Published:Updated:

நோ டிரையல் நோ ரிட்டர்ன்... தீபாவளி டிரஸ் வாங்குவோர் கவனத்துக்கு...

தேவை கவனம்

பிரீமியம் ஸ்டோரி

தீபாவளி நெருங்கிவிட்டது. கொண்டாட்டத்தில் முதலிடம் ஆடைகளுக்குத் தான். இந்த ஆண்டு என்ன டிரெண்ட் என்பதைத் தேடித் தேடிப் பார்த்து வாங்குவோம். ரெடிமேடு பிரியர்கள் பலரும் பண்டிகைக்கு முதல்நாள் ஷாப்பிங் செய்வார்கள். அளவு சரியாக இருக்கிறதா என்பதை `டிரையல்' பார்த்து வாங்கும் வசதி அவர்களுக்கு மிகப்பெரிய ப்ளஸ்.

இந்த வருடம் கோவிட்-19 பரவல் காரணமாகப் பெரும்பாலான துணிக்கடைகளில் ஆடைகளுக்கு டிரையல் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று வாங்கிய ஆடைகளை ரிட்டன் செய்யவும் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. ‘நோ டிரையல் நோ ரிட்டர்ன்’ எனும்போது நமக்கான சரியான ஆடைகளை எப்படித் தேர்ந் தெடுப்பது என்று விளக்குகிறார் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ரெஹானே.

“டிரையல் பார்க்க அனுமதித்தாலும் அதற்கு முன்பாக அந்த ஆடையை யார் டிரையல் பார்த்திருப்பார்கள் என்று தெரியாது. அதனால் இந்தச் சூழலில் டிரையலை நாமே தவிர்த்துவிடுவதுதான் நல்லது. வெளிநாடுகளில் ரெடிமேடு ஆடைகளுக்குப் பல்வேறு அளவுகள் உள்ளன. நம் நாட்டில் ஸ்மால், மீடியம், லார்ஜ், எக்ஸ்எல், டபுள் எக்ஸ்எல் எனக் குறிப்பிட்ட அளவுகள்தான் உள்ளன. இதனால் ஒருவருக்கு மிகவும் கச்சிதமான ரெடிமேடு ஆடைகள் கிடைப்பது கடினம்.

நோ டிரையல் நோ ரிட்டர்ன்... தீபாவளி டிரஸ் வாங்குவோர் கவனத்துக்கு...

தீபாவளி போன்ற பண்டிகைகள், திருமண விழாக்களுக்கான ஆடைகளுக்கு உங்கள் பட்ஜெட்டுக்கேற்ப டிசைனரைத் தேர்வு செய்யுங்கள். அவரிடம் ஆடையை வடிவமைக்கக் கொடுத்தால் உங்களுக்கு ஏற்ற கச்சிதமான அளவு, பிடித்த நிறம், டிரெண்டிங் டிசைன் என அனைத்தையும் பெற முடியும்.

உள்ளாடைகளின் அளவை எப்படிச் சரியாக ஞாபகம் வைத்திருக்கிறோமோ, அதே போன்று உங்கள் நெஞ்சுப்பகுதி, இடுப்பு, கால்களின் நீளம், கைகளின் நீளம் என அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அப்படி நினைவில் வைத்துக் கொள்ளும்பட்சத்தி்ல் கடைக்குச் செல்லும்போது இன்ச் டேப்பை மட்டும் உடன் எடுத்துச் சென்றால், ஆடையைப் போடாமலேயே உங்கள் அளவை அளந்து பார்த்து வாங்கலாம். சிறிய திருத்தங்கள் தேவைப்பட்டால் அருகிலிருக்கும் டெய்லரிடம் கொடுத்து சரிசெய்யலாம்” என்கிறார்.

சரியான அளவில் ஆடையைத் தேர்வு செய்வதைக் காட்டிலும் பாதுகாப்பாகத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

பாதுகாப்பாக ஷாப்பிங் செய்ய சில டிப்ஸ்

டைசி நேர அவசர ஷாப்பிங் வேண்டாம். பண்டிகைக்கு சில தினங்களுக்கு முன்பாகவே கூட்டமில்லாத நேர மாகப் பார்த்து ஷாப்பிங் செல்வது நோய்ப் பரவலுக்கான வாய்ப்பை நிச்சயம் குறைக்கும்.

குடும்பத்தோடு ஷாப்பிங் செல்வதுதான் சந்தோஷம் என்றாலும், இந்தச் சூழலில் வயதானவர்கள், குழந்தை களை அழைத்துச் செல்வதைத் தவிர்த்துவிடலாம்.

மணிக்கணக்காகத் துணிக்கடையில் நேரம் செலவழிக்காமல், ஷாப்பிங் நேரத்தைக் குறைத்துக் கொண்டு சீக்கிரம் கடையைவிட்டு வெளியேறுவது நமக்கு மட்டுமல்ல; சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது.

நோ டிரையல் நோ ரிட்டர்ன்... தீபாவளி டிரஸ் வாங்குவோர் கவனத்துக்கு...

குடும்பத்துடன் மணிக்கணக்காக ஷாப்பிங் செய்ய விரும்புபவர்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்யலாம்.

தீபாவளிக்கு மடிப்பு கலையாத, புதுத்துணியின் வாசனை பொதிந்த ஆடைகளை அணிவதுதான் எல்லோருக்கும் விருப்பம். நோய்ப் பரவல் ஆபத்து இருப்பதால் வாங்கிய துணிகளை ஒருமுறை துவைத்துப் பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ரூபாய் நோட்டுகளைப் புழங்குவதற்குப் பதில் கார்டுகள் அல்லது ஆன்லைன் பேமென்ட் சிறந்தது.

ஷாப்பிங் முடிந்து வீட்டுக்குச் சென்றதும் ஒரு குளியல் போட்டுவிடுவது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு