சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

நியூஸ் காக்டெயில்

நியூஸ் காக்டெயில்
பிரீமியம் ஸ்டோரி
News
நியூஸ் காக்டெயில்

மதுரையைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் செயல் அவரது பெரும் பறவைநேயத்தையும், சூழலியல் பாடத்தையும் நமக்குக் கற்பிக்கிறது

நியூஸ் காக்டெயில்

லைப்பிரதேசங்கள்மீது நம் மக்கள் கொண்ட காதல் அளவிடமுடியாதது. ஆறு மாதங்கள் வீட்டிற்குள் அடைபட்டிருந்தவர்கள், முழு ஊரடங்கு ரத்தானதும் இதான் சான்ஸ் என சுற்றுலா கிளம்பிவிட்டார்கள். சமீபத்திய ஊரடங்குத் தளர்வுகளின்படி நீலகிரி மாவட்டம், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு, வெளியூர் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெற்றுச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியானதிலிருந்து மலை வாசஸ்தலங்களுக்குப் படையெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். ஊட்டியில் விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் அனுமதி கிடைத்துவிடுவதால், ஏராளமானோர் குவிகிறார்கள். இதனால் கொரோனாத் தொற்று அதிகரிக்கும் என அச்சத்தில் இருக்கிறார்கள் அம்மாவட்ட வாசிகள். ஏற்காட்டு மலைக்கு வெளி மாவட்டத்திலிருந்து இ-பாஸ் இல்லாமல் வந்தவர்கள் காவல் துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். “ஹலோ மக்களே, ஊரடங்குதான் இல்லை; கொரோனா அப்படியேதான் இருக்கு. கவனம் ப்ளீஸ்!”

று மாதங்கள் நீண்ட ஊரடங்கில், நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, வன்முறை, விபத்துபோன்ற துர்நிகழ்வுகளை சற்று தேக்கி வைத்திருந்தது. தற்போது ஊரடங்குத் தளர்வும், நிலையற்ற சூழலும், தொடரும் பொருளாதாரச் சிக்கலும் மக்களைக் கடும் அழுத்தத்தில் தள்ளியிருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் திடீரென பலர் வீடுகளின் கேட்களில் வித்தியாசமான வேற்றுமொழிக் குறியீடுகள் தென்பட, குழம்பியிருக்கிறார்கள் மக்கள். விசாரணையில் அவை பிரெஞ்சு மொழியிலான குறியீடுகள் என்றும், `வயதானவர்கள் உள்ள வீடு, இங்கு ஒண்ணும் தேறாது’, `நல்ல பணக்கார வீடு’ என்பதைச் சொல்லும் குறியீடுகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. திருடர்கள் ஜாக்கிரதை!

நியூஸ் காக்டெயில்

றவைகள்மீது அக்கறை காட்டுபவர்களே குறைவு. அதுவும் அவற்றால் நஷ்டம் ஏற்படும் என்றால் அவற்றை எப்படித் தவிர்க்கலாம், துரத்தலாம் என்றே யோசிப்போம். ஆனால், மதுரையைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் செயல் அவரது பெரும் பறவைநேயத்தையும், சூழலியல் பாடத்தையும் நமக்குக் கற்பிக்கிறது. மதுரை அருகே இருக்கும் வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாண்டி. தென்னைச் சாகுபாடி செய்துவந்தவர் தண்ணீர் இல்லாததால் மரங்களை வெட்டிவிட்டு வேறு சாகுடி செய்யலாம் என நினைத்தார். அதற்காக மரத்தை வெட்டியபோதுதான் அதில் கிளிகள் வாழ்ந்து வருவதை அறிந்தார். மரங்களை வெட்டிவிட்டால் அவை என்ன செய்யும் என யோசித்தவர், மரங்கள் தாமாகப் பட்டுப்போய் விழும்வரை காத்திருப்பதென முடிவு செய்தார். கிளிகளுக்காகத் தன் வருமானத்தையே விட்டுத்தந்த பாண்டியின் மனசு அப்பகுதி மக்களை நெகிழச் செய்திருக்கிறது. சிறு ஜீவனின் நன்மை கருதி, அன்பை அறுவடை செய்த பாண்டிக்கு நம் அன்பும் வணக்கங்களும்!

நியூஸ் காக்டெயில்

ண்டைய தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகள் இன்றளவும் நம்மை ஆச்சர்யப்படுத்துபவை. ஒருபுறம் கீழடி எனும் வரலாற்றுப் பொக்கிஷம் கொட்டிக்கிடக்க, தமிழகத்தின் மற்ற பல இடங்களிலும் பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளன. அதுவும் சங்கம் வளர்த்த மதுரை மண்ணிலே இந்த வரலாற்றுச்சான்றுகளுக்குப் பஞ்சம் இருப்பதில்லை. சமீபத்தில், மதுரை மாவட்டம் கிண்ணிமங்கலத்தில் உள்ள ஒரு கோயிலில் கி.பி முதலாம் நூற்றாண்டு, கி.பி 7-8 ஆம் நூற்றாண்டு, கி.பி 1,722 ஆம் ஆண்டு என வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. இதேபோல கடந்த வாரம் மதுரை வடக்குமாசி வீதியில் கால்வாய் தோண்டக் குழிதோண்டிய போது 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குலசேகர பாண்டிய மன்னர் ஆட்சிக்காலக் கல்வெட்டு எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாமதுரை!

நியூஸ் காக்டெயில்

கொரோனா ஊரடங்குக்குப் பின் சட்டமன்றக் கூட்டத்தொடர் இந்த வாரம்தான் நடக்கிறது. இதற்காக ஸ்பெஷல் ஏற்பாடுகளைத் தமிழக அரசு செய்திருந்தது. வழக்கமாக கூட்டத்தொடர் நடக்குமிடத்தில் சமூக இடைவெளி சாத்தியமில்லை என்பதால் கலைவாணர் அரங்கில் கூட்டம் நடத்தத் திட்டமிட்டார்கள். அரசு, இந்த ஏற்பாடு செய்யும்போது எம்.எல்.ஏ-க்களும் அவர்கள் பங்குக்கு செய்வார்கள் இல்லையா? அதில் பர்ஸ்ட் ரேங்க் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்குத்தான். கூட்டத்தொடருக்காக விமானத்தில் சென்னை வந்தவர், மற்ற பயணிகளைவிடவும் பாதுகாப்பாக இருந்தார். முழுக் கவச உடையணிந்து அவர் ப்ளைட்டில் வந்த படங்கள் நெட்டிசன்களின் சென்ற வார வைரல் கோட்டா. இப்படி எல்லோரும் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே கொரோனாவை வெல்ல முடியும்.