Published:Updated:

`குடும்பத்தினரையும் ஆபத்துக்குள்ளாக்க வேண்டுமா?!’ - அரசின் புது உத்தரவால் ஆதங்கப்படும் செவிலியர்கள்

representation image
representation image

கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, மார்ச் 24-ம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துவிட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் மிகவும் குறைவாக இருப்பது தெரியவந்திருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தற்போது, நான்காம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு
ஊரடங்கு

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களைத் தனிமைப்படுத்தி கண்காணித்துவந்தனர். இந்நிலையில், பிபிஇ கிட் அணிந்து பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக்குச் செல்லலாம் என மத்திய சுகாதாரத்துறை தரப்பில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது.

`9 மாத கர்ப்பம்; செவிலியரின் மருத்துவ சேவை’ - கர்நாடக முதல்வரின் பாராட்டைப் பெற்ற ரூபா

இதுகுறித்துப் பேசியுள்ள செவிலியர்கள், “ மத்திய அரசு, ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள் ஆபத்தான நிலையில் இல்லையென்றால் வீடுகளுக்குச் செல்லலாம் எனக் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக நாங்கள் கடுமையாகப் போராடிவருகிறோம். இது, எங்கள் கடமை என உணர்ந்து நாங்கள் பணி செய்துவருகிறோம். ஆனால், இதிலிருந்து எங்களுக்கு என்ன கிடைக்கிறது. பிபிஇ உபகரணத்தின் தரம் குறித்தோ அல்லது மாஸ்க் பற்றாக்குறை குறித்தோ நாங்கள் இதுவரை எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. ஆனால், இப்போது நாங்கள் வீட்டுக்குச் சென்று எங்களது குடும்பத்தினரை ஆபத்துக்குள்ளாக்க வேண்டும் என இந்த அரசு விரும்புகிறது “ என செவிலியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மத்திய சுகாதார அமைச்சகம், சில நாள்களுக்கு முன்பு, சுகாதாரப் பணியாளர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதில் சுகாதாரப் பணியாளர்கள், பணிபுரியும் துறையைப் பொறுத்து பல்வேறு துணைத் தலைப்புகளைப் பிரித்து அறிவிப்பு வெளியிட்டது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், கோவிட் 19 நோயாளிகளைக் கையாளாத மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, பிபிஇ கிட் அவசியம் இல்லை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் எனக் கூறப்பட்டிருந்தது.

மருத்துவர்
மருத்துவர்
மாதிரிப் படம்

சுகாதாரப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளைப் பொறுத்து அவர்களுக்கு எந்த விதமான அபாயம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அபாயத்தைப் பொறுத்து ஒவ்வொரு பணியாளருக்கும் தேவையான பிபிஇ உபகரணங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்திருந்தது.

அடுத்த கட்டுரைக்கு