Published:Updated:

விவசாயிகளை குறிவைக்கும் கும்பல்... அதிரவைக்கும் ஆன்லைன் மோசடி!

அதிரவைக்கும் ஆன்லைன் மோசடி!
பிரீமியம் ஸ்டோரி
அதிரவைக்கும் ஆன்லைன் மோசடி!

விவசாயி மாரிமுத்துவின் புகாரின்பேரில், காஜாமைதீன், முகமது மாலிக் ஆகிய இருவரைக் கைதுசெய்திருக்கிறோம்.

விவசாயிகளை குறிவைக்கும் கும்பல்... அதிரவைக்கும் ஆன்லைன் மோசடி!

விவசாயி மாரிமுத்துவின் புகாரின்பேரில், காஜாமைதீன், முகமது மாலிக் ஆகிய இருவரைக் கைதுசெய்திருக்கிறோம்.

Published:Updated:
அதிரவைக்கும் ஆன்லைன் மோசடி!
பிரீமியம் ஸ்டோரி
அதிரவைக்கும் ஆன்லைன் மோசடி!

படித்தவர்களே ஆன்லைன் மோசடிக் கும்பலிடம் சிக்கி, பணத்தை இழந்து தவிக்கும் நிலையில், அப்பாவி விவசாயிகளைக் குறிவைத்து மோசடி செய்திருக்கின்றனர் இருவர். ராமநாதபுரம் மாவட்டம், புத்தேந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்ற விவசாயி இவர்களை நம்பி, பாடுபட்டு விளைவித்த அரிசி மூட்டைகளை இழந்திருக்கிறார்.

இது பற்றி அவரிடம் கேட்டபோது, “நான் பி.காம் முடித்ததும் எங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்துவருகிறேன். நெல்லை அப்படியே விற்காமல், நாமே அரிசியாக்கி விற்றால் கூடுதல் விலை கிடைக்குமே என்று முடிவு செய்தேன். அப்போது, விவசாய விளைபொருள்களை விற்கும் பிரபல செயலி மூலமாக நாமே விளைபொருள்களை நேரடியாக விற்பனை செய்யலாம் என்று சொன்னார்கள். அதன்படி, நான் விளைவித்த அரிசி மூட்டைகளை அந்தச் செயலி மூலம் காட்சிப்படுத்தினேன். அதைப் பார்த்து என்னைத் தொடர்புகொண்ட கோவையைச் சேர்ந்த குமார் என்பவர், கிலோ 90 ரூபாய் விலையில் 300 கிலோ சீரகச் சம்பா அரிசியை வாங்கிக்கொள்வதாகச் சொன்னார். அரிசி கைக்குக் கிடைத்ததும், ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்புவதாகவும் சொன்னார்.

விவசாயிகளை குறிவைக்கும் கும்பல்... அதிரவைக்கும் ஆன்லைன் மோசடி!

அவரது பேச்சை நம்பி லாரி மூலம் அரிசி மூட்டைகளை அவர் தந்த முகவரிக்கு அனுப்பிவைத்தேன். ஆனால், அதன் பிறகு அவரிடமிருந்து போன் வரவில்லை. நான் அழைத்தபோது செல்போன் ‘சுவிட்ச் ஆஃப்’ செய்யப்பட்டிருந்தது. நேரில் சென்று விசாரித்தபோதுதான், அவர் கொடுத்திருந்த முகவரியே போலியானது என்பது தெரியவந்தது” என்றார் சோகமாக.

காஜாமைதீன்
காஜாமைதீன்
முகமது மாலிக்
முகமது மாலிக்

இது குறித்து ராமநாதபுரம் சைபர் க்ரைம் ஏ.டி.எஸ்.பி-யான பாஸ்கரனிடம் கேட்டபோது, “விவசாயி மாரிமுத்துவின் புகாரின்பேரில், காஜாமைதீன், முகமது மாலிக் ஆகிய இருவரைக் கைதுசெய்திருக்கிறோம். காஜாமைதீன் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். முகமது மாலிக் மதுரை மாவட்டம், சோழவந்தானைச் சேர்ந்தவர். விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட ஆப்பை இந்த இருவரும் மோசடிக்காகப் பயன்படுத்தி யிருக்கிறார்கள். மாரிமுத்துவிடம் அரிசி வாங்கி ஏமாற்றியதுபோலவே, தேனியில் ஏலக்காய் விவசாயியிடம் பல லட்சம் மோசடி செய்திருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் மிளகாய், கருப்பட்டி, மிளகு எனப் பல பொருள்களை இவர்கள் இதே பாணியில் வாங்கி விவசாயிகளை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இவர்களிடம் ஏமாந்த விவசாயிகள் பலர் புகார் கொடுக்காமல் இருந்ததால், தைரியமாக இந்த மோசடியைத் தொடர்ந்திருக்கிறார்கள். இவர்கள் யாரிடம், எவ்வளவு மோசடி செய்திருக்கிறார்கள் என்று விசாரித்துவருகிறோம்” என்றார்.

அநியாயத்தின் உச்சம்!