Published:Updated:

மாமல்லபுரம்: `அதிகரித்த கடல் சீற்றம்!’ - தயார்நிலையில் பேரிடர் மீட்புக்குழுவினர் #Nivar

மாமல்லபுரம்
மாமல்லபுரம்

மாமல்லபுரம் பகுதியில் இன்று மதியத்திலிருந்து பலத்த காற்று வீசத் தொடங்கியிருக்கிறது. கடல் சீற்றமும் அதிகரித்திருக்கிறது. இதனால் மாமல்லபுரம் உள்ளிட்ட கடற்கரையோரப் பகுதிகளில் மதியம் 12 மணியிலிருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மீனவ கிராமங்களில் இருக்கும் படகுகளை கடந்த இரண்டு நாள்களாக அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். தேவனேரி , மாமல்லபுரம், கொக்கிலமேடு உள்ளிட்ட கிராமங்களில் படகுகளை நிறுத்தவும், வலைகளை உலர்த்தவும் இடம் இல்லாததால் தெருக்களிலும் காலி இடங்களிலும் அவற்றை வைத்திருக்கிறார்கள்.

வருவாய்த்துறையினர், தீயணைப்புத்துறையினர், தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினர், காவல்துறையினர் உள்ளிட்டோர் புயல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். மிதவைப் படகுகள், கயிறுகள், மரம் வெட்டும் கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் தயார்நிலையில் இருக்கின்றன.

மாமல்லபுரம்: `அதிகரித்த கடல் சீற்றம்!’ - தயார்நிலையில் பேரிடர் மீட்புக்குழுவினர் #Nivar

மாமல்லபுரம் பகுதியில் இன்று மதியத்திலிருந்து பலத்த காற்று வீசத் தொடங்கியிருக்கிறாது. கடல் சீற்றமும் அதிகரித்திருக்கிறது. இதனால் மாமல்லபுரம் உள்ளிட்ட கடற்கரையோரப் பகுதிகளில் மதியம் 12 மணியிலிருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறாது. செங்கல்பட்டு டி.ஐ.ஜி சாமுண்டீஸ்வரி, எஸ்.பி கண்ணன் ஆகியோர் மாமல்லபுரம் பகுதியில் தங்கியிருந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மாலை 3 மணி நிலவரப்படி சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு கடல் நீர் வெளிவந்திருக்கிறது. கிழக்குக் கடற்கரை சாலையில் வாகனப் போக்குவரத்து வெகுவாக குறைந்துவிட்டது. தற்போது மழை தீவிரமடைந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு