Published:Updated:

நியூஸ் காக்டெயில்

நியூஸ் காக்டெயில்
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் காக்டெயில்

காவல் துறையின ருக்கு சுதந்திரதின விழாவில் விருதுகள் தந்த திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்.

நியூஸ் காக்டெயில்

காவல் துறையின ருக்கு சுதந்திரதின விழாவில் விருதுகள் தந்த திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்.

Published:Updated:
நியூஸ் காக்டெயில்
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் காக்டெயில்
மகேஸ்வரி
மகேஸ்வரி

ந்தச் சுதந்திரதின விழாவில் இரண்டு பெண்கள் கவனிக்கவைத்திருக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. திருநெல்வேலி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிகிறார். சுதந்திரதினத்துக்கு முதல்நாள் இவரது தந்தை, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் இறந்துவிட்டார். ஆனாலும் மறுநாள் சுதந்திரதின அணிவகுப்பில் கலந்துகொண்ட மகேஸ்வரியைப் பார்த்து சக பணியாளர்களே திகைத்துப்போனார்கள். சுதந்திரதின விழா முடிந்தபிறகே, கனத்த மனதுடன் தன் தந்தையின் சடலம் காண புறப்பட்டுச் சென்றார்ர் மகேஸ்வரி. துணிச்சலுக்கும் அர்ப்பணிப்புணர்வுக்கும் உதாரணமாய் விளங்கும் இன்னொரு பெண் அதிகாரி அல்லிராணி. திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிகிறார். அங்குள்ள ஏரிப்பட்டு என்னும் கிராமத்தில் அமாவாசை என்பவர் மின்வேலியில் சிக்கி இறந்தார்.

அல்லி ராணி
அல்லி ராணி

ஆனால் அவர் கொரோனாவால் இறந்ததாக யாரும் அவர் உடலைத் தூக்க முன்வரவில்லை. அல்லிராணியே களத்தில் இறங்கி அவர் உடலைச் சுமந்திருக்கிறார். காவல் துறையின ருக்கு சுதந்திரதின விழாவில் விருதுகள் தந்த திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர், அல்லிராணிக்குக் கொடுத்தபோது அவரைத் தன் இடத்தில் நிற்கச்செய்து, கீழே இறங்கி சல்யூட் அடித்திருக்கிறார். சிங்கப்பெண்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நியூஸ் காக்டெயில்

"எங்களிடம் அபிஷியலாக சொல்லிவிட்டுதான் ஓய்வை அறிவித்தார் தோனி. ஆனால், ரெய்னா பொதுவெளியில் பகிர்ந்தபிறகே எங்களுக்கு அவர் எடுத்த முடிவு தெரிய வந்தது. இந்தியாவின் மிக சிறப்பான வீரர்கள் இருவர் ஓய்வு பெற்றுவிட்டனர்!" என்று சொல்லியிருக்கிறது பிசிசிஐ. ரெய்னா இந்த முடிவை எப்படி எடுத்தார்? "சென்னை வந்ததும் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்பது எனக்குத் தெரியும். அதனால் நானும் தயாராகவே இருந்தேன். சென்னை வருவதற்கு முன் நான், சாவ்லா, தீபக் சாஹர், கரண் ஷர்மா நான்கு பேரும் ராஞ்சிக்கு சென்றோம். அப்போதே அவர் முடிவைச் சொன்னார். எங்களுக்கு முன்பே பிசிசிஐ-யிடம் சொல்லிவிட்டார். ஆனால், நான் எப்போதென்று சொல்லவில்லை. சென்னை வந்ததும் 15-ம் தேதியை செண்டிமென்ட்டாக ஃபிக்ஸ் செய்தோம். எங்களது ஓய்வைச் சொன்னதும் ஆரத் தழுவி ரொம்ப நேரம் அழுதோம். அதன்பிறகு நாங்கள் இருவரும் பியூஷ், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், கரண் எல்லோரும் பார்ட்டி பண்ணினோம்!" என்கிறார். "எல்லாம் சரி சின்னத்தல...ஏன் ஆகஸ்ட் 15?" என்று கேட்டால், "எனக்குப் பிடித்த மனிதர் தோனி. அவரது ஜெர்சி எண் 7... எனது ஜெர்சி என் 3... இரண்டையும் சேர்த்தால் 73 வரும். இந்தியா சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் நேரத்தைவிட சிறந்த நேரம் இனி கிடைக்காது என நினைத்தோம். இந்நாளில் ஓய்வினை அறிவித்தால் ஓய்வுக்கே ஒரு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதால் எடுக்கப்பட்ட முடிவு." என்கிறார் ரெய்னா.தல எவ்வழியோ சின்ன தல அவ்வழி!

நியூஸ் காக்டெயில்

லக வல்லரசு நாடான அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறாரே தங்கள் ஊர் வாரிசு என்று மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் பைங்காநாடு கிராம மக்கள். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அருகிலிருக்கும் அந்த ஊரில் இப்போது எல்லா திசைகளிலும் கமலா ஹாரிஸின் வாழ்த்து பேனர்கள் தான்!

நியூஸ் காக்டெயில்

“90 வருஷத்துக்கு முன்னாடி இங்கேதான் அவங்க குடும்பம் வாழ்ந்திருக்கு. இப்ப, உலகமே திரும்பி பார்க்கக்கூடிய ஒரு முக்கிய பதவிக்கு போட்டியிடக்கூடிய அளவுக்கு வளர்ந்திருக்காங்கனு நினைக்குறப்ப, எங்களோட சந்தோஷத்துக்கு அளவே இல்லை.”

நெகிழ்ச்சி நிறைந்த வார்த்தைகளை உதிர்க்கும் இம்மக்கள், கமலா ஹாரிஸ் வெற்றிபெற கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்து வருகிறார்கள். அந்த மனசு இருக்கே..!