அரசியல்
அலசல்
Published:Updated:

மாற்றுத்திறனாளியை அடித்தாரா தி.மு.க செயலாளர்? - 1,500 ரூபாய் பிரச்னையில் வீடு புகுந்து ரகளை!

சையத் ரிபாசுதீன்
பிரீமியம் ஸ்டோரி
News
சையத் ரிபாசுதீன்

அடிதடியெல்லாம் நடக்கவில்லை. அப்போது சையத் வீட்டிலேயே இல்லை... பிறகெப்படி அவரை நான் அடிக்க முடியும்... என்னைப் பழிவாங்கும் நோக்கில், நான்கு நாள் கழித்து ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகி நாடகமாடுகிறார் அவர்

குடிநீர்க் குழாய் ரிப்பேர் செய்ததற்குப் பணம் வசூலிக்கும் தகராறில், மாற்றுத்திறனாளி ஒருவரை ஊட்டி நகர தி.மு.க செயலாளரும், அவருடைய மகனும் மூர்க்கத்தனமாகத் தாக்கியதாகப் புகார் எழுந்திருக்கிறது!

மாற்றுத்திறனாளியை அடித்தாரா தி.மு.க செயலாளர்? - 1,500 ரூபாய் பிரச்னையில் வீடு புகுந்து ரகளை!

இது குறித்து ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாற்றுத்திறனாளி சையத் ரிபாசுதீனை நேரில் சந்தித்துப் பேசினோம். ‘‘சிறு வயதிலேயே விபத்தில், இடது காலை இழந்த நான், என் குடும்பத்தினருடன் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்துவருகிறேன். எங்கள் வீட்டுக்குத் தொடர்பில்லாத குடிநீர்க் குழாயைப் பழுது பார்த்ததற்கு ‘1,500 ரூபாய் பணம் வேண்டும்’ என்று கீழ் வீட்டிலிருப்பவர் கேட்டார். நான் ‘தர முடியாது’ என மறுத்தேன். அதற்காக தி.மு.க நகரச் செயலாளர் ஜார்ஜும், அவர் மகனும் எங்கள் வீட்டுக்குள் நுழைந்து, தகராறு செய்தனர். உடம்பு முடியாமல் படுத்திருந்த நான், இதை செல்போனில் வீடியோ எடுத்தேன். அந்த ஆத்திரத்தில், என்னுடைய செல்போனைத் தட்டிவிட்டு முகத்தில் மூர்க்கத்தனமாகத் தாக்கினார்கள். வீட்டில் யாரும் இல்லையென்றால் என்னைக் கொலையே செய்திருப்பார்கள்” என்றார் கோபமாக.

மாற்றுத்திறனாளியை அடித்தாரா தி.மு.க செயலாளர்? - 1,500 ரூபாய் பிரச்னையில் வீடு புகுந்து ரகளை!

ஊட்டி தி.மு.க நகரச் செயலாளர் ஜார்ஜிடம் இது பற்றிக் கேட்டபோது, “என் மகள் குடியிருக்கும் வீட்டின் மேல் மாடியில்தான் சையத் குடும்பத்தினர் இருக்கிறார்கள். குடிநீர்க் குழாயைச் சரிசெய்த பிளம்பர்களுக்குப் பணம் கொடுக்க முடியாது என மறுத்ததால் அது குறித்து சையத் குடும்பத்தினருடன் பேசினோம். அடிதடியெல்லாம் நடக்கவில்லை. அப்போது சையத் வீட்டிலேயே இல்லை... பிறகெப்படி அவரை நான் அடிக்க முடியும்... என்னைப் பழிவாங்கும் நோக்கில், நான்கு நாள் கழித்து ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகி நாடகமாடுகிறார் அவர்” என்றார். சையத் ரிபாசுதீனின் மனைவி ஷர்மிளா பானுவிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது, “சம்பவத்தின்போது என் கணவர் வீட்டிலேயே இல்லை என்பது அப்பட்டமான பொய். வீடு புகுந்து என் கணவரைத் தாக்கியதற்கான வீடியோ ஆதாரம் இருக்கிறது. இது குறித்து ஊட்டி பி1 போலீஸாரிடம் புகார் அளிக்கச் சென்றபோது, ‘உங்களுக்கு எதுக்கு பெரிய இடத்து வம்பு?’ என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள்” என்றார் வருத்தத்துடன்.

மாற்றுத்திறனாளியை அடித்தாரா தி.மு.க செயலாளர்? - 1,500 ரூபாய் பிரச்னையில் வீடு புகுந்து ரகளை!

‘காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என ஊட்டி டி.எஸ்.பி மகேஷ்வரனிடம் கேட்டோம், “காவல் நிலையத்தில் புகார் அளித்தது குறித்து நமக்குத் தெரியாது. ஆனால், ரிபாசுதீன் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரை ஏற்று சி.எஸ்.ஆர் காப்பி கொடுக்கப்பட்டிருக்கிறது. பி1 காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தற்போது விசாரணையும் நடக்கிறது. புகாரில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.