புதுமணத் தம்பதி
அமைச்சருடன் புதுமணத் தம்பதி

அதன்படி, நெருங்கிய உறவினர்களுடன் திருக்கோவிலூர் அருகேயுள்ள கோயிலில் ஹரிபாஸ்கர் - சாருமதி திருமணம் நேற்று (17.05.2021) நடைபெற்று முடிந்துள்ளது. திருமணம் முடிந்த கையோடு குலதெய்வக் கோவிலுக்கு சென்றுள்ளனர். செல்லும் வழியில், வீட்டிலுள்ள பெரியவர்களின் ஆலோசனைப்படி திருமணத்துக்காகச் சேமித்துவைத்திருந்த 51,000 ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்காகக் கொடுக்கலாம் என முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியை அவரது இல்லத்தில் சந்தித்த இந்தப் புதுமணத் தம்பதி, 51,000 ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்குப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கொடுத்துள்ளனர்.

`மறைந்த எழுத்தாளர் கி.ரா-வுக்கு கோவில்பட்டியில் சிலை அமைக்கப்படும்!’- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு #NowAtVikatan

நிதியைப் பெற்றுககொண்ட அமைச்சர் பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி இருவரும் மணமக்களை வாழ்த்தி அனுப்பியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு