Published:Updated:

நீலகிரி: `தேசியக் கொடி ஏற்றிய தூய்மை பணியாளர்‌!’ - 2வது ஆண்டாக எளிமையாக நடந்த சுதந்திர தின விழா

தேசிய கொடியை ஏற்றிய தூய்மை பணியாளர்  பழனியம்மாள்
தேசிய கொடியை ஏற்றிய தூய்மை பணியாளர் பழனியம்மாள்

நீலகிரியில் கொரோனோ பாதிப்பு மற்றும் பெருமழை பேரிடர் காரணமாக சுதந்திர தின விழா மிக எளிமையக கடைப்பிடிக்கப்பட்டாலும், தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்த செயல் மக்களிடம் வரவேற்பை ஏற்பபடுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் மேடை அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

காவல்துறையினர்
காவல்துறையினர்

காலையில் காற்றுடன்‌ லேசான தூறல் இருந்ததால் கடுமையான குளிர் நிலவியது. குளிரையும் பொருட்படுத்தாது கொடியேற்றத்துக்கான பணிகளை அரசுத்துறையினர் மேற்கொண்டிருந்தனர். காவல்துறையில் ஒரு பிரிவினர் மட்டும் நீலச்சீருடையில் மாஸ்குடன் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

விழாவில் பங்கேற்க வந்த அரசு அலுவலர்கள் அனைவரது உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

உடல் வெப்பநிலை சோதனை
உடல் வெப்பநிலை சோதனை

நீலகிரியைப் பொருத்தவரை காலை 10 மணிக்கு கொடியேற்றுவதுதான் வழக்கம். அனைத்தும்‌ தயார் நிலையில் ஆட்சியரின் வருகைக்கு காத்திருக்க, கச்சிதமாக 10 மணிக்கு மைதானத்திற்கு வந்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொடியேற்றி வணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அணிவகுப்பு இல்லை, பழங்குடிகளின் பாரம்பர்ய நடனம் இல்லை, பள்ளிக்குழந்தைகளின் ஆட்டம் பாட்டம் என எந்த கொண்டாட்டமும் இல்லாமல் அமைதியாக இருந்த மைதானத்தில் கொடியேற்ற நிகவுக்குப்பின், சிறப்பாக பணியாற்றிய 33 நபர்களை கெளரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டே இரண்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதுவும் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக.

மரியாதையை செலுத்திய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
மரியாதையை செலுத்திய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

யாருக்கும் இனிப்புகள் கூட வழங்கப்படவில்லை. ஆட்சியர்‌ மற்றும் உடன் இருந்த அதிகாரிகள் அமைதியாக எழுத்துச் சென்று கிளம்பினர்.

இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் குன்னூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்புரிமைகள் வழங்கப்பட்டது.

குன்னூர் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றிவரும் 55 வயதான பழனியம்மாள்,‌ அதே நகராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றி வணக்கம் செலுத்தியது அனைவரையும் நெகிழச்செய்தது.

காந்தி சிலைக்கு மாலை அணிவித்த  தூய்மை பணியாளர் கண்ணன்.
காந்தி சிலைக்கு மாலை அணிவித்த தூய்மை பணியாளர் கண்ணன்.

இதேபோல் குன்னூர் நகரில் உள்ள காந்தி சிலைக்கு தூய்மை பணியாளர் கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். மக்களிடம் வரவேற்பை பெற்ற இந்த இரண்டு உன்னத நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்தவர் குன்னூர் நகராட்சி ஆணையர் பாலு.

முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் சுதந்திர தின விழா நடைபெற்றது. கொரோனா மற்றும் பெருமழை பாதிப்பிலிருந்து மீளாத பல கிராமங்களில் மிக எளிமையாக சுதந்திர தின விழா கடைப்பிடிக்கப்பட்டது.

விழிப்புணர்வு  கலை  நிகழ்ச்சி
விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

நீலகிரியில் கடந்த ஆண்டும் ஏற்பட்ட பெருமழை பேரிடர் காரணமாக எளிமையாகவே சுதந்திர தின விழா நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு