Published:Updated:

இன்செக்டிசைட்ஸ் (இந்தியா) லிமிடெட்! [NSE SYMBOL: INSECTICID]

இன்செக்டிசைட்ஸ் (இந்தியா) லிமிடெட்!
[NSE SYMBOL: INSECTICID]
பிரீமியம் ஸ்டோரி
News
இன்செக்டிசைட்ஸ் (இந்தியா) லிமிடெட்! [NSE SYMBOL: INSECTICID]

கம்பெனி டிராக்கிங்

யிர் பாதுகாப்புக்கு உதவும் பல்வேறு கெமிக்கல்களை உற்பத்தி செய்யும் இன்செக்டிசைட்ஸ் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தைத் தான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.

இன்செக்டிசைட்ஸ் (இந்தியா) லிமிடெட்!
[NSE SYMBOL: INSECTICID]

கடந்த 1996-ம் ஆண்டு பதிவுசெய்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், இந்திய விவசாயிகள் அதிக மகசூலைப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்களுக்குத் தேவையான பல்வேறு விதமான பூச்சிக்கொல்லி மருந்துகளை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது. 2002-ம் ஆண்டில் விவசாயிகளுக்கான இந்தவித தயாரிப்புகளில் கால்பதித்த இந்த நிறுவனம், இன்றைக்குப் பயிர்ப் பாதுகாப்பு கெமிக்கல்களில் ஒரு மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, பூஞ்சைக் கொல்லி மற்றும் அனைத்துவகையான பிளான்ட் குரோத் ரெகுலேட்டர்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது இந்த நிறுவனம். இந்த வகை கெமிக்கல்களில் இன்றைக்கு நூறுக்கும் மேற்பட்ட ஃபார்முலேஷன் கெமிக்கல்கள் தயாரிப்பையும், 21 டெக்னிக்கல் தயாரிப்புகளையும் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
டாக்டர் எஸ்.கார்த்திகேயன்
டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

நிறுவனத்தின் தயாரிப்புகள்

இந்த வகை கெமிக்கல்களை உற்பத்தி செய்யத் தேவையான தொழில்நுட்பக் கூட்டணியை ஜப்பானிய நிறுவனமான நிஸான் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்துடனும் (பல்சர் மற்றும் ஹக்காமா போன்ற தயாரிப்புகளுக் கானது), அமெரிக்க நிறுவனமான அம்வாக் கெமிக்கல் கார்ப்பரேஷன் நிறுவனத்துடனும் (திமெட் மற்றும் நுவான் போன்ற தயாரிப்புகளுக் கானது), ஜப்பானிய நிறுவனமான நிஹான் நோஹையாகூ (Nihon nohyaku) என்ற நிறுவனத்து டனும் கூட்டணி அமைத்து இந்திய விவசாயிகளின் பயிர் பாதுகாப்பிற்கான தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

இன்செக்டிசைட்ஸ் (இந்தியா) லிமிடெட்!
[NSE SYMBOL: INSECTICID]

இன்றைக்கு இந்த நிறுவனத்தின் பிராண்டான டிராக்டர் எனும் பிராண்டின்கீழ் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் லெதல், விக்டர், திமெட், மோனோசில், நுவான், எஸ்ப்ளோட், ஹைஜாக், பல்சர் மற்றும் ஹக்காமா போன்ற தயாரிப்புகள் இந்திய விவசாயிகள் வேண்டி விரும்பிவாங்கும் தயாரிப்புகளாக இருக்கிறது. இப்படிப் பல்வேறு வகையான கெமிக்கல்களை உற்பத்தி செய்யும் போது அவற்றை மேம்படுத்தவும் புதிய பல கெமிக்கல்களைக் கண்டறியவும் தேவைப்படும் ஆராய்ச்சி வசதிகளையும் இந்த நிறுவனம் தன்வசத்தே கொண்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆறு காப்புரிமைகள் பெறப்பட்டது, 21-க்கும் மேற்பட்ட நிலுவையில் இருக்கும் காப்புரிமை விண்ணப்பங்களுடன் இருப்பது, 59-க்கும் மேற்பட்ட புதிய பிராசஸ்களை வடிவமைத்தது போன்றவை இந்த நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க அளவிலான முக்கியப் பணிகளாகும். ஆராய்ச்சி வசதிகளை ஜப்பானிய நிறுவனமான ஓ.ஏ.டி அக்ரியோ கம்பெனி லிமிடெட் எனும் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்திவரும் இந்த நிறுவனம், புதிய அக்ரோ கெமிக்கல் மாலிக்யூல்களைக் கண்டறிந்து இந்தியாவில் மட்டுமல்லாது, உலக அளவில் அறிமுகப்படுத்தும் நோக்கத்துடனும் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி வசதிகள் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின்கீழ் இயங்கும் டி.ஐ.எஸ்.ஆர்-ன் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

இன்செக்டிசைட்ஸ் (இந்தியா) லிமிடெட்!
[NSE SYMBOL: INSECTICID]

உற்பத்தி வசதிகள்

இந்த வகையில் பல்வேறு கெமிக்கல்களை உற்பத்தி செய்வதற்கான நவீன தொழில்நுட்பத் துடன் கூடிய ஏழு உற்பத்தி வசதிகளை (ஃபார்முலேஷன் பிளான்டுகள்) கொண்டிருக்கும் இந்த நிறுவனம் (தானியங்கி உற்பத்திவசதிகள் பலவற்றையும் உள்ளடக்கியது) அகில இந்திய ரீதியாக 24 டெப்போக்களையும் தன்வசத்தே கொண்டிருப்பதால், வாடிக்கையாளர்களைச் சுலபமாகச் சென்றடைய முடிகிறது.

இந்த நிறுவனத்தின் ஃபார்முலேஷன் உற்பத்தி நிலையங்கள் ராஜஸ்தானில் சோபான்கி, ஜம்மு காஷ்மீரில் உள்ள சம்பா மற்றும் உதாம்பூர், குஜராத்தில் உள்ள தஹீஜ் போன்ற இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. மேலும், சோபான்கி மற்றும் தஹீஜ் போன்ற இடங்களில் டெக்னிக்கல் சிந்தஸிஸ் உற்பத்தி வசதியையும் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் ஃபார்முலேஷன் உற்பத்தி வசதிகள் தானியங்கி முறையில் (மிகக் குறைந்தபட்ச அளவிலேயே மனிதர்கள் இயக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட உற்பத்தி வசதிகள்) இயங்குவதால், மிகச் சிறந்த தரத்துடன்கூடிய தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது. தொடர்ந்து தரக்கட்டுப்பாட்டுச் சோதனைகள், உச்சபட்ச தரக்கட்டுப்பாடுகள், உடனுக்குடன் எடுக்கப்படும் சீர்செய்வதற்கான முயற்சிகள் மற்றும் தொடர்ந்து நிர்வாகம் செய்துவரும் மதிப்பாய்வு போன்றவையும் அதிக தரம்கொண்ட பொருள்களை இந்த நிறுவனம் தயாரிப்பதற்கான வழிவகைகளைச் செய்வதாக அமைகின்றன.

மேலும், எல்லாவிதமான தயாரிப்புகளும்

தரம் சோதனை செய்யப்பட்ட பின்னரே விநியோகத்திற்கு அனுப்பப்படுவதால், தரம் குறித்த நல்லதொரு கட்டுப்பாட்டுடன் இந்த நிறுவனம் செயல்படுகிறது. பெரும்பாலான கெமிக்கல்கள் சில்லறை விற்பனைக்காகவே தயாரிக்கப்படுவதால், அவற்றை ஃபேக் செய்வதற்குத் தேவையான உயர்ரக மற்றும் அதிநவீன தானியங்கி பேக்கேஜிங் இயந்திரங் களையும் இந்த நிறுவனம் தன்வசத்தே கொண்டுள்ளது தனிச்சிறப்பாகும். இந்தவித உயர்ரக மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பேக்கேஜிங் இயந்திரத்தில் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பேக்கேஜிங் செய்யப் படுவதால், விவசாயிகளை மிகவும் பாதுகாப்பான முறையில் சென்றடைகிறது.

இன்செக்டிசைட்ஸ் (இந்தியா) லிமிடெட்!
[NSE SYMBOL: INSECTICID]

விவசாயிகள் வாடிக்கையாளர்கள் என்பதால், இந்தியா போன்ற பரந்துவிரிந்த நாட்டில் பல்வேறு கிராமங்களையும் தன்னுடைய தயாரிப்புகள் சென்றடையும் வண்ணம் 5000-த்துக்கும் மேற்பட்ட டிஸ்ட்ரிப்யூட்டர்களையும், 60,000-த்துக்கும் மேற்பட்ட டீலர்களையும் கொண்ட நெட்வொர்க்கைத் தன்வசத்தே கொண்டுள்ளது இந்த நிறுவனம். இந்த டீலர் மற்றும் டிஸ்ட்ரிப்யூட்டர் நெட்வொர்க்கே நிறுவனத்தின் முகமாக வாடிக்கையாளர்களுக்குக் காட்சியளித்து வாடிக்கையாளரின் தேவையறிந்து சிறப்பாகச் செயல்பட்டு தயாரிப்புகளை வெற்றிகரமாக விநியோகம் செய்துவருகிறது.

இன்செக்டிசைட்ஸ் (இந்தியா) லிமிடெட்!
[NSE SYMBOL: INSECTICID]

மேலும், இந்த நிறுவனம் தன்னுடைய தயாரிப்பு களைத் தற்சமயம் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்துவருகிறது. வரும் நிதியாண்டின் இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 25-க்கும் மேலாக உயர்த்துவதற்கான திட்டங்களை யும் தன்வசத்தே கொண்டுள்ளது.

ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?

பயிர் பாதுகாப்புக்கான கெமிக்கல்கள் உற்பத்தித் துறையில் செயல்படும் அனைத்து நிறுவனங்களுக்கும் உரித்தான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்திற்கு உண்டு. விவசாயம் சார்ந்த துறை என்பதால், பருவமழை பொய்த்தாலோ அல்லது குறைவாகப் பொழிந் தாலோ இந்த நிறுவனத்தின் வியாபாரத்திற்கு அது பாதகமாகலாம். மேலும், ஆராய்ச்சி வசதிகள் மூலம் தொடர்ந்து மேம்பட்ட மருந்துகளைக் கண்டறிந்துகொண்டேயிருக்க வேண்டும். போட்டி நிறுவனங்கள் செய்யும் ஆராய்ச்சியில் ஏதாவது பிரமாண்டமான முன்னேற்றம் கைகூடினால் அதுவும் இந்த நிறுவனத்தின் வியாபாரத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது. மூலப்பொருள்களின் விலை மற்றும் அந்நியசெலாவணியின் மதிப்பு மாறுதல் போன்றவையும் இந்த நிறுவனத்தின் செயல்பாடு களைப் பாதிக்கக்கூடிய ஒன்றேயாகும்.

ரிஸ்க்குகள் பல இருக்கிறபோதிலும் நீண்ட துறை ரீதியான அனுபவமும் விவசாயிகள் மத்தியில் நன்மதிப்பையும் பெற்றிருக்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் பங்குகளை சந்தை ஏதாவது ஒரு காரணத்தினால் நல்லதொரு வீழ்ச்சியைச் சந்திக்கும்போது வரும் கடுமையானதொரு விலை இறக்கத்தில், மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாங்கப் பரிசீலனை செய்யலாம். அதாவது, தங்களுடைய மூன்று ஆண்டுக்காலத்திற்கும் குறைவான போர்ட் ஃபோலியோவில் சேர்த்துக்கொள்வதற்காக அதிக அளவிலான ரிஸ்க் எடுக்கக்கூடிய வாசகர்கள் மட்டும் தொடர்ந்து டிராக் செய்துவரலாம்.

இன்செக்டிசைட்ஸ் (இந்தியா) லிமிடெட்!
[NSE SYMBOL: INSECTICID]

ஏற்கெனவே இந்தத் துறையில் செயல்படும் நிறுவனத்தின் பங்குகளைக் கொண்டிருக்கும் போர்ட்ஃபோலியோவை வைத்திருக்கும் வாசர்களும் பங்கை வாங்கியபின்னால் தாங்களாகவே இந்த நிறுவனம் மற்றும் துறையின் செயல்பாட்டை டிராக் செய்துகொள்ள முடியாத வாசகர்களும் இந்தப் பங்கை வாங்குவதைத் தவிர்ப்பதே நல்லது.

This section is not a buy/sell recommendation at the current price levels, but only a compilation of information about the company and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.
Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No; 4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past 12 months and nature of products / services for which such compensation is received? – No; 5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit http://nanayam.vikatan.com/index.php?aid=9985. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this report is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose symbol : (NSE: INSECTICID) /name of company/time duration)