Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய்

Published:Updated:
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

எல்லாமே பொய்யா கோப்ப்பால்..!

மேற்கே உள்ள முக்கிய மாவட்டத்தில் உச்ச அதிகாரியாக இருக்கும் அவர், பொதுநிகழ்ச்சிகளில் பேசும்போது, துணிச்சல்மிக்க, பராக்கிரமசாலிபோல தன்னைக் காட்டிக்கொள்கிறாராம். இதைப் பார்த்து புல்லரித்துப்போகும் பொதுமக்கள், பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத தங்களது புகார்களை மிகுந்த நம்பிக்கையோடு அவரிடம் கொண்டுசெல்கின்றனர். புகார்களில் பெரும்பான்மையானவை, அரசியல்புள்ளிகளின் அட்ராசிட்டிகள் சம்பந்தப்பட்டவை. வெளியில் துணிச்சல்மிக்கவராகக் காட்டிக்கொள்ளும் அந்த அதிகாரி, புகார்களைப் பார்த்ததும் பதறி ‘பேக்’ அடிக்கிறாராம். புகார்தாரர்களை தனியாக அழைத்து, “இது மேலிடத்து விவகாரம்” என்று பயத்துடன் சொல்லும் அவர், அவர்கள் தன்னை மறுபடியும் தொடர்புகொள்ள முடியாதபடி பிளாக் லிஸ்ட்டில் போட்டுவிடுகிறாராம். “அப்ப மேடையில் பேசியது எல்லாமே பொய்யா கோப்ப்பால்..” என்று குமுறியவாறே கண்களைத் துடைத்துக்கொள்கின்றனர் புகார்தாரர்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

யாமிருக்க பயமேன்?

வெயில் மாநகராட்சியில் ‘வசூல்’ ராஜாவாக வலம்வந்த 2-வது மண்டலத்தின் அறிவானவர், அல்வா மாநகராட்சிக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், `வசூலூ’ரைப் பிரிய மனமில்லாத அறிவு, தொடர்ந்து இங்கேயே பணியைத் தக்கவைக்கும் வேண்டுதலோடு லோக்கல் முருகப்பெருமான் எம்.எல்.ஏ-வை தரிசித்து, சில லட்டுகளைக் காணிக்கையாக்கியிருக்கிறார். `முருகப்பெருமானி’ன் அருட்பார்வையால், இப்போது டிரான்ஸ்ஃபர் ஆர்டரைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சிகள் ஜரூராக நடந்துவருகின்றன.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆணையரைக் கண்டிக்க போட்டாச்சு லீவு...!

வறட்சிக்கு வாக்கப்பட்ட மாவட்டத்தில் ஒரு நகராட்சியின் ஆணையராக இருக்கும் அதிகாரி, சக ஊழியர்களைக் கண்டபடி வசைபாடுவதையே வழக்கமாக வைத்திருப்பவராம். சில தினங்களுக்கு முன்பு பெண் அலுவலர்கள் உள்ளிட்ட அத்தனை பேரையும் தன்னுடைய அறைக்கு அழைத்து, அவமரியாதையாகவும், ஒருமையிலும் திட்டித் தீர்த்திருக்கிறார். ஆத்திரமடைந்த ஊழியர்கள் அனைவரும் ஆணையருக்கு ஆப்படிக்கும்விதமாக ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக லீவு லெட்டர் எழுதிக் கொடுத்துவிட்டு, வீட்டில் உட்கார்ந்துகொண்டார்கள். நகராட்சி அலுவலகத்துக்கு குறைகளைத் தெரிவிக்கவந்த பொதுமக்கள், அலுவலகத்தில் ஒருவர்கூட பணியில் இல்லாததைக் கண்டு ஷாக்காகியிருக்கிறார்கள். காரணத்தை விசாரித்து அறிந்த அவர்கள், “கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனா.... அங்கே ரெண்டு கொடுமை....” என்று தலையில் அடித்துக்கொண்டார்களாம்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

மலையேற காணிக்கை!

குளுகுளு மலை மாவட்டத்தின் போக்குவரத்துத் துறையில், பணியாற்றிவரும் பெண் அதிகாரி அவர். மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றிவரத் தடை இருப்பதைக் காரணம் காட்டி மலையேறும் சரக்கு வாகனங்களிடமெல்லாம் வசூல்வேட்டை நடத்துகிறாராம் அம்மணி. ஒரு லாரிக்கு மாதம் 2,000 ரூபாய் என்ற அளவில் லாரி ஓனர்களிடம் டீலிங் பேசி உடன்படிக்கை செய்துகொள்வது இவரது ஸ்டைல். அந்த ‘ஆத்தா’வுக்கு 2,000 ரூபாய் காணிக்கை என்றால், அவரது வாகன ஓட்டிக்குத் தனியாக 200 ரூபாய் காணிக்கையாம். இந்த உடன்பாட்டுக்கு ஒத்துக்கொள்ளாத லாரிகளுக்கு 10,000 ரூபாய் ஸ்பாட் ஃபைனாம். அதிகாரியின் ஒப்பந்த ‘டோக்கன் டைரி’யைக் கைப்பற்றினால், மொத்தத் தொகையைப் பார்த்து தலையே சுற்றிவிடும் என்கிறார்கள் லாரி ஓனர்கள்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

சில்லறையும் சில்மிஷமும்...!

மேற்குத் தொடர்ச்சி மலையடிவார மாவட்டத்தில் பணிபுரியும் ‘அழகான’ பெயர்கொண்ட வேளாண்மை இணை இயக்குநர், பணியில் சேர்ந்தது முதல் ஒரே மாவட்டத்திலேயே பணியாற்றிவருபவர் என்ற பெருமைக்குரியவர். தன் அலுவலகத்தில் பெண் அலுவலர்கள் அதிக எண்ணிக்கையில் வேலையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளும் அவர், இரவாகிவிட்டால் அவர்களின் வாட்ஸ்அப்பில் தலைகாட்டி, தொந்தரவு கொடுக்கிறாராம். எதிர்ப்பு தெரிவிக்கும் பெண் ஊழியர்களுக்கு பணிரீதியான நெருக்கடியும் தருகிறாராம். சிலரை அந்த இரவு நேரத்திலும், ‘அலுவலகம் தொடர்பான விவரங்களை உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று அலுவலகத்துக்கு வரச் சொல்லி டார்ச்சர் செய்கிறாராம். இந்த சில்மிஷ வேலைகளுக்கு நடுவே, மண் அள்ள தடையில்லாச் சான்று வழங்குவதிலும் நல்ல சில்லறை பார்க்கிறாராம். கேரளாவில் சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பதாகவும் இவர்மீது புகார் இருக்கிறது. “கடந்த ஆட்சியில் பெரியவரின் ஆசி இருந்தது. இப்போதும் இவர் அதிகாரம் மிக்கவராக வலம்வரக் காரணம் என்ன?!” என்று தெரியாமல் புலம்புகிறார்களாம் பெண் ஊழியர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism