Published:Updated:

தோரணம் முதல் ரிட்டர்ன் கிஃப்ட் வரை...

கொலு
பிரீமியம் ஸ்டோரி
கொலு

ஆன்லைனில் செய்யலாம் கொலு ஷாப்பிங்!

தோரணம் முதல் ரிட்டர்ன் கிஃப்ட் வரை...

ஆன்லைனில் செய்யலாம் கொலு ஷாப்பிங்!

Published:Updated:
கொலு
பிரீமியம் ஸ்டோரி
கொலு

இந்த வருட நவராத்திரிக்கு ஸ்பெஷலாக என்ன செய்யலாம்? வருடந்தோறும் கொலு வைக்கும் பலருக்கும் இந்தக் கேள்வி இருக்கும். குறைந்த பட்ஜெட்டில் கொலுவை அலங்கரிக்க, ஆன்லைனில் என்னென்ன பொருள்களையெல்லாம் வாங்கலாம், எவ்வளவு பட்ஜெட்டில் வாங்கலாம் என்ற தகவல்கள் உங்களுக்காக....

தோரணம் முதல் ரிட்டர்ன் கிஃப்ட் வரை...

தோரணம் ஆயிரம்...

நவராத்திரியின் ஒன்பது நாள்களுக்கும், ஃப்ரெஷ்ஷான பூக்களாலும், மாவிலைகளாலும் அலங்கரிப்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை. எனவே, செயற்கை பூ மற்றும் மாவிலை தோரணங்களைத் தேர்வு செய்யலாம். நவராத்திரி முடிந்த பின், தோரணங்களை ஈரத்துணியால் துடைத்து, பத்திரப்படுத்த அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். செயற்கை தோரணங்களை 150 ரூபாயிலிருந்து வாங்கலாம்.

தோரணம் முதல் ரிட்டர்ன் கிஃப்ட் வரை...

பச்சை நிறமே... பச்சை நிறமே...

கொலுவில் பார்க் வைக்கப் போகிறீர் களா? பார்க்கை பசுமையாகக் காட்ட செயற்கைப் புல் அலங்கார மேட்களை பயன்படுத்தலாம். கொலு முடிந்த பின், இதை வேறு வகையிலும் பயன்படுத்த லாம். 150 ரூபாயிலிருந்து கிடைக்கிறது.

தோரணம் முதல் ரிட்டர்ன் கிஃப்ட் வரை...

வரைய வேண்டாம்... அப்படியே ஒட்டலாம்...

கொலுப்படிகளுக்கு முன்னால் கோலம் போடுவது பாரம்பர்யங்களில் ஒன்று. டைல்ஸ் ஒட்டப்பட்ட தரைகளில், கலர் பொடிகளைப் பயன்படுத்தி, கோலம் போட்டு அதை மீண்டும் சுத்தப் படுத்துவதற்குள் போதும், போதும் என்றாகிவிடும். வேலையை எளிமையாக்க பிரின்டட் கோல ஸ்டிக்கர்களை வாங்கிப் பயன்படுத்தலாம். டைல்ஸ் வீணாகிவிடும் என்று நினைப்பவர்கள், கோல ஸ்டிக்கரின் அதே அளவுக்கு சார்ட் பேப்பரை கட் செய்து, அதன் நான்கு மூலைகளிலும் செலோடேப் பயன்படுத்தி தரையில் ஒட்டி விடுங்கள். இப்போது சார்ட் பேப்பரில் கோல ஸ்டிக்கரை ஒட்டினால் அப்புறப்படுத்துவது எளிது. கோல ஸ்டிக்கர்கள் 80 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.

தோரணம் முதல் ரிட்டர்ன் கிஃப்ட் வரை...
Puja N Pujari

கொலுவில் படிக்கட்டு... பிறகு அலமாரி...

கொலு பட்டிகட்டுகளை வாங்கிவைக்க வீட்டில் இடமில்லை என நினைப்பவர்கள், படத்தில் இருப்பது போன்ற டூ இன் ஒன் படிக்கட்டுகளை வாங்கலாம். கொலு முடிந்த பின், இதை தனித்தனியாகக் கழற்றி பத்திரப் படுத்தலாம் அல்லது அலமாரி போன்று செட் செய்து கொள்ளலாம். ரெடிமேடு படிக்கட்டு களின் ஆரம்ப விலை 6,000 ரூபாய்.

தோரணம் முதல் ரிட்டர்ன் கிஃப்ட் வரை...

எல்லாமே எலெக்ட்ரிக்....

கொலுவை அலங்கரிக்க, தாமரை விளக்கு தொடங்கி, விதவிதமான மெழுகுவத்திகள், குத்து விளக்குகள் என எல்லாமே எலெக்ட் ரிக் விளக்குகளாக தற்போது கிடைக்கின்றன. குழந்தைகள் நடமாடும் இடங்களிலும் பய மின்றி இவற்றை வைக்கலாம். விளக்குகள் 30 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.

தோரணம் முதல் ரிட்டர்ன் கிஃப்ட் வரை...

பேக்ரவுண்டு... இனி ரொம்ப சிம்பிள்...

கொலு வைப்பவர்களுக்கு பேக்ரவுண்டு செட் செய்வது எப்போதும் சவால்தான். இதற்கு ரெடிமேடு வால் ஸ்டிக்கர்கள், வால் ஹேங்கிங்ஸ் பயன்படுத்தலாம். ஸ்டிக்கர்கள் 90 ரூபாயிலிருந்தும், வால் ஹேங்கிங்ஸ் 200 ரூபாயிலிருந்தும் கிடைக் கின்றன.

தோரணம் முதல் ரிட்டர்ன் கிஃப்ட் வரை...

நீர்வீழ்ச்சியும் புகை மண்டலமும்....

மலையிலிருந்து புகை வருவது போன்றோ, நீர்வீழ்ச்சியிலிருந்து தண்ணீர் கொட்டுவது போன்றோ செட் செய்ய நிறைய மெனக்கிட வேண்டியிருக்கும். தற்போது ஆன்லைனில் ஸ்மோக்கி எஃபெக்ட் பொருள்கள் கிடைக் கின்றன. அவற்றை வாங்கி நேரத்தை மிச்சப் படுத்தலாம். ஸ்மோக்கி எஃபெக்ட் பொருள்கள் 130 ரூபாயிலிருந்து கிடைக் கின்றன.

தோரணம் முதல் ரிட்டர்ன் கிஃப்ட் வரை...

ஆன்லைனிலேயே பொம்மை ஷாப்பிங்...

கொலுவில் வைக்கத் தேவையான பொம்மை களைத் தேடி இப்போதெல்லாம் கடை கடையாக ஏறி இறங்க வேண்டியதில்லை. ஆன்லைனில் வித்தியாசமான பொம்மை களைத் தேர்வு செய்து வாங்கலாம். டேமேஜ் இருந்தால் ரிட்டன் செய்து, புது பொம்மை வாங்க வேண்டியிருக்கும் என்பதால் கொலு வைப்பதற்கு முன்னதாகவே ஆர்டர் செய்து விடுங்கள்.

தோரணம் முதல் ரிட்டர்ன் கிஃப்ட் வரை...

ரிட்டர்ன் கிஃப்ட்... உங்கள் சாய்ஸ் என்ன?

பிளவுஸ் மெட்டீரியல், வளையல்கள் தாண்டி புதிய வகை ரிட்டன் கிஃப்ட் கொடுக்க நினைப்பவர்களுக்கு ஆன்லைன் பெஸ்ட் சாய்ஸ். தாம்பூலப்பை தொடங்கி, குழந்தைகளுக்கான ரிட்டன் கிஃப்ட் வரை ஆன்லைனில் பல வகையான கிஃப்ட் பொருள்கள் கிடைக்கின்றன. உங்கள் வீட்டு கொலுவுக்கு வருபவர்களின் வயதுக்கேற்ப பயனுள்ள பொருள்களைத் தேர்வு செய்து வாங்கலாம். ஒரு டஜன் பொருள்களைக் குறைந்தது 200 ரூபாயிலிருந்து வாங்கலாம்.