Published:Updated:

கரூர்: `அமராவதி ஆற்றில் கழிவு கலக்கப்படுகிறதா?' - பரபரக்கவைத்த அதிகாரிகளின் ஆய்வு

கிளை வாய்க்காலில் வரும் கழிவு நீர்
கிளை வாய்க்காலில் வரும் கழிவு நீர் ( நா.ராஜமுருகன் )

'கரூர் அமராவதி ஆற்றில் சாயக்கழிவு கலக்கவிடுபவர்கள்மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை?' என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர் நீதிபதிகள்.

கரூர் அமராவதி ஆற்றில், சட்டவிரோதமாக கழிவுநீர் மற்றும் சாயக்கழிவுகளை கலந்துவிடப்படும் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி மாசுபட்டுப்பாடு வாரிய இணை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

கிளை வாய்க்காலில் வரும் கழிவு நீர்
கிளை வாய்க்காலில் வரும் கழிவு நீர்
நா.ராஜமுருகன்
கரூர்: அமராவதி ஆற்றுக்குள் சாக்கடைக் கால்வாய்... தாமாக வழக்கை எடுத்த உயர் நீதிமன்றக் கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையிலுள்ள அமராவதி அணையிலிருந்து வரும் ஆறு அமராவதி. கரூர் நகரையொட்டி ஓடி, கரூர் மாவட்டத்திலுள்ள திருமுக்கூடலூரில் காவிரியில் கலக்கிறது. இந்த அமராவதி ஆற்றில் சாயப்பட்டறைக் கழிவுகளும், சாக்கடைகளும் கலக்கப்பட்டதால், இந்த ஆறு முற்றிலும் மாசுபட்டுப்போனது. சமூக ஆர்வலர்கள் நீதிமன்றம் வரை சென்று போராடி, 300-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளை மூடவைத்தார்கள். அதன் பிறகு, 100-க்குள் இருக்கும் சாயப்பட்டறைகளில் சில நிர்வாகங்கள், அவ்வப்போது அமராவதி ஆற்றில் கழிவுகளைக் கலப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழும்.

அமராவதி ஆறு
அமராவதி ஆறு
நா.ராஜமுருகன்

இந்தநிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர், அமராவதி ஆற்றில் கரூர் நகராட்சியே முன்னின்று கழிவுநீர் கால்வாய் ஒன்றை ஜே.சி.பி இயந்திரம் மூலம் வெட்டுவதாக, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் புகார் எழுப்பினார்கள். இது பற்றிப் பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த வழக்கைத் தாமாக முன்வந்து எடுத்தது. அதைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு அந்தக் கால்வாயை கரூர் சார்பு நீதிபதி மோகன்ராம் ஆய்வு மேற்கொண்டு, அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்தநிலையில், அமராவதி அணை மழையால் நிரம்ப, அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்தநிலையில்தான், அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுகிறதா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள, விவகாரம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி, மாசுக் கட்டுப்பாடு வாரிய இணை இயக்குநர் மதிவாணன் தலைமையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் கிளை கால்வாய்களில் வரும் தண்ணீரை ஆய்வுக்காகச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கிளை வாய்க்காலில் வரும் கழிவுநீர்
கிளை வாய்க்காலில் வரும் கழிவுநீர்
நா.ராஜமுருகன்

இதற்கிடையில், 'கரூர் அமராவதி ஆற்றில் சட்ட விரோதமாக சாயக்கழிவு மற்றும் கழிவுகள் கலக்கப்படுவதால், ஆறு மாசடைகிறது. நோய் உருவாவதற்கு நாமே காரணமாக இருக்கிறோம். அமராவதி ஆற்றில் சாயக்கழிவு கலக்கவிடுபவர்கள்மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை... டன் கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லையா?' என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள்.

தொடர்ந்து அவர்கள், `அமராவதி ஆற்றில் கலக்கப்படும் சாயக்கழிவுகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், தலைமைச் செயலர் மற்றும் உள்துறை செயலாளருக்கு சம்மன் அனுப்ப நேரிடும்' என எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கரூர் அமராவதி ஆற்றில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய இணை இயக்குநர் மதிவாணன் தலைமையில், பொதுப்பணித்துறை மற்றும் கரூர் நகராட்சி அதிகாரிகள் ஐந்து இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

 சேகரிக்கப்பட்ட கழிவுநீர்
சேகரிக்கப்பட்ட கழிவுநீர்
நா.ராஜமுருகன்

அமராவதி ஆற்றை ஒட்டியிருக்கும் கிளை வாய்க்காலிலும் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில், அந்த அறிக்கையையும் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ளனர். அமராவதி ஆறு மாசடையும் விவகாரத்தில் நீதிமன்றம் சாட்டையைச் சுழற்றுவதால், அமராவதி ஆறு விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் விவசாயிகள்.

அடுத்த கட்டுரைக்கு