Published:Updated:

பா.ஜ.க-வை மிரட்டும் வெங்காயம், பூண்டு!

வெங்காயம், பூண்டு
பிரீமியம் ஸ்டோரி
வெங்காயம், பூண்டு

அவ்வப்போது எகிறும் வெங்காய விலை மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும்தலைவலியைக் கொடுப்பது வாடிக்கை.

பா.ஜ.க-வை மிரட்டும் வெங்காயம், பூண்டு!

அவ்வப்போது எகிறும் வெங்காய விலை மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும்தலைவலியைக் கொடுப்பது வாடிக்கை.

Published:Updated:
வெங்காயம், பூண்டு
பிரீமியம் ஸ்டோரி
வெங்காயம், பூண்டு

வாஜ்பாய், மன்மோகன் சிங் இவர்களையெல்லாம் அலறவைத்த வெங்காய விலை, இப்போது மோடி அரசையும் விட்டுவைக்கவில்லை! கிலோ 70, 80 ரூபாய் எனத் தாறுமாறாக உயர்ந்திருக்கும் வெங்காய விலை, நடுத்தர வர்க்கத்தினரை வெங்காயம் உரிக்காமலேயே ‘கண்ணீர்’ வடிக்கவைக்கிறது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெங்காய விலை உயர்வின் பின்னணி அறிந்தவர்களிடம் பேசினோம். “மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் நகரில் இருக்கும் லசல்கான் சந்தைதான் இந்தியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தை. மகாராஷ்டிர மாநில வெங்காய விவசாயிகள், கடந்த மூன்று ஆண்டுகளாக வறட்சியாலும் மழையாலும் தொடர் நஷ்டத்தைச் சந்தித்துவருகிறார்கள். அதைச் சமாளிக்க முடியாமல், கடந்த ஆண்டு நாசிக்கில் வெங்காய விவசாயிகள் இரண்டு பேர் தற்கொலை செய்துகொண்டனர். இதனால், இந்த ஆண்டு மழைக்கு பயந்து பெரும்பாலான விவசாயிகள் வெங்காய சாகுபடியைக் கைவிட்டுவிட்டார்கள். இப்படி வெங்காய விளைச்சல் குறைந்ததுதான் விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணம். அதேசமயம், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கையிருப்பில் உள்ள வெங்காயத்தையும் வியாபாரிகள் பதுக்கியது, கடுமையான விலை ஏற்றத்துக்குக் காரணமாகிவிட்டது.

பா.ஜ.க-வை மிரட்டும் வெங்காயம், பூண்டு!

பதுக்கலில் ஈடுபடும் பெரும் வியாபாரிகள் அரசியல் செல்வாக்குமிக்கவர்கள். அவர்கள்மீது நேரடியாக நடவடிக்கை எடுக்கத் தயங்கும் மத்திய அரசு, ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை அதிகரிப்பு, ஏற்றுமதிக்கான மானியங்கள் ரத்து என அறிவித்திருக்கிறது. இதன்மூலம் பதுக்கப்பட்ட வெங்காயம் சந்தைக்கு வந்துவிடும் என மத்திய அரசு நம்புகிறது. ‘நாசிக் மற்றும் ஆந்திரத்திலிருந்து கூடுதலாக வெங்காயம் வரவழைக்கப்பட்டு, வெங்காய விலை கட்டுக்குள் கொண்டுவரப்படும்’ என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார். ஆனால், `அந்த மாநிலங்களிலும் விளைச்சல் குறைவு எனும்போது எப்படி கூடுதலாக அங்கிருந்து வரவழைக்க முடியும்?’ என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பதுக்கல் வெங்காயங்களை வெளிக்கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் அவர் அப்படி அறிவித்திருக்கிறார். அதன் பிறகும் பதுக்கல் வெங்காயம் வெளிவராவிட்டால், ‘வியாபாரிகள் வைத்துக்கொள்ள வேண்டிய வெங்காய கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க அரசு பரிசீலிக்கும்’ என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு, ‘ரேஷன் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.33-க்கு விற்கப்படும்’ என அறிவித்திருக்கிறார். என்ன நடக்கும் என்பதை, பொறுத்திருந்த பார்ப்போம்” என்கிறார்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெங்காயத்துடன் கூட்டுசேர்ந்த பூண்டு!

வெங்காயத்தைப்போலவே பூண்டு விலையும் உயர்ந்துவருகிறது. வெளி மாநிலங்களிலிருந்து பூண்டு வரத்து குறைந்ததே இதற்கும் காரணம் என்கிறார்கள். தமிழகத்தில் நீலகிரியிலும் கொடைக்கானலிலுமே விளைச்சல் வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனையான முதல் தரப் பூண்டு, கிலோ 220 ரூபாயைத் தொட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism