Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய்

Published:Updated:
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

மலையை அலறவைக்கும் இரட்டை அதிகாரிகள்!

மலைக் குளிர் மாவட்ட நகராட்சியின் நகர வடிவமைப்புத்துறையில் இருந்த பெண் அதிகாரி, லஞ்சப் புகாரில் சிக்கியதால், சமவெளியிலுள்ள ஒரு நகராட்சிக்கு மாற்றியடிக்கப்பட்டார். ஆனால், கவனிக்க வேண்டியவர்களை கவனித்து, மீண்டும் மலைக்கே வந்துசேர்ந்துவிட்டார். இப்போது அதே துறையிலிருக்கும் காப்பியக் கவிஞரின் பெயர்கொண்ட உயரதிகாரி ஒருவரின் துணையோடு, காட்டேஜ் ஓனர்களிடம் வசூலை வாரிக் குவித்துவருகிறார்களாம். இருவரையும் கவனிக்கவில்லை யென்றால், அடுத்த டேபிளுக்கு ஃபைல் நகரவே நகராதாம். “அநியாயக் கொள்ளையில் ஈடுபட்டுவரும் இந்த இரட்டை அதிகாரிகளால், நகராட்சியே குப்பையாகிக் கிடக்கிறது. சுத்தம் செய்யவே முடியவில்லை” என ஸ்வெட்டரைத் தாண்டிய வெடவெடப்புடன் புலம்பிவருகிறாராம் நகராட்சி கமிஷனர்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

“வாங்களேன்... ஒரு ரவுண்டு போகலாம்!”

மேற்கு மண்டலத் தொழில்துறையில் இருக்கும் தமிழ் மாதத்தின் பெயர்கொண்ட அதிகாரி அவர். ‘உற்சாக’ பிரியரான அதிகாரி, முப்பொழுதும் சரக்குக்குள் சரண்டராகிக் கிடக்கிறாராம். ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை. தோதான இடம் இதுவென மேற்கு மண்டலப் பதவியைப் பசைபோட்டு, கெட்டியாகப் பிடித்துவைத்திருக்கிறார். அலுவல் சார்ந்து தொழில் அமைப்பினர், செய்தியாளர்கள் என யார் அவரிடம் கேள்வி கேட்டாலும், “எல்லாம் மேல இருக்கறவன் பார்த்துக்குவான். அங்க போய்க் கேளுங்க” என்று பதில் சொல்லி எஸ்கேப் ஆகிவிடுகிறார். நண்பகலுக்கு மேல் அவரைப் பார்க்கச் செல்பவர்கள், பாட்டிலை நீட்டினால்தான் பிடிகொடுத்தே பேசுகிறாராம். சில நேரங்களில் பாட்டிலுடன் வருபவர்களையும் “வாங்களேன்... ஒரு ரவுண்டு போகலாம்” என்று அழைக்கிறாராம். இதனால் அவரைத் தொடர்பு கொள்வதற்கே பதறுகிறார்கள் மக்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

“பட்டா வேணுமா... கார் வாங்கிக் கொடு!”

விவசாயத்துக்குப் பெயர்போன மாவட்டத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க அணை அமைந்திருக்கும் ஊரில், தில்லான பெயர்கொண்டவர் துணை அதிகாரியாகப் பணியாற்றினார். இவர் 7 லட்ச ரூபாய் மதிப்பிலான கார் ஒன்றைப் பரிசாகப் பெற்றுக்கொண்டு, அப்பகுதியிலுள்ள அரசுப் புறம்போக்கு மற்றும் பிரச்னைக்குரிய நிலங்களை முறைகேடாகப் பட்டா மாறுதல் செய்துகொடுத்தாராம். இதையடுத்து, துணை அதிகாரியை வேறு ஊருக்கு மாற்றியடித்தது மாவட்ட நிர்வாகம். ‘பரிசாக கார் பெற்றவரைப் பக்கத்து ஊருக்கு அனுப்பவதுதான் தண்டனையா... துறைரீதியாக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா?’ என அப்பகுதியினர் புலம்பிவருகின்றனர். சம்பந்தப்பட்ட துணை அதிகாரியோ, எம்.எல்.ஏ ஒருவரின் அனுசரணையில் எந்த பயமும் இல்லாமல் உற்சாகமாக அதே காரில் உலாவருகிறாராம்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

கடலைபோட்டுக் கடுப்பேற்றும் அதிகாரி!

அரிதான மாவட்டத்தில் தாசில்தாராகப் பணியாற்றும் சந்தோஷமான பெயர்கொண்ட அதிகாரி, பெண்களுக்கு ஒரு பிரச்னை என்றால், ஐஸ்கட்டிபோல உருகி ஓடுகிறாராம். பிரச்னை என அவரிடம் செல்லும் பெண்களிடம், அதைத் தீர்த்துவைப்பதுபோலப் பேச்சுக்கொடுத்து, செல்போனில் ‘கடலைபோட்டு’ கருகக் கருக வறுக்கிறார் என்கிறார்கள் சக ஊழியர்கள். அவரது அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் கையெழுத்து வாங்கச் சென்றால், ஒரு மணி நேரத்துக்கு மேல் உட்காரவைத்துக் கொஞ்சலாகப் பேசிக் கடுப்பேற்றுகிறாராம். “நான் கிளம்புறேன்... வேலை இருக்கு சார்” எனச் சொன்னால்கூட, “அங்க போய் என்ன பண்ணப்போற... எல்லா ஃபைலையும் இங்க எடுத்துட்டு வந்து பாரு” எனச் செல்லமாகச் சிணுங்குவாராம். இந்தப் புகார் உயரதிகாரிகளுக்குச் சென்றதும், சமீபத்தில் அவரை வேறு இடத்துக்கு டிரான்ஸ்ஃபர் செய்திருக்கிறார்கள். ஆனால், அங்கும் தன் லீலைகளை அரங்கேற்ற ஆரம்பித்துவிட்டாராம் சந்தோஷ அதிகாரி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

“தேரை இழுத்து தெருவுல விட்டுட்டாய்ங்களே..!”

தேர் மாவட்டத்திலுள்ள நகராட்சி அதிகாரி, விதிமுறைக்குப் புறம்பான கான்கிரீட் குப்பைகளுக்கு அனுமதி வழங்கிய வகையில் கிடைத்த லட்டுகளை ஸ்வீட் பாக்ஸ்களில் அழகாக அடுக்கிவைத்திருந்திருக்கிறார். விஷயம் லீக்காகி, தொடர் குற்றச்சாட்டுகள் கிளம்ப... மனிதர் வேறு மாவட்டத்துக்குத் தூக்கியடிக்கப்பட்டார். ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், பெரிய இடத்து பிரமுகருக்குச் சுளையாகப் பத்து லட்டுகளை நன்கொடையாகக் கொடுத்து, மீண்டும் தேர் மாவட்டத்துக்கே டிரான்ஸ்ஃபரில் வந்துவிட்டார். ஆனால், சிட்டிங் எம்.எல்.ஏ-வுக்கோ இந்த அதிகாரியைக் கண்டாலே அலர்ஜி. ‘‘போன ஆட்சியில அமைச்சரோடு நெருக்கமா இருந்து, என்னை அவமானப்படுத்தியவன்யா... இந்த ஆளு. இவனை இங்கிருந்து டிரான்ஸ்ஃபர் பண்ணாம ஓய மாட்டேன்’’ என்று கரைவேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, எல்லா திசைகளிலும் புகார்தட்ட... லஞ்ச ஒழிப்புத்துறை இப்போது அதிகாரியைக் குறிவைத்துக் காத்திருக்கிறது! ‘தேரை இழுத்து, இப்பிடித் தெருவுல விட்டுட்டாய்ங்களே...’ எனக் கன்னத்தில் கைவைத்துப் புலம்புகிறார் அதிகாரி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism