Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய், ஓவியங்கள்: கண்ணா

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய், ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

மினி பஸ்ஸும்... ரகசிய உறுதிமொழியும்!

குளுமையான மாவட்டத்தில், பெரும்பாலான மலைக்கிராம மக்கள் தனியார் மினி பஸ்களை மட்டுமே நம்பியுள்ளனர். ஆனால், மலைக்கிராம ரூட்டில் பேருந்தை இயக்கும்போது, வசூல் பெரிதாகக் கிடைப்பதில்லை என்பதால், ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி நகர எல்லையிலேயே வண்டியைத் திருப்பிவிடுகிறார்களாம். இதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ‘அரசின் அனுமதி ரத்தாகிவிடக் கூடாது’ என்பதற்காக, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு மினி பஸ் ஓனர்கள் மாதம் தவறாமல் கப்பம் கட்டி வருகிறார்களாம். அண்மையில், கண்துடைப்புக்காக மூன்று மினி பஸ்களை மட்டும் சிறைப்பிடித்து அபராதம் விதித்த அதிகாரி, “உங்க லாபத்துக்குத் தகுந்த மாதிரி வண்டியை ஓட்டுங்க... மத்ததை நான் பார்த்துக்குறேன்...” என மினி பஸ் ஓனர்களுக்கு ரகசிய உறுதிமொழியும் கொடுத்திருக்கிறாராம். வண்டி தப்பான ரூட்ல போகுதே!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘‘அங்க கொடுத்ததைவிட உங்களுக்கு எக்ஸ்ட்ரா தர்றேன்!’’

கடந்த அ.தி.மு.க ஆட்சியில், மேற்கில் பவர்ஃபுல்லாக இருந்த மாஜி அமைச்சரின் உதவியுடன் கல்லாகட்டி வந்தவர் அந்த ‘சிங்’ அதிகாரி. மாஜியும் அதிகாரியும் நீண்டகால தோஸ்துகள் என்பதால், ஆட்சி மாறியதும் இந்த அதிகாரி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியது. ‘இனி அவ்வளவுதான்’ என்று துறையிலுள்ள மற்ற அதிகாரிகள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், அதிகாரியோ, தற்போது அதே மேற்கில் பவர்ஃபுல்லாக இருக்கும் அமைச்சரின் ரூட்டைப் பிடித்து டீல் பேசிவிட்டாராம். “அங்க கொடுத்ததைவிட உங்களுக்கு எக்ஸ்ட்ரா தர்றேன்” எனப் பசையை பலமாக இறக்கிவிட்டு, இப்போதும் கல்லாகட்டிக்கொண்டிருக்கிறாராம். மேற்கு வாழ்கிறது!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

பிடித்துக்கொடுத்த மக்கள்... அவிழ்த்துவிட்ட அதிகாரிகள்!

நாய்களுக்குப் பெயர்பெற்ற ஊரிலிருந்து பால்கோவா நகருக்கு மணல் கடத்திவந்த மூன்று லாரிகளைச் சிறைப்பிடித்து, அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர் ஊர் மக்கள். மணலும் வண்டியுமாக வசமாகச் சிக்கிய மூன்று லாரிகளும் ஆளுங்கட்சி நபருக்குச் சொந்தமானவை என ‘சுவரொட்டி’ ஒட்டாத குறையாகத் தெரியவந்தது. ‘எதுக்கு வம்பு’ என்று பிடிபட்ட லாரிகளை ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே கட்டிலிருந்து அவிழ்த்துவிட்டுவிட்டனர் அதிகாரிகள். விஷயத்தைக் கேள்விப்பட்ட பொதுமக்களோ, ‘அதிகாரிங்க செய்யவேண்டிய வேலையை உயிரைப் பணயம் வெச்சு நாங்க செஞ்சு கொடுத்தா, இவங்க நம்மை இப்படி இளிச்சவாயன்களா ஆக்கிட்டாங்களே....’ என அதிகாரிகளைத் திட்டித் தீர்க்கின்றனர். மண்ணள்ளிப் போடுங்க!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

கையூட்டு மன்றத் தலைவர்!

‘குயின்’ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டெழுத்து அதிகாரியை ‘கையூட்டு மன்றத்தின்’ தலைவராகவே கொண்டாடுகிறார்கள் லஞ்சம் பெறும் உத்தமர்கள். அந்த அளவுக்கு வசூலில் கொடிகட்டிப் பறக்கிறாராம் இரண்டெழுத்தர். கோணமான ஊரில் தாசில்தாராக இருந்தபோதே அதிகாரியின் பெயர் படு ரிப்பேராம். இங்கு வந்த இடத்திலும், ஆட்சியரின் பெயரில் வரும்படித் துறையில் மாமூல் வேட்டை நடத்திக்கொண்டிருக்கிறார். சமீபத்தில்கூட கோடிக்கணக்கான மதிப்பு நிலங்களை வாங்கி, தன் உறவினர் பெயரில் ரெஜிஸ்டர் செய்திருக்கிறாராம். ஆனாலும் இவர்மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. “பங்கு யார், யாருக்குச் செல்கிறதோ...” என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் அப்பாவிப் பொதுமக்கள்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆனந்தம் போச்சு... ஆவேசம் வந்தாச்சு!

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த நகரில், உற்சாக பானம் விற்கும் கடைகளைக் கண்காணிக்கும் துறையில் இருக்கிறார் அந்த ஆனந்தமான அதிகாரி. உற்சாக பான விற்பனையாளர்கள் மற்றும் உற்சாக பானக் கூடம் நடத்துவோர் அதிகாரிக்கு மாதா மாதம் கப்பம் கட்டி ஆனந்தப்படுத்த வேண்டுமாம். ஆனால், தனக்குக் கட்டவேண்டிய கப்பத்தை மாதா மாதம் அதிகாரி உயர்த்திக்கொண்டே போக... தாக்குப்பிடிக்க முடியாத பான விற்பனையாளர்களும், கூடம் நடத்துபவர்களும் இது குறித்துச் சமூக ஊடகத்தில் தகவலைப் பரப்பிவிட்டனர். இதனால் ஆனந்தம் மறைந்துபோய் ஆவேசமான அதிகாரி, அந்த ஊடகப் பரப்புரையைச் செய்தவர்கள் என்று மூன்று விற்பனையாளர்களை இடைநீக்கம் செய்துவிட்டார். கொந்தளித்துப்போன ஒட்டுமொத்த ஊழியர்களும், ஆனந்த அதிகாரியின் ஊழல் பட்டியலை இப்போது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பியுள்ளனர்!