Published:Updated:

9 மாதங்களுக்குப்பின் இயக்கப்படும் நீலகிரி மலை ரயில்...உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்!

கோடை சீசனுக்குத் தயாராகும் ஊட்டி மலை ரயில் நிலையம்!
கோடை சீசனுக்குத் தயாராகும் ஊட்டி மலை ரயில் நிலையம்!

இந்த ரயில் முழுவதும் முன்பதிவு முறையிலேயே இயக்கப்படும். இதனால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் முன்பதிவு செய்தால் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பொது போக்குவரத்து முடக்கப்பட்டது. இதில் சர்வதேச சுற்றுலா சிறப்பு வாய்ந்த நூற்றாண்டு நீலகிரி மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது.

mountain train
mountain train

கொரோனா பொது முடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக நீலகிரிக்கு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகள் வர அனுமதிக்கப்பட்ட போதிலும், நீலகிரி மலை ரயில் இயக்கப்படாமல் இருந்தது.

திடீரென இந்த மாத துவக்கத்தில் மலை ரயிலை தனியார் சார்பில் வாடகைக்கு எடுத்து அதிக கட்டணத்தில் இயக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பெரும் எதிர்ப்பும் கிளம்பியது.

நீலகிரி மலை ரயில்
நீலகிரி மலை ரயில்

வழக்கம் போல சுற்றுலாப் பயணிகளுக்கான மலை ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இந்த நிலையில் , 9 மாதங்களுக்குப்பின் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரயில் சேவை தொடங்கியுள்ளது. முற்றிலும் முன் பதிவு அடிப்படையில் மட்டுமே இந்த மலை ரயில் இயக்கப்படுகிறது.

"நீலகிரி மலை ரயில் தினமும் வழக்கமான நேரங்களில் இயக்கப்படும். மேட்டுப்பாளைத்திலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் ரயில் காலை 11.55 மணிக்கு உதகை வந்தடையும். மதியம் 1.45 மணிக்கு உதகையிலிருந்து புறப்படும் ரயில் மாலை 5.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

5 நாள்கள்தான்; மிஸ் பண்ணிடாதீங்க! - இயற்கை எழில் கொஞ்சும் குன்னூர்- ரன்னிமேடு மலை ரயில்
5 நாள்கள்தான்; மிஸ் பண்ணிடாதீங்க! - இயற்கை எழில் கொஞ்சும் குன்னூர்- ரன்னிமேடு மலை ரயில்

உதகை குன்னூரிடையே மூன்று முறையும் மலை ரயில் இயக்கப்படும். இந்த ரயில் முழுவதும் முன்பதிவு முறையிலேயே இயக்கப்படும். இதனால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் முன்பதிவு செய்தால் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர். பயணிகள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது என கொரோனா வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்"என ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு