Published:Updated:

நீலகிரி: கொட்டித்தீர்க்கும் மழை; சாலையில் விழும் மரங்கள்! - வெள்ளக்காடாகும் விளைநிலங்கள்

வெள்ளக்காடாகும் விளைநிலங்கள்
வெள்ளக்காடாகும் விளைநிலங்கள்

நீலகிரியில் இடைவிடாமல் காற்றுடன் தொடர்மழை பெய்துவரும் நிலையில், விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிவருகின்றன. பல இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. மண் சரிவு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீலகிரியில் வழக்கமாகத் தொடங்க வேண்டிய தென்மேற்குப் பருவமழை மிகவும் தாமதமாகவே தொடங்கியது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்துவந்த நிலையில், தென்மேற்குப் பருவக்காற்றின் தீவிரம் காரணமாக கடந்த 10 நாள்களுக்கு பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்துவருகிறது. பல இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. மரங்கள் விழுந்து மின் விநியோகமும் தடைப்பட்டுள்ளது.

சாலையில் விழும் மரங்கள்
சாலையில் விழும் மரங்கள்

ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் போன்ற பகுதிகளில் மழை தீவிரமடைந்து கனமழை பெய்துவருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சி போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது. ஊட்டி - கூடலூர் சாலை பைக்காரா பகுதியில் மரம் விழுந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

சீனா: 'ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத பெரு மழை! வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள்!'

ஊட்டி- எமரால்டு சாலை முத்தோரை பகுதியில் ராட்சத மரம் ஒன்று சாலையில் விழுந்ததில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதித்தது. இவற்றைச் சீரமைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். இந்தத் தொடர் மழையால் ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பல ஏக்கர் பரப்பளவிலான மலைக் காய்கறி, பயிர்கள் நீரில் மூழ்கிவருகின்றன. மழை நீடித்தால் மண் சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது.

மழை
மழை

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம், ``மழை பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுவருகிறோம். 24 மணி நேரமும் மீட்புக் குழுவினர் தயார்நிலையில் உள்ளனர். மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு