Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

கடலைமிட்டாய்க்குப் பெயர்போன ஊரிலுள்ள மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில், பெருமாள் பெயர்கொண்ட டாக்டர் கொரோனா வார்டில் டூட்டி பார்க்கிறார்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

கடலைமிட்டாய்க்குப் பெயர்போன ஊரிலுள்ள மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில், பெருமாள் பெயர்கொண்ட டாக்டர் கொரோனா வார்டில் டூட்டி பார்க்கிறார்.

Published:Updated:
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

“கலெக்டரோட பி.ஏ எனக்கு நல்ல பழக்கம்...” - கறக்கும் அலுவலர்!

தேருக்குப் புகழ்பெற்ற மாவட்டத்தில், கிராமப்புறப் பள்ளிக்கூடம் ஒன்றில் சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றும் பெண் ஒருவர், டிரான்ஸ்ஃபருக்கு முறைப்படி விண்ணப்பித்திருக்கிறார். விண்ணப்பித்த விஷயம் சுகாதாரத்துறையில் பணியாற்றும் ‘உண்மை’ அலுவலருக்குத் தெரியவர... ‘கலெக்டரோட பி.ஏ எனக்கு நல்ல பழக்கம்... 50,000 பணம் கொடுத்தால் உடனடியாக டிரான்ஸ்ஃபர் வாங்கிடலாம்’ எனச் சொல்லி, அந்தப் பெண்ணிடம் பணத்தைக் கறந்துவிட்டாராம். இதற்கிடையே, இயல்பாகவே அந்தப் பெண்ணின் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பம் மேலதிகாரிகளால் பிராசஸ் செய்யப்பட்டு, டிரான்ஸ்ஃபர் ஆர்டர் கிடைத்திருக்கிறது. சுகாதாரத்துறை அலுவலர் மூலம்தான் இந்த டிரான்ஸ்ஃபர் ஆர்டர் கிடைத்ததாக, அந்தப் பெண் சக ஊழியர்களிடம் சொல்லியிருக்கிறார். இந்த விஷயம் சத்துணவு மேலதிகாரியின் கவனத்துக்குச் சென்றதும், அவர் அதிர்ச்சியடைந்துவிட்டாராம். உடனடியாகக் கடும் கோபத்தோடு அந்தச் சுகாதாரத்துறை அலுவலருக்கு போன் செய்து “நீங்க வேற டிபார்ட்மென்ட்... நாங்க வேற டிபார்ட்மென்ட்... உங்களுக்கும் இந்த டிரான்ஸ்ஃபருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையே... பொய் சொல்லிப் பணத்தை வாங்கி ஏமாத்தியிருக்கீங்களே...’’ என எகிறிவிட்டாராம். இதனால் கடுப்பாகிப்போன சுகாதாரத்துறை அலுவலர், சத்துணவு அதிகாரியைப் பற்றி வாட்ஸ்அப் குரூப்களில் அவதூறு பரப்பிவருவதாகச் சர்ச்சை வெடித்திருக்கிறது. இப்போது, இந்தப் பஞ்சாயத்து கலெக்டரின் கவனத்துக்குச் சென்றிருக்கிறதாம்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

“எனக்கு வணக்கம்வெக்க மாட்டீங்களா..?” - மரியாதைக்கு மல்லுக்கட்டும் மருத்துவர்

கடலைமிட்டாய்க்குப் பெயர்போன ஊரிலுள்ள மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில், பெருமாள் பெயர்கொண்ட டாக்டர் கொரோனா வார்டில் டூட்டி பார்க்கிறார். அந்த வார்டில் கிளைச்சிறைக் கைதிகள் மூன்று பேர் சிகிச்சை மேற்கொண்டுவருகிறார்கள். மூன்று கைதிகளுக்கும் மூன்று போலீஸார் பாதுகாப்பு பணியில் உள்ளார்கள். அந்த டாக்டர் கோட் அணியாமல் வார்டு வளாகத்துக்குள் நடந்துவந்தபோது, மூன்று போலீஸாரும் அந்த டாக்டருக்கு ‘வணக்கம்’ வைக்கவில்லையாம். “10-ம் கிளாஸ் படிச்சுட்டு போலீஸ் வேலைக்கு வந்தவங்களுக்கு டாக்டரை எப்படி மதிக்கத் தெரியும்?” எனச் சொன்னதோடு, அந்த மூவர்மீதும் ‘பாதுகாப்பு சரியில்லை’ எனச் சொல்லி டி.எஸ்.பி-யிடம் புகார் சொல்லியிருக்கிறார். பதிலுக்கு டாக்டர்மீது மூன்று போலீஸாரும் புகார்களை அடுக்க, குழப்பிப்போனாராம் அந்த டி.எஸ்.பி. “அந்த டாக்டருக்கு வணக்கம்வெக்கலைன்னா கோவம் வந்துரும். இத்தனை நாள் நாங்க சிக்கித் தவிச்சோம். இப்போ நீங்க மாட்டிக்கிட்டீங்களா?” என போலீஸாரிடம் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள் மருத்துவமனைப் பணியாளர்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

“எல்லாம் என் இஷ்டம்!” - ஆட்டம் போடும் அதிகாரி!

காரைக்கால் மாவட்டக் கூட்டுறவுத்துறையில், இலங்கை அரசர் பெயரைக்கொண்ட ஒருவர், கண்காணிப்பு அலுவலராக இருக்கிறார். மாவட்டத்திலுள்ள எல்லாக் கூட்டுறவு சங்கங்களில் நடக்கும் முறைகேடுகளையும் கண்டறிந்து, பட்டியலிட்டு, சம்பந்தப்பட்ட வர்களை வரவழைத்து கொஞ்சம் கோபத்தைக் காட்டி, இறுதியில் ஒரு பெரும் தொகையைக் கறந்துவிடுவது இவர் வழக்கமாம். ஒரு வேளாண் கூட்டுறவு சங்கத்தில், தான் கல்லா கட்டுவதற்கு உதவும் சாதாரண எழுத்தராக இருந்த ஒருவருக்கு, ‘மேனேஜர் பொறுப்பு’ பதவியைக் கொடுத்து சம்பளத்தையும் அதிகப்படுத்தித் தந்திருக்கிறார். அதுபோல, ஓட்டுநர் உரிமம் பெறாத ஒருவரை ஓட்டுநராகப் பணியில் அமர்த்தி சம்பளம் தருகிறார். இதைத் தணிக்கையில் கண்டறிந்த தணிக்கைத்துறை, ‘அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று பரிந்துரை செய்தும்கூட, அந்த உத்தரவை இன்றுவரை மதிக்காமல், தன் இஷ்டத்துக்கு ஆட்டம் போடுகிறார் அந்த அதிகாரி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

“முக்கியமான பேப்பர் இல்லையே...” - இறங்கி வசூல் பண்ணும் மாவட்ட அதிகாரி!

சமூக வலைதளங்களில் க்ளீன் அண்ட் க்ளியர் இமேஜ் வைத்திருக்கும் மேற்கு மாவட்ட அதிகாரி அவர். ஆனால், நிஜத்தில் ஊழல் கறைபடிந்த கையென்றே அவரைப் பற்றி புகார்கள் வட்டமடிக்கின்றன. எந்த ஆவணம் நகர்ந்தாலும், அதில் தனக்கான கட்டிங் பங்கு வந்து சேர வேண்டும் என்று கறார் காட்டுகிறாராம். ஒருவேளை அவருக்கான பங்கு வந்து சேரவில்லை என்றால், “இந்த ஃபைலில் முக்கியமான ஆவணம் இல்லை. அதனால், கையெழுத்து போட மாட்டேன்” என்று பிடிவாதம் பிடிக்கிறாராம். “இவரு என்னங்க... இப்படி இறங்கி வசூல் பண்றாரு?!” என்று அவருக்குக் கீழ் பணியாற்றுபவர்களே அதிர்ந்துபோயிருக்கிறார்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

பணத்தைக் கையில் வைத்தால், பிணத்தை ஒப்படைப்போம்!

மலை மாவட்டத்தின் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அனாடமி துறை உதவிப் பேராசிரியர் அவர். பிணங்களை வைத்து இவர் செய்யும் வசூல் அட்ராசிட்டியால், மலை மாவட்டத்தின் அப்பாவி மக்கள் கோபத்தில் கொந்தளிக்கிறார்கள். மார்ச்சுவரிக்கு வரும் உடல்களை உடனடியாக போஸ்ட்மார்ட்டம் செய்ய இரண்டாயிரம், போஸ்ட்மார்ட்டம் செய்யாமலேயே செய்ததாக உறவினர்களிடம் ஒப்படைக்க ஐந்தாயிரம் என விலைப்பட்டியல் வைத்து கல்லாகட்டுகிறாராம் அவர். இது தவிர, நகராட்சியில் இறப்புச் சான்றிதழை உடனடியாகப் பெறுவதற்கான ஏ.4 விண்ணப்பத்துக்கு இரண்டாயிரத்தைக் கறாராக வாங்கிவிடுவாராம். பணத்தைக் கையில் வைத்தால் மட்டுமே பிணத்தை ஒப்படைப்போம் என்று அறிவிக்கப்படாத சட்டத்தையே வைத்திருக்கிறார். “சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், இதுவரை அவர்மீது எந்த நடவடிக்கையும் இல்லை!” என்று புலம்புகிறார்கள் மலை மாவட்ட மக்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism