Published:Updated:

சின்னச் சின்ன சேமிப்புக்கு சிட் ஃபண்ட்..! - கடன் தேவைகளுக்குக் கைகொடுக்கும்!

சிட் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
சிட் ஃபண்ட்

CHIT FUND

சின்னச் சின்ன சேமிப்புக்கு சிட் ஃபண்ட்..! - கடன் தேவைகளுக்குக் கைகொடுக்கும்!

CHIT FUND

Published:Updated:
சிட் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
சிட் ஃபண்ட்
நாணயம் விகடன் மற்றும் தமிழ்நாடு சிட் ஃபண்ட் கம்பெனீஸ் அசோசியேஷன் இணைந்து நடத்திய ‘சிட் ஃபண்ட் A to Z - முழுமையான வழிகாட்டி’ என்ற நிகழ்ச்சி ஆன்லைன் மூலம் நடந்தது.

இதில், அகில இந்திய சிட் ஃபண்ட்ஸ் சங்கத்தின் பொதுச் செயலாளரும் குறிஞ்சி சிட் ஃபண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநருமான ஏ.சிற்றரசு, தமிழ்நாடு சிட் ஃபண்ட் கம்பெனீஸ் அசோசி யேஷன் தலைவர் மற்றும் சிம்ம வாஹினி சிட் ஃபண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணபாரதி, நிதி நிபுணர் சோம.வள்ளியப்பன் ஆகியோ சிறப்புரையாற்றினார்கள்.

ரூ.60,000 கோடி புரளும் சிட் ஃபண்ட்!

சிட் ஃபண்ட் வரலாறு பற்றி முதலில் பேசினார் எம்.கிருஷ்ண பாரதி. ‘‘சிட் ஃபண்ட் என்பது மத்திய அரசின் சீட்டு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். ரிசர்வ் வங்கி, வங்கிசாரா நிதி அமைப்பாக இதை வகைப் படுத்தியுள்ளது. ரூ.25,000 முதல் ரூ.3 கோடி வரையில் சிட் ஃபண்ட் செயல்படுகிறது. நாடு முழுவதும் 25,000-க்கும் மேற்பட்ட பதிவுச் சீட்டு நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் 60,000 கோடி ரூபாயை நிதிச் சுழற்சி செய்கின்றன.

சோம.வள்ளியப்பன், எம்.கிருஷ்ணபாரதி, ஏ.சிற்றரசு
சோம.வள்ளியப்பன், எம்.கிருஷ்ணபாரதி, ஏ.சிற்றரசு

ரூ.10 லட்சம் மதிப்புள்ள சீட்டு நடத்தப்படுகிறது எனில், அந்த 10 லட்ச ரூபாய்க்கு மதிப்புக்கு ஃபிக்ஸட் டெபாசிட் சான்றிதழ் அல்லது சொத்து ஜாமீன் கொடுக்க வேண்டும். பதிவுச் சீட்டு பரிவர்த்தனை களைத் தமிழக அரசின் பதிவுத் துறை தனது இணையதளமான www.tnreginet.gov.in இணையம் மூலம் பார்த்துத் தெரிந்து கொள்ள வசதி செய்து தந்துள்ளது. பாத்திரச் சீட்டு, பலகாரச் சீட்டு, நகைச் சீட்டு, சுற்றுலாச் சீட்டு, தீபாவளிச் சீட்டு ஆகியவற்றுக்கு அரசின் அங்கீகாரம் கிடையாது என்பதால், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்” என்றார்.

வெளிப்படைத்தன்மை..!

ஏ.சிற்றரசு பேசும்போது, ‘‘நம் நாட்டில் பதிவு செய்யப்பட்ட சிட் ஃபண்டுகளை சுமார் ஒரு கோடி பேர் பயன்படுத்தி லாபம் அடைந்து வருகிறார்கள். சிட் ஃபண்ட் என்பது ஓர் ஒப்பந்தம். அரசு விதிமுறைக்கு உட்பட்டு இவை செயல்பட்டு வருகின்றன. இதில், வெளிப்படைத் தன்மை அதிகமாக உள்ளது. எவ்வளவு தள்ளி சீட்டு எடுக்கப் பட்டிருக்கிறது என்ற விஷயம் அனைவருக்கும் தெரியும். வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், பரஸ்பர நிதிகள், குழு நிதி அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கிகள் ஆகிய அமைப்புகள் வழங்கும் நிதிச் சேவைகள் அனைத்தையும் ஒருங்கே அளிக்கும் நிதி அமைப்பாக சிட் ஃபண்டுகள் உள்ளன. கேரள மாநில அரசும், கர்நாடகா மாநில அரசும் இந்த சிட் ஃபண்டுகளை பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றன’’ என்றார்.

சின்னச் சின்ன சேமிப்புக்கு சிட் ஃபண்ட்..! - கடன் தேவைகளுக்குக் கைகொடுக்கும்!

எல்லோருக்கும் ஏற்றது..!

இறுதியாக, சோம.வள்ளியப்பன் பேசும்போது, ‘‘சிட் ஃபண்டுக்கென தனித் தேவை இருக்கிறது. இது நவீன காலத்துக்கும் ஏற்றது. சேமிப்பு, முதலீடு, கடன் தேவையை சிட் ஃபண்ட் நிறைவேற்றுகிறது. சிறிய அளவில் சம்பாதிப்பவர்கள் தொடங்கி பணக்காரர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சீட்டுகள் உள்ளன’’ என்றார்.

இதன்பிறகு, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விரிவான விளக்கங்களை சோம வள்ளியப்பன், சிற்றரசு மற்றும் கிருஷ்ணபாரதி ஆகியோர் அளித்தனர். இந்த நிகழ்ச்சியின் வீடியோவைக் காண: https://bit.ly/39UFCMk