பிரீமியம் ஸ்டோரி

ந்த வகை முதலீடாக இருந்தாலும் அது எதிர்காலத்தில் யாருக்குப் போய்ச் சேரவேண்டும் என்று எழுதி வைப்பது நல்லது. அப்போதுதான் சட்டச் சிக்கல் உருவாகாமல் இருக்கும்.

ஒருவர் தனக்குப்பிறகு தன்னுடைய சொத்து யாருக்குச் சொந்தம் என்று வரும்போது ‘நாமினி’ என்று ஒருவரைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். ஆனால், இந்த ‘நாமினி’ என்பவரும் வாரிசு என்பவரும் ஒருவரா அல்லது தனித்தனி நபரா, இந்த இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்பது பலருக்கும் தெரிவதில்லை. அந்த வித்தியாசத்தை இப்போது பார்ப்போம்.

நாமினி VS வாரிசு யாருக்கு முன்னுரிமை?

நாமினியும் வாரிசும்...

ஒருவருடைய முதலீடு மற்றும் சொத்துகளை, அவர் இறந்தபிறகு அவற்றைப் பெறுவதற்கு நியமிக்கப்படுபவர் நாமினி ஆவார். நாமினிக்கு முதலீடுகளைப் பெறுவதற்கு உரிமையுள்ளதே தவிர, அதை அனுபவிப்பதற்கு அவருக்குச் சட்டப்படி உரிமையில்லை. அவர் அந்த முதலீட்டைப் பெற்று, வாரிசுகளிடம் ஒப்படைக்க வேண்டும். அல்லது உயிலில் குறிப்பிட்டுள்ளபடி, அதைப் பிரித்துக்கொடுக்க வேண்டும். வாரிசுகளைப் பொதுவாக, கிளாஸ் 1, கிளாஸ் 2, கிளாஸ் 3 என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இதில் முக்கியமான உறவுகளைப் பற்றி மட்டும் இங்கே பார்ப்போம். தாய், மனைவி, மகன், மகள் ஆகியோர் கிளாஸ் 1 வாரிசுதாரர் ஆவார். தந்தை கிளாஸ் 2 வாரிசுதாரர் ஆவார்.

பெற்ற மகனுக்கு உள்ள அனைத்து உரிமைகளும், சட்டப்படி தத்தெடுக்கப்பட்ட பிள்ளைக்கும் உண்டு. அவர் பிறந்த குடும்பத்திற்கு அவரை தத்து கொடுக்கப்பட்ட நாளிலிருந்து அவர்மீதான எந்த உரிமையும் கிடையாது.

நாமினியின் செயல்பாடு என்ன?

ஒரு முதலீட்டிற்கு நாமினி யை நியமிப்பதன்மூலம், அந்த முதலீடு நாமினிக்கே போய்ச் சேராது. மற்ற வாரிசுகளுக்குச் சட்டப்படி அதில் பங்கு உண்டு. இதைத் தவிர்க்க, ஒருவர் முறைப்படி உயில் எழுதவேண்டும். அதில், இந்த முதலீடுகள் இவருக்கு / இவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதைக் குறிப்பிட வேண்டும். நிறுவனத்தில் பணிபுரிபவர் கள், பி.எஃப் முதலீட்டுக்கு ரத்த சம்பந்தமான உறவு களையே நாமினியாக நிய மிக்க முடியும். திருமணமான பிறகு நாமினியை மாற்ற வேண்டும். இல்லையெனில் ஏன் அவர் களை நாமினியாக நியமித் திருக்கிறீர்கள் என்பதற்கான விளக்கம் தரவேண்டும். உயில் இல்லாதபட்சத்தில் வாரிசு தாரர்கள் பங்கு கோரலாம். ஆனால், நாமினிக்கே முன்னுரிமை அதிகம்.

நாமினி VS வாரிசு யாருக்கு முன்னுரிமை?

நாமினியை நியமிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில...

1. நியமிக்கும் நாமினி மைனராக இருந்தால், அவருக்குக் காப்பாளர் (கார்டியன்) ஒருவரை நியமிக்க வேண்டும். 2. மகளை நாமினி யாக நியமித்திருந்தால் அவருடைய திருமணத்திற்குப் பின் அவருடைய பெயரில் மாற்றம் இருக்கும்பட்சத்தில் அதை நீங்களும் அப்டேட் செய்யவேண்டும். 3. திருமணத்திற்குமுன் தாய், தந்தை, உடன்பிறந்தவர்களை நியமித்திருந்தால் திருமணமானவுடன் அதை மாற்றிவிடவும். 4. நாமினியாக நியமிக்கப்பட்டிருந்தவர் இறந்து விட்டால், வேறு நாமினியை நியமிக்க வேண்டும். சட்டப்படி இரண்டாவது திருமணம் செய்திருந்தால் மட்டுமே இரண்டாவது மனைவிக்கு உரிமை உண்டு. 5. முறைப்படி திருமணம் செய்யா விட்டாலும் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த பிள்ளைகளுக்குச் சொத்தில் உரிமை உண்டு. இதையெல்லாம் தவிர்க்க, நாம் முறைப்படி உயில் எழுதுவதே சிறந்த வழி.

செல்வி சுகுமாரன், நிதி ஆலோசகர்
செல்வி சுகுமாரன், நிதி ஆலோசகர்

உயில் இல்லாதபட்சத்தில் எந்த முதலீட்டுக்கு யார் முன்னுரிமை?

வங்கிக்கணக்கு, மியூச்சுவல் ஃபண்ட், பிக்ஸட் டெபாசிட் லாக்கர், பி.பி.எஃப் : நாமினி இருந்தாலும், வாரிசுதாரர்களுக்கே உரிமை.

லைஃப் இன்ஷூரன்ஸ் : பெனிபிஷரி நாமினி என்று குறிப்பிட்டிருந் தால் மட்டுமே நாமினிக்கு சொந்தம். இல்லாவிட்டால் வாரிசுதாரர் களுக்கே முன்னுரிமை.

டீமேட் கணக்கில் உள்ள நிறுவனப் பங்குகள்: நிறுவன சட்டப் பிரிவு 109ஏ மற்றும் டெபாசிட்டரி சட்டப்பிரிவு 9.11-படி நாமினிக்கே முழு உரிமை.

நாமினி, வாரிசு குழப்பம் இப்போது தீர்ந்ததா..?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு