Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய்

Published:Updated:
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘‘கேஸெல்லாம் எனக்குத் தூசு!’’ - வசூல் அதிகாரியின் பஞ்ச் டயலாக்...

கொங்கு மண்டலத்தின் மூன்றெழுத்து மாவட்டத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் துணைப் பொறுப்பில் இருக்கும் ‘மில்க்’ பிரமுகரின் வசூல் வேட்டையைப் பார்த்து சக அதிகாரிகளே வாயைப் பிளக்கிறார்கள். இந்த மாவட்டத்தில் கல்குவாரிகள், கிரானைட் குவாரிகள், செங்கல் சூளை, மேக்னசைட் மற்றும் வெள்ளை கல்குவாரிகள் அதிகம் இருக்கின்றன. அவற்றில் பாதிக்குப் பாதி உரிய அனுமதி இல்லாமல் விதிகளை மீறி இயங்கிவருகின்றன. இங்கெல்லாம் மாமூல் மட்டுமே, மாதத்துக்கு ஒரு பெரிய ஸ்வீட் பாக்ஸ் அளவுக்குக் கறந்துவிடுகிறாராம் அதிகாரி. சமீபத்தில், மாங்கனி மாவட்டத்தில் இருக்கும் இந்த அதிகாரியின் வீட்டில் சோதனை நடத்தி, 40 லட்சம் ரூபாய் வரை கைப்பற்றினார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினர். அது தொடர்பாக வழக்கு பதியப்பட்டும், அதிகாரிமீது நடவடிக்கை இல்லை. இது பற்றித் தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசுபவர், “கேஸெல்லாம் எனக்குத் தூசு!” என்று பன்ச் டயலாக் அடித்துவருகிறார்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

“கமிஷன் விஷயத்துல மேடம் ரொம்பக் கறார்!”

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நகராட்சி அலுவலகம் ஒன்றில், கணக்கு வழக்குகளை கவனிக்கும் பெண் அலுவலரின் கமிஷன் அட்ராசிட்டி தாங்க முடியவில்லை என்கிறார்கள். இங்கிருந்து எந்த பில் பாஸாக வேண்டும் என்றாலும் இவரது கையெழுத்து அவசியம் என்பதால், ஒப்பந்ததாரர்களிடம் பில் தொகைக்கு ஏற்ப ஐந்தாயிரம் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரை கட் அண்ட் ரைட்டாக கமிஷன் வாங்கிவிடுகிறாராம். இது குறித்துப் பேசும் அந்த நகராட்சி ஊழியர்கள், ‘‘இவர் இந்த சீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியெல்லாம், பில் பாஸாக ஒரு சின்னத் தொகையைத்தான் கமிஷனா வாங்குவாங்க. ஒருவேளை ஒப்பந்ததாரர் தரலைன்னாக்கூட நாலஞ்சு தடவை அலையவிட்டு, பில் பாஸ் பண்ணிடுவாங்க. ஆனா, இவங்க கமிஷன் விஷயத்துல ரொம்பவே கறாரா இருக்காங்க. இவங்க மேல புகார் அதிகரிச்சதால சமீபத்துல இவங்களை வேற சீட்டுக்கு கமிஷனர் மாத்திட்டார். ஆனா, ஆளுங்கட்சி ஆட்களைப் பிடிச்சு மறுநாளே அதே சீட்டுக்கு வந்துட்டாங்க மேடம்!’’ என்கிறார்கள்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

“உயரதிகாரிகள் போய்விடுவார்கள்... நானே நிரந்தரம்!”

மேற்கு மண்டலத்தின் முக்கிய மாவட்டத்தில் சுமார் 20 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிகிறார் முருகப்பெருமானின் பெயரைக்கொண்ட அந்த உதவி அதிகாரி. உயரதிகாரிகள் யார் வந்தாலும், தனது பவர் பாலிடிக்ஸால் அவர்களை கன்ட்ரோலில் எடுத்துவிடும் அந்த உதவி அதிகாரி, ‘‘உயரதிகாரிங்க ரெண்டு மூணு வருஷம்தான் இங்க இருப்பாங்க... இங்க நான்தான் நிரந்தரம்’’ என்று சொல்லியே வேட்டைத்தடுப்பு காவலர்கள் முதல் வனச்சரகர்கள் வரை மிரட்டி, கமிஷனில் கல்லாகட்டுகிறார். ‘‘அ.தி.மு.க., தி.மு.க-னு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தனக்கான நெட்வொர்க்கை வெச்சுக்கிட்டு அட்ராசிட்டி செய்யறாரு. இதுக்கு ஒரு எண்டு கார்டே இல்லையா?’’ என்று உள்ளூர் வனத்துறை ஊழியர்கள் புலம்புகிறார்கள்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

துறைத்தலைவருக்கே டஃப் ஃபைட்! - இன்சார்ஜ் அதிகாரி ஆட்டம்...

சென்னையின் முக்கியமான இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இன்சார்ஜ் அதிகாரியாக இருக்கும் டாக்டர் ஒருவர், சில அமைச்சர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு துறைத்தலைவருக்கே டஃப் ஃபைட் கொடுக்கிறாராம். இத்தனைக்கும் அந்தத் துறைத்தலைவர் ஆட்சி மேலிடத்துக்கு நெருக்கமான உறவுக்காரர். சமீபத்தில் நடந்த கவுன்சலிங் மூலமாக, பெண் டாக்டர் ஒருவர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்குக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், தனக்கு பவர் போய்விடும் என்பதற்காக, அந்தப் பெண் டாக்டரை மிரட்டி விடுமுறையில் அனுப்பிவிட்டாராம் இன்சார்ஜ் அதிகாரி. கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது அமைச்சர்களோடு இருந்த நட்பால்தான் இன்சார்ஜ் அதிகாரிக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டதாம். இதையடுத்து, “ஆட்சி மாறியும் காட்சி மாறலை” என்று மருத்துவமனை ஊழியர்கள் புலம்பியது, துறைத்தலைவர் கவனத்துக்குச் செல்ல... இன்சார்ஜ் அதிகாரியை அழைத்து விசாரித்திருக்கிறார். அடுத்த சில நிமிடங்களிலேயே பவர்ஃபுல் அமைச்சர்கள் சிலரிடமிருந்து வந்த போன் கால்களால் துறைத்தலைவர் அமைதியாகிவிட்டாராம்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

மலை மாவட்ட டாஸ்மாக் மாமூல்... டோர் டெலிவரி செய்ய உத்தரவு!

மலை மாவட்டத்தில் ஓரிரு வருடங்களுக்கு முன்பு 130 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கிவந்தன. கடந்த காலங்களில் மக்கள் போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்பட்டு, தற்போது 75 கடைகள் மட்டுமே இயங்கிவருகின்றன. இதனால், ஒரு கடைக்கு மாதம் 25,000 ரூபாய் மாமூல் வசூலித்துக்கொண்டிருந்த டாஸ்மாக் அதிகாரி ஒருவருக்கு வருமானம் குறைந்துவிட்டது. அதை ஈடுகட்ட சமீபத்தில் கடைக்கு 5,000 ரூபாயை உயர்த்தி மாதம் 30,000 ரூபாயாக மாமூலை நிர்ணயித்துள்ளார் அந்த அதிகாரி. அதிலும் மாதம்தோறும் 10-ம் தேதிக்குள் வீட்டுக்கே மாமூலை டோர் டெலிவரி செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு வாய்மொழி உத்தரவும் போட்டிருக்கிறாராம். தவிர, மூடப்பட்ட மதுக்கடைகளை ஒவ்வொன்றாகத் திறக்கவும் லட்சங்களில் பேரம் பேசிவருகிறார் அதிகாரி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism