Published:Updated:

நீலகிரியை மிரட்டும் ‘செக்‌ஷன் 17’ நிலப் பிரச்னை! - என்னவானது தி.மு.க தேர்தல் வாக்குறுதி?

நீலகிரி
பிரீமியம் ஸ்டோரி
நீலகிரி

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத இந்த நிலப் பிரச்னையைத் தீர்த்துக் கொடுப்பதாக நாங்கள் தேர்தல் வாக்குறுதி அளித்திருக்கிறோம்.

நீலகிரியை மிரட்டும் ‘செக்‌ஷன் 17’ நிலப் பிரச்னை! - என்னவானது தி.மு.க தேர்தல் வாக்குறுதி?

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத இந்த நிலப் பிரச்னையைத் தீர்த்துக் கொடுப்பதாக நாங்கள் தேர்தல் வாக்குறுதி அளித்திருக்கிறோம்.

Published:Updated:
நீலகிரி
பிரீமியம் ஸ்டோரி
நீலகிரி

1969-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘ஜமீன்தாரி ஒழிப்பு சட்ட’த்தின் அடிப்படையில், நிலம்பூர் கோவிலகம் ஜமீன் வசம் இருந்த பல ஆயிரம் ஏக்கர் நிலம் தமிழ்நாடு அரசின் வசம் வந்தது. ஆனால், ஜமீன் நிலங்களில் ஏற்கெனவே குத்தகை அடிப்படையில், எஸ்டேட் நடத்திவந்த நிறுவனங்கள், அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றன. இதையடுத்து, ஜமீனால் குத்தகைக்கு விடப்பட்ட 35 ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கையாள்வது எப்படி என ‘செக்‌ஷன் 17’-ன் கீழ் சில வழிகாட்டுதல்களை வழங்கியது நீதிமன்றம். ‘இந்த நிலங்களை யாரும் வாங்கவோ, விற்கவோ முடியாது. இதில் குடியிருப்பவர்களுக்குப் பட்டா கிடையாது. இந்த நிலத்தில், புதிதாக எந்தவித ஆக்கிரமிப்பும் செய்யக் கூடாது’ எனப் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

நீலகிரியை மிரட்டும் ‘செக்‌ஷன் 17’ நிலப் பிரச்னை! - என்னவானது தி.மு.க தேர்தல் வாக்குறுதி?

இந்தப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பதாகத் தேர்தல் வாக்குறுதி கொடுத்த தி.மு.க அரசு, இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது!

இது குறித்து நம்மிடம் பேசிய ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவர் சகாதேவன், ‘‘செக்‌ஷன் 17 நிலத்தில், குடியிருக்கும் 10,000 குடும்பங்களும் மின் இணைப்பு இல்லாமல் இருளில் தவித்துவருகின்றன. சுமார் 2,000 வீடுகளுக்குக் கதவு எண் கிடையாது. இங்குள்ள ஏழை மக்களுக்கு மட்டுமாவது அரசு பட்டா வழங்க வேண்டும். தனியார் எஸ்டேட் வசமிருக்கும் தோட்டங்களை அரசே ஏற்று நடத்தி, கூலித் தொழிலாளர்கள் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

ராமச்சந்திரன்
ராமச்சந்திரன்

ஓய்வுபெற்ற வட்டாட்சியர் மீனாட்சி சுந்தரம், ‘‘ஜமீனால் தனியார் எஸ்டேட் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட குத்தகைக் காலம் முடிவடைந்துவிட்டது. ஆனாலும் ஏழு பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் 81 நடுத்தர தோட்ட நிறுவனங்களின் ஆக்கிரமிப்பிலேயே நிலம் இருக்கிறது. இந்த 35,000 ஏக்கர் நிலத்தையும் வருவாய்த்துறையின் கீழ் கொண்டு வந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்” என்றார்.

ஆனால், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஐ.ஏ.எஸ்., ‘‘உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் ‘செக்‌ஷன் 17’ நிலம் தொடர்பான பல்வேறு வழக்குகள் நடைபெற்றுவருகின்றன. பெருந்தோட்ட நிர்வாகங்களிடமிருந்து குத்தகை பாக்கியை வசூலிப்பதற்கான வழிமுறைகளோடு அரசுத் தரப்பும் நீதிமன்றத்தை அணுகிவருகிறோம்’’ என்றார்.

அம்ரித்
அம்ரித்
சகாதேவன்
சகாதேவன்

அமைச்சர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, ‘‘நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத இந்த நிலப் பிரச்னையைத் தீர்த்துக் கொடுப்பதாக நாங்கள் தேர்தல் வாக்குறுதி அளித்திருக்கிறோம். எனவே, இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடமும் மக்களிடமும் தொடர்ந்து பேசிவருகிறேன். இதற்கான நகர்வுகளும் முதல்வரின் நேரடிப்‌ பார்வையில் இருக்கின்றன. உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழிகாட்டுதல் இருக்கிறது. எனவே, மிகக் கவனமாக இந்த விவகாரத்தைக் கையாண்டுவருகிறோம். விரைவில் தீர்வு காணப்படும்” என்றார்.