Published:Updated:

நியூஸ் காக்டெயில்

வடிவேல்
பிரீமியம் ஸ்டோரி
வடிவேல்

இன்னும் கொஞ்ச நாள்களில் பா.ஜ.க-வின் தமிழக திரைக்கலைஞர்கள் பிரிவு என ஒரு தனித் பிரிவை உருவாக்கிவிடலாம் போல...

நியூஸ் காக்டெயில்

இன்னும் கொஞ்ச நாள்களில் பா.ஜ.க-வின் தமிழக திரைக்கலைஞர்கள் பிரிவு என ஒரு தனித் பிரிவை உருவாக்கிவிடலாம் போல...

Published:Updated:
வடிவேல்
பிரீமியம் ஸ்டோரி
வடிவேல்
நியூஸ் காக்டெயில்

ஹோட்டலில் பார்சல் உணவு இல்லையென்றால் இன்று பல இளைஞர்கள் பட்டினிதான். பேக் செய்யப்பட்ட உணவில் உருவாகும் பாக்டீரியாக்கள் உடல்நலனை பாதிக்கின்றன. பிளாஸ்டிக் பொருள்களில் பேக் செய்யப்படுவதால் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாகின்றன. இந்த இரண்டிற்கும் தீர்வு கண்டிருக்கிறார்கள் சென்னை ஐஐடி மாணவர்கள். இவர்கள் கண்டுபிடித்திருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு உணவுத்தாள்கள், பேக்கிங் செய்யப்பட்ட உணவுப்பொருள்களில் பாக்டீரியாக்கள் உருவாவதைத் தடுக்கின்றன. இதனால் விரைவாக உணவுபொருள்கள் கெட்டுப்போவதைத் தடுக்க முடியும். இந்த உணவுத்தாள் பயன்பாட்டினால் பிளாஸ்டிக் பயன்பாடும் குறையும். திடக்கழிவு மற்றும் உணவு மாசுபாடு ஆகிய இரு பிரச்னைகளுக்கும் ஒரே நேரத்தில் தீர்வு கண்டிருக்கிறார்கள் மாணவர்கள். சபாஷ் பாய்ஸ்!

நியூஸ் காக்டெயில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ன்னும் கொஞ்ச நாள்களில் பா.ஜ.க-வின் தமிழக திரைக்கலைஞர்கள் பிரிவு என ஒரு தனித் பிரிவை உருவாக்கிவிடலாம் போல... அந்த அளவுக்கு தற்போதைய தமிழக பா.ஜ.க-வின் பல முகங்கள் தமிழ்த் திரையுலகம் தந்தவை. குஷ்பு எனும் ஜாக்பாட் அடித்த குஷியில் இருக்கும் தமிழக பா.ஜ.க அடுத்து குறிவைத்திருப்பது மீம்ஸ் மன்னன், வைகைப்புயல் நடிகர் வடிவேலுவை. ‘பா.ஜ.க தரப்பிலிருந்து அவரை அணுகியிருப்பது உண்மை, ஆனால் வடிவேல் தரப்பில் இன்னும் பதில் அளிக்கப்படவில்லை’ என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். வடிவேலு மீம்ஸில் 80% பா.ஜ.க-வைக் கலாய்த்ததுதான்!

நியூஸ் காக்டெயில்

லகம் மீண்டு இயல்பில் இயங்க கோவிட்-19 நோய்த்தொற்றுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது ஒன்றே வழி. பல்வேறு நாடுகளும் ஆராய்ச்சியாளர்களும் அந்த முயற்சியில் இருக்கிறார்கள். தமிழ்நாடு மட்டும் சளைத்ததா என்ன? டாக்டர் எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையம் கொரோனாத் தடுப்பு மருந்து சோதனையைச் செய்துவருகிறது. ஜூன் மாதம் தொடங்கப்பட்ட முதற்கட்ட சோதனைகள் முடிக்கப்பட்டு அதன் ஆய்வறிக்கை இந்திய மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ஐ.சி.எம்.ஆர்) அனுப்பப்பட்டது. அதை ஆய்வு செய்த ஐ.சி.எம்.ஆர், முதற்கட்டமாக இந்த மருந்தை விலங்குகளிடம் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியிருக்கிறது. தேர்தல் வர்றதுக்குள்ள வந்திடுமா?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் இருந்தும், சிலர் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. அப்படி, பாதாள சாக்கடைக் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் நால்வரை மீட்க ஐந்துக்கும் மேற்பட்ட துறைகளில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் படையெடுத்த அதிரடி சம்பவம் விருதுநகரில் நடைபெற்றுள்ளது. விருதுநகரில் நகராட்சி சார்பாக பாதாள சாக்கடைப் பராமரிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்கான ஒப்பந்தத்தைப் பெரிய வள்ளிகுளத்தைச் சேர்ந்த வனராஜன் என்பவர் பெற்றார். இவர், சட்டத்திற்குப் புறம்பாக வெள்ளாகுளம் அரசுப் பள்ளியில் பயிலும் 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்கள் நால்வரை பாதாள சாக்கடைப் பணியில் ஈடுபடுத்துவதாக அதிகாரிகளுக்குப் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மாணவர்களை மீட்டுள்ளனர். ஒப்பந்ததாரர் வனராஜன் தலைமறைவாக, போலீசார் அவரைத் தேடிவருகிறார்கள். அதிகாரிகளுக்கு சல்யூட்!

நியூஸ் காக்டெயில்

விளையாட்டு சில சமயங்களில் விபரீதமாவது உண்டு. சமீபத்தில் ரம்மி விளையாடி பல லட்சங்களைத் தொலைத்து, அதனால் தற்கொலை செய்துகொண்ட நபரின் கதை கண்ணீரை வரவழைத்தது. அதற்குள் அடுத்த செய்தி, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 70 வயது மருத்துவரை, அவருக்கு கேட்ஜெட்ஸ் பயன்படுத்த உதவியாக இருந்த சிறுவன் ஏமாற்றியிருக்கிறான். அவரது கிரெடிட் கார்டு விவரங்களைத் திருடி, பப்ஜி விளையாட பிரீமியம் பேக், புது போன் என ஒரு வருடத்தில் 7.5 லட்சம் செலவழித்திருக்கிறான். பிடிபட்ட சிறுவனை, அவன் எதிர்காலத்தை மனதில் வைத்து மன்னித்திருக்கிறார் மருத்துவர். ஆனால் இன்னும் பலரின் எதிர்காலம் ஆன்லைன் விளையாட்டுகளால் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. விழித்துக்கொள்ளுங்கள்!