Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

- ஆபீஸ் பாய்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

- ஆபீஸ் பாய்

Published:Updated:
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

அரசு அதிகாரியே விதிகளை மீறலாமா?

நீலகிரி மாவட்டம், கூடலூரில் ‘செக்‌ஷன் 17’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில் எந்தவித வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்பது உச்ச நீதிமன்ற உத்தரவு. ஆனால், இந்த வருடம் மே 14, 15, 16 ஆகிய தேதிகளில் கூடலூரில் நடக்கவிருக்கும் கோடைவிழாவை ‘செக்‌ஷன் 17’ நிலத்திலுள்ள தனியார் பள்ளி மைதானத்துக்கு மாற்றியிருக்கிறார்கள். இதற்காக, சுற்றுவட்டாரத்தில் ஏராளமான மரங்களை வெட்டியிருப்பதோடு, விதிமுறைகளை மீறி பொக்லைனைப் பயன்படுத்தி மலையைக் குடைந்து, சாலையும் அமைத்திருக்கிறார்கள். இங்குள்ள தமிழ்க்கடவுள் பெயர்கொண்ட அதிகாரி ஒருவர்தான், தனியார் சிலர் ஆதாயம் பெறுவதற்காக இப்படி விதிமுறைகளை மீறியிருப்பதாகக் கொதிக்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

ஆவின் கெஸ்ட் ஹவுஸ் வாசம்... அதிகாரியின் பழக்கதோஷம்!

உயரதிகாரி ஒருவர் தலைநகரத்தில் முக்கியமான மூன்று துறைகளுக்குச் செயலராக இருக்கிறார். இவருக்கு அரசுக் குடியிருப்பு, அலுவலகம் இருந்தாலும் அவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு, சென்னை நந்தனத்தில் இருக்கும் ஆவின் நிறுவன கெஸ்ட் ஹவுஸில்தான் எப்போதும் வாசம் செய்கிறார். கேட்டால், “ஏற்கெனவே இங்கு அதிகாரியாக இருந்தபோது இங்கேயே புழங்கி, பழக்கதோஷமாகிவிட்டது... தவிர்க்க முடியவில்லை” என்று பதில் வருகிறதாம்! அதேசமயம், ஆவின் அதிகாரிகளை உருட்டி மிரட்டி இவர் வேலை வாங்குவதால் கடுப்பான அலுவலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், ‘ஆவின் நிறுவனத்துக்கும் அரசுச் செயலருக்கும் என்ன தொடர்பு?” என்கிறரீதியில் கேள்விகளைக் கேட்க... ‘ஆவினுக்கு நிர்வாக இயக்குநர்தான் அதிகாரி. அரசுச் செயலருக்கு அங்கே வேலை இல்லை’ என்று பதில் வந்திருக்கிறது. இந்த விஷயம் அந்த உயரதிகாரிக்கும் சென்றுவிட... ஆர்.டி.ஐ-யில் கேள்வி கேட்ட அலுவலரைத் துறைரீதியாக தண்டித்து தனது கோபத்தைத் தணித்துக்கொண்டிருக்கிறார்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

லஞ்சம் வாங்க ‘சுற்றிச்சுழலும்’ அதிகாரி!

கொங்கு மண்டலத்தின் மூன்றெழுத்து மாவட்டத்தில் விதிமுறைகளை மீறும் சாயப்பட்டறைகள் ஏராளமாக இயங்கிவருகின்றன. இவற்றின் கழிவுநீர் காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் கலப்பதால், நீர்நிலைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இந்த நிலையில், இங்கு மாசைக் கட்டுப்படுத்த ‘சுற்றிச்சுழல’ வேண்டிய அதிகாரி ஒருவர், சங்கப் பிரதிநிதிகள் மூலம் ‘ஆய்வுக்கு வருகிறேன்’ என்று சிக்னல் கொடுத்தாலே, சட்டவிரோதமாக இயங்கும் சாயப்பட்டறை ஆலைத் தரப்பினர் ஒன்றுகூடி பெரும் தொகையைத் திரட்டி அவருக்கு அனுப்பிவந்தனர். இப்படி மாதம்தோறும் மாமூல் வாங்கி வந்தவருக்கு, திடீரென்று தொகை குறைவாக வருகிறதோ என்று சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், இந்த மாதம் சங்கப் பிரமுகர்களை தவிர்த்த அதிகாரி, நேரடியாக ஆலை அதிபர்களிடமே மாமூல் கேட்டிருக்கிறார். இதையடுத்து, “கொஞ்சம்கூட விஜிலென்ஸ் பயமே இல்லாம வெளிப்படையா லஞ்சம் கேட்குறாரே... அவ்வளவு துணிச்சலா?” என்று புருவம் உயர்த்துகிறது சட்டவிரோத சாயப்பட்டறை அதிபர்கள் தரப்பு!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

“முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கம் நான்!”

டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்பு அதிகாரி அவர்... “எனக்கு முதல்வரைத் தெரியும். அவரின் குடும்பத்துக்கு ரொம்ப நெருக்கமான ஆள் நான்!” என்று சொல்லி இவர் கொடுக்கும் அலப்பறையைப் பார்த்து, மாவட்டத்தின் உயரதிகாரிகளே சற்று அரண்டுதான் போகிறார்கள். சில சமயங்களில் இந்த பில்டப்பைக் காட்டியே, தனக்கு மேலிருக்கும் அதிகாரிகளை இவர் வேலை வாங்கும் பாங்கைப் பார்த்து ‘அடேங்கப்பா’ என்று புருவம் உயர்த்துகிறார்கள் சக அலுவலர்கள்! பொதுவாக அரசு விழாக்களில் மக்கள் தொடர்பு அதிகாரிகள் யாரும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சருக்கு இணையாக மேடையில் அமர மாட்டார்கள். ஆனால், இவரோ அமைச்சர் இருக்கும் மேடையிலேயே அமர்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கும் மாவட்டத்தின் உயரதிகாரிகள், “உண்மையிலேயே இவருக்கு முதல்வர் குடும்பத்தோட ரொம்ப நெருக்கமோ...” என்று வாயைப் பிளக்கிறார்கள். இதைவைத்தே பல துறைகளிலும் கணிசமாக காரியம் சாதித்துக்கொள்கிறாராம் அந்த அதிகாரி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

கமகமக்கும் சிற்றுண்டி வாசம்... `வட்டம்’ அடிக்கும் கொட்டம்!

நாகை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்துக்கு தினசரி மாலை நேரத்தில் சென்றால் இட்லி, மெதுவடை, மசால் தோசை எனச் சிற்றுண்டி வாசம் கமகமக்கிறது. டேபிளுக்கு டேபிள் அலுவலர்கள் ரசித்துச் சாப்பிடுகிறார்கள். கேட்டால், “எல்லாம் வட்டம் ஏற்பாடுதான்” என்கிறார்கள். “வட்டச் செயலாளரா?” என்று கேட்டால், “அந்த வட்டம் இல்லைங்க... இது அதிகாரி வட்டம். இந்த ஏரியாவுல வழங்கல் ஏற்பாடுகளை கவனிக்குற அவர்தான், ஆபீஸ் முழுக்க சாயங்காலத்துக்கு டிபன் ஸ்பான்சர் பண்றாரு. சும்மா ஒண்ணும் இல்லை... புது ரேஷன் அட்டை கொடுக்குறது தொடங்கி பெயர் சேர்த்தல், நீக்கல் வரைக்கும் தனித்தனியா ரேட் ஃபிக்ஸ் பண்ணியிருக்காரு. ஆன்லைன்ல விண்ணப்பிச்சாலும், ஏதாவது ஒரு சாக்கைச் சொல்லி பைசாவைக் கறந்துடுவாரு. பக்கத்துல இருக்குற அவரோட மாமனார் வீட்டுல கலெக்‌ஷன் தொகையை பயனாளிகள் கொடுத்துடணும். இதையெல்லாம் மத்த அதிகாரிகள் கண்டுக்காம இருக்கத்தான் இந்த ஸ்பான்ஸர்” என்று வடையை மென்றுகொண்டே கிசுகிசுக்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism