Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

உங்க வீட்டு வேலையைச் செய்ய நான் அரசுப் பணிக்கு வரலை’’ என்று சொல்ல... ஆத்திரமடைந்த அதிகாரி, அந்த ஊழியரின் சம்பளத்தைக் கடந்த ஆறு மாதங்களாகக் கொடுக்கவிடாமல் தடுத்துவருகிறார்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

உங்க வீட்டு வேலையைச் செய்ய நான் அரசுப் பணிக்கு வரலை’’ என்று சொல்ல... ஆத்திரமடைந்த அதிகாரி, அந்த ஊழியரின் சம்பளத்தைக் கடந்த ஆறு மாதங்களாகக் கொடுக்கவிடாமல் தடுத்துவருகிறார்.

Published:Updated:
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

தொட்டதற்கெல்லாம் கமிஷன் - `கறார்’ அதிகாரியின் சித்து விளையாட்டு!

மேற்கு மாவட்டத்தில் பணிபுரியும் அந்த வனத்துறை அதிகாரி, தன்னைக் கறாராக வெளியே காட்டிக்கொண்டாலும் துறைரீதியாகச் செய்யப்படும் சிறு திட்டங்களில்கூட கமிஷன் கறந்துவிடுகிறார். சிறு குற்றச் சம்பவங்களில் நடவடிக்கை எடுப்பதை விளம்பரப்படுத்துபவர், பெரிய குற்றச் சம்பவங்களில் குற்றவாளிகளைத் தப்பவிட்டு லட்சங்களில் கல்லாகட்டுகிறார். வசூலுக்காக வனத்துறை ஆட்களை மட்டுமல்லாமல், சில போலி தன்னார்வலர்களையும் இணைத்துக்கொள்கிறார். முன்பு ஒரு மலைக்கோயிலில் எந்தக் கட்டணமும் வசூலிக்காமல் அனுமதித்துவந்த நிலையில் தற்போது, தலைக்கு நூறு ரூபாய் வசூல் செய்கிறார்கள். அதற்கு ரசீதும் கொடுப்பதில்லை. இதுவும் கறார் அதிகாரியின் சித்து விளையாட்டுதான் என்கிறார்கள் நேர்மையான அதிகாரிகள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘‘வீட்டு வேலை செய்ய நான் வரலை!’’ - மறுத்த ஊழியருக்குச் சம்பளம் கட்!

நீலகிரி மாவட்ட கால்நடைத்துறையின் முக்கியப் பொறுப்பிலிருக்கும் அதிகாரி ஒருவர், தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர் ஒருவரை அழைத்து, தனது குடியிருப்பின் தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யுமாறு கட்டாயப்படுத்தியிருக்கிறார். அதற்கு அந்த ஊழியர், ‘‘உங்க வீட்டு வேலையைச் செய்ய நான் அரசுப் பணிக்கு வரலை’’ என்று சொல்ல... ஆத்திரமடைந்த அதிகாரி, அந்த ஊழியரின் சம்பளத்தைக் கடந்த ஆறு மாதங்களாகக் கொடுக்கவிடாமல் தடுத்துவருகிறார். பாதிக்கப்பட்ட ஊழியர் அதிகாரியின் பழிவாங்கல் குறித்து மாவட்ட அளவிலான மேலதிகாரிகளுக்குப் புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘‘எல்லாத்தையும் எம்.எல்.ஏ-வுக்கு அனுப்பிட்டேன்!’’

மயிலாடுதுறை மாவட்டம் ‘கோவில்’ ஒன்றியத்தில் வேளாண்மை விரிவாக்க அலுவலராகப் பணிபுரிபவர், 13 ஆண்டுகளாக அதே பணியிடத்தில் நங்கூரம் போட்டிருக்கிறார். விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் இடுபொருள்கள், பைப்புகள் ஆகியவற்றைச் சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு, மற்றவற்றை மார்க்கெட்டில் விற்றுப் பணமாக்கிவிடுகிறார். இது பற்றி யாராவது கேள்வி கேட்டால், “ஏரியா எம்.எல்.ஏ-வுக்கு லோடை அனுப்பிட்டேன்... அவர்கிட்ட போய்க் கேளுங்க” என்கிறாராம். இது பற்றிப் பேசும் விவசாயிகள், ‘‘வட்டிக்கு விடுறதுதான் இவரோட தொழில். பத்து வட்டிக்கு பல லட்சம் ரூபாய் வட்டிக்கு விட்டிருப்பவர், சுமார் ரெண்டு கோடி ரூபாய் செலவுல சொகுசு பங்களாவையும் கட்டிக்கிட்டுவர்றாரு. கடந்த ஆட்சியில அ.தி.மு.க முக்கியப் பிரமுகர் ஒருவரைச் சொந்தக்காரருன்னு சொல்லிக்கிட்டவர், இப்போ தி.மு.க நிர்வாகி ஒருத்தரை சொந்தம்னு சொல்லியே விவசாயிகளை ஆட்டிப்படைக்கிறார்” என்று வேதனைப்படுகிறார்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

பெண் ஊழியர்களிடம் சில்மிஷம்! - கண்ணீர்விடும் சுகாதாரப் பணியாளர்கள்...

கடலூர் மாவட்டத்தில் ஆன்மிக மணம் கமழும் நகராட்சியில் சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றிவந்த அதிகாரி ஒருவரும், விநாயகர் பெயர்கொண்ட அலுவலரும் சேர்ந்து கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் வாங்கியதாக போலி பில்களைத் தயார்செய்து பல லட்சங்களைச் சுருட்டிவிட்டார்கள். இன்னொரு பக்கம், இவர்கள் இருவரும் பெண் சுகாதாரப் பணியாளர்களை டார்ச்சர் செய்தே தங்கள் ‘வழிக்கு’ கொண்டுவந்துவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. சமீபத்தில் அந்த சுகாதார ஆய்வாளர் பெண் ஊழியர்கள் சிலரை தனது வீட்டுக்கு வரவழைத்து சில்மிஷம் செய்ய... விவகாரம் புகாராகச் சென்றதை அடுத்து வேறொரு நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அங்கு சென்ற பிறகும் இங்கிருக்கும் வீட்டை காலி செய்யாமல் பெண் ஊழியர்களிடம் சில்மிஷத்தைத் தொடர்கிறாராம். இவர்களின் அக்கிரமத்துக்கு முடிவு கட்டுவது யார் என்று கண்ணீர் வடிக்கிறார்கள் பெண் சுகாதாரப் பணியாளர்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

“அமைச்சர் என் தூரத்து உறவு!” - ஆட்டம்போடும் அதிகாரி

கொங்கு மண்டல மூன்றெழுத்து நகரின் ஆர்.டி.ஓ அலுவலக உயரதிகாரியான ‘மகிழ்ச்சி’ பிரமுகர், மாவட்ட அமைச்சர் தன் தூரத்து உறவு என்று சொல்லியே கல்லாகட்டுகிறார். ஒரு நாளைக்கு இத்தனை ஆயிரம் என்று டார்கெட் நிர்ணயித்து வசூலிப்பவர், அதில் சில ஆயிரங்கள் குறைந்தால்கூட தனக்குக் கீழுள்ள ஊழியர்களை வறுத்தெடுத்துவிடுகிறார். சமீபத்தில் டிரைவிங் பள்ளிகளின் மாத மாமூலை இரு மடங்காக உயர்த்தியபோது பள்ளிகள் தரப்பில் சிலர், ‘லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் சொல்வோம்’ என்று கூற... “தாராளமா சொல்லுங்க. என் பரம்பரையே போலீஸ் குடும்பம். என்னை ஒண்ணும் பண்ண முடியாது” என்று உதார்விடுகிறாராம்!