Published:Updated:

`கங்கனா பேசியது சரியானது; மனித உரிமைகள் பெயரில் வியாபாரம்!’ -கொதித்த நிர்பயாவின் தாயார்

நிர்பயா தாயார்
நிர்பயா தாயார் ( ANI )

கங்கனா ரனாவத் பேச்சுக்கு ஆதரவு தெரிவிப்பதாக நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கூறியுள்ளார்.

டெல்லியில் பட விழாவில் ஒன்றில் பேசிய பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ``மகளை இழந்த சோகத்தில் நிர்பயாவின் பெற்றோர் இத்தனை வருடங்களாகத் தவித்து வருகிறார்கள். குற்றவாளிகளைச் சத்தமே இல்லாமல் கொல்வதில் என்ன பயன் இருக்கப்போகிறது. இந்திரா ஜெய்சிங் போன்ற பெண்களை அந்தக் குற்றவாளிகளுடன் நான்கு நாள்கள் சிறையில் அடைக்க வேண்டும். பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் கொலைகாரர்கள் மீது அனுதாபம் காட்டுபவர்கள் என்ன மாதிரியான பெண்கள். பெண்களின் கருவறைகள்தான் பாலியல் குற்றவாளிகளை உருவாக்குகிறது” எனக் கடுமையாகச் சாடியிருந்தார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத் பேச்சுக்கு ஆதரவு தெரிவிப்பதாக நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய ஆஷாதேவி, ``கங்கனா பேசியது சரி, அவரது வார்த்தைகளை நான் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன். இந்திரா ஜெய்சிங்குக்கு எதிராகப் பேசுவதை நான் வரவேற்கிறேன். அவரது கருத்துக்கு நான் துணை நிற்பேன். இதுபோன்ற ஒரு கொடுமையான சம்பவம் நடந்தபோது இந்த மனித உரிமை ஆர்வலர்கள் எல்லாம் எங்கே போனார்கள்.

`இந்திரா ஜெய்சிங்கை அந்த குற்றவாளிகளுடன் சிறையிலிடுங்கள்!’- நிர்பயா வழக்கில் கங்கனா ரனாவத் ஆவேசம்

மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் என்னிடம் கேள்வி எழுப்பியவிதம் மனித உரிமைகள் என்ற பெயரில் சமூகத்தை ஏமாற்றுவதாகும். சிறுமிகள் மீது நடத்தப்படும் குற்றங்களைக் கேலி செய்வதாகும். மனித உரிமைகள் என்ற பெயரில் வணிகம் செய்கிறார்கள். அவர்கள் குற்றவாளிகளை மட்டுமே ஆதரிக்கிறார்கள் ” எனக் காட்டமாகப் பேசியுள்ளார்.

இந்திரா ஜெய்சிங்
இந்திரா ஜெய்சிங்

‘ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகளை சோனியா மன்னித்ததுபோல நிர்பயாவின் தாயும் குற்றவாளிகளை மன்னித்து அவர்களுக்கு வழங்கப்படவுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்குப் பரிந்துரை செய்ய வேண்டும்’ எனக் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறியிருந்தார்.

இந்திராவின் கருத்துக்குத்தான் கங்கனா ரனாவத் தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு