கொல்கத்தா, ஐ.ஐ.எம்-ல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய பாம்பே பங்குச்சந்தை தலைவரான(பிஎஸ்இ) ஆஷிஷ்குமார் சவுகான், ``2020 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசானது, 11.5 கோடி மக்களுக்கு உணவு வழங்கியதற்காக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்துக்கு (WFP) வழங்கப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் மூலம், சென்ற ஆண்டில் 88 நாடுகளில் கடுமையான உணவுப் பற்றாக்குறை மற்றும் பசியால் பாதிக்கப்பட்ட 97 மில்லியன் மக்கள் பயன்பெற்றனர். ஆனால், இது கொரோனா காலகட்டத்தின்போது, இந்தியாவில் வழங்கப்பட்ட இலவச ரேஷன் மூலம் பயன்பெற்ற 80 கோடி மக்களில் 14% தான். எனவே இந்த இலவச ரேஷன் திட்டத்தை விரிவுபடுத்தியதில் பிரதமர் மோடி ஆற்றிய பங்கிற்காக, அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதை நோபல் குழு பரிசீலிக்க வேண்டும். எங்கள் தனிநபர் வருமானம் வளர்ந்த நாடுகளை விடவும் 10 முதல் 30 மடங்கு குறைவாக இருந்தாலும், கொரோனா காலகட்டத்தை கையாள்வதில் நாங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம். இதற்காக நாம் பெருமை கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.
