Published:Updated:

சிறுமியைச் சீரழித்து கருமுட்டை விற்பனை... தப்பிக்கப் பார்க்கும் தனியார் மருத்துவமனைகள்!

கருமுட்டை விற்பனை
பிரீமியம் ஸ்டோரி
கருமுட்டை விற்பனை

சிறுமி என்ன புகார் கொடுத்திருக்கிறார் என்பதை இன்னொரு தடவை செக் பண்றேன். மற்றபடி இந்த விவகாரம் சம்பந்தமாக என்னிடம் யாரும் பேசலை.

சிறுமியைச் சீரழித்து கருமுட்டை விற்பனை... தப்பிக்கப் பார்க்கும் தனியார் மருத்துவமனைகள்!

சிறுமி என்ன புகார் கொடுத்திருக்கிறார் என்பதை இன்னொரு தடவை செக் பண்றேன். மற்றபடி இந்த விவகாரம் சம்பந்தமாக என்னிடம் யாரும் பேசலை.

Published:Updated:
கருமுட்டை விற்பனை
பிரீமியம் ஸ்டோரி
கருமுட்டை விற்பனை

’ஈரோட்டில், பெற்ற தாயே வக்கிரமான ஆண் நண்பருடன் சேர்ந்து தனது 16 வயது மகளிடமிருந்து கருமுட்டையை எடுத்து விற்பனை செய்திருப்பதும், அந்த நபர் அந்தச் சிறுமியை சீரழித்திருக்கும் கொடுமையும் கேட்பவர் நெஞ்சைப் பதறவைக்கின்றன.

16 வயதான சிறுமி ஒருவர், கடந்த வாரம் ஈரோடு எஸ்.பி-யைச் சந்தித்துப் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘என்னுடைய அம்மாவும், அவருடைய கள்ளக்காதலனும் சேர்ந்து என்னை மிரட்டி, இதுவரை எட்டு முறை என் வயிற்றிலிருந்து கருமுட்டையை எடுத்துள்ளனர். அந்த நபர் என்னையும் பாலியல் கொடுமை செய்கிறார். தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள்!’ எனச் சொல்லிக் கதறியிருந்தார். போலீஸ் விசாரணையில், ‘சிறுமி 4 வயதாக இருக்கும்போதே அவரது தந்தை, குடும்பத்தைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அதன் பிறகு பணத்துக்காக, தாய் இந்திராணி பலமுறை தன்னுடைய கருமுட்டையை விற்பனை செய்துவந்துள்ளார். இதற்கிடையே சையத் அலி என்பவருடன் தொடர்பு ஏற்பட, இருவரும் ஒன்றாகக் குடும்பம் நடத்திவந்துள்ளனர். 12 வயதில் மகள் பூப்படைந்ததும் அவளிடமிருந்தும் கருமுட்டையை எடுத்து காசு பார்க்க ஆரம்பித்திருக்கிறார் தாய் இந்திராணி. இதற்காக சிறுமியின் பெயர் மற்றும் வயதை மாற்றி போலியான ஆதார் கார்டுகளையும் தயாரித்துள்ளனர். இந்தக் கொடுமை மட்டுமல்லாமல், தாய் இந்திராணிக்குத் தெரிந்தே அவருடைய ஆண் நண்பரான சையத் அலி, சிறுமியைப் பலமுறை தன்னுடைய பாலியல் இச்சைக்காகப் பயன்படுத்திக் கொடுமைப்படுத்தியிருக்கிறார்’ என்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து சிறுமியின் தாய் இந்திராணி, அவருடைய ஆண் நண்பர் சையத் அலி, கருமுட்டை விற்பனையில் புரோக்கராகச் செயல்பட்ட மாலதி, போலி ஆதார் அட்டை தயாரித்துக் கொடுத்த ஜான் ஆகிய நான்கு பேரையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

சிறுமியைச் சீரழித்து கருமுட்டை விற்பனை... தப்பிக்கப் பார்க்கும் தனியார் மருத்துவமனைகள்!

ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் ஆகிய ஊர்களிலுள்ள தனியார் செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனைகளில்வைத்து சிறுமியின் கருமுட்டையை எடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து சென்னை மருத்துவப் பணிகள் இயக்குநரகத்தைச் சேர்ந்த ஆறு பேர்கொண்ட மருத்துவக்குழுவினர் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் விசாரணை நடத்தியிருப்பதோடு, அரசுக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் பாதிக்கப்பட்ட சிறுமியிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

தீவிர விசாரணை நடப்பதுபோல வெளியே தெரிந்தாலும், பின்னணியில் வழக்கை மூடி மறைப்பதற்கான வேலைகளை போலீஸாரும் கரைவேட்டிகளும் கச்சிதமாக நடத்திவருகின்றனர் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். இது குறித்துப் பேசுகிறவர்கள், “சிறுமி அளித்துள்ள புகாரின்படி, ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் பெயரை முதலில் டி.எஸ்.ஆரில் குறிப்பிட்ட போலீஸார், எஃப்.ஐ.ஆரில் அந்த மருத்துவமனையின் பெயரை நீக்கிவிட்டனர். இதற்கு மேலிடத்திலிருந்து வந்த அழுத்தமே காரணம் எனச் சொல்லப்படுகிறது.

இந்திராணி, சையத் அலி, ஜான், மாலதி
இந்திராணி, சையத் அலி, ஜான், மாலதி

கருமுட்டை விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டதால், சம்பந்தப்பட்ட மருத்துவமனை தற்போது, ‘அந்தப் பெண் மைனர் என்பது எங்களுக்குத் தெரியாது. மேஜர் என்பதுபோல போலி ஆவணங்களைக் காட்டி எங்களை ஏமாற்றிவிட்டனர்’ என்று சொல்கிறது. வீரியம் அதிகமாக இருக்க வேண்டும், குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக, தெரிந்தே மைனர் பெண் குழந்தைகளிடம் கருமுட்டைகளை பெற்றுவருகின்றன மருத்துவமனைகள். ஆனால், ஒவ்வொரு மாதமும் பல கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டும் இந்த மருத்துவமனைகள் கரன்சியை வாரியிறைத்து இந்தப் பிரச்னையை எப்படி மூடி மறைத்துவிடுகிறார்கள் எனப் பாருங்கள்” என்கின்றனர்.

குற்றச்சாட்டு குறித்து ஈரோடு எஸ்.பி சசிமோகனிடம் பேசியபோது, “பாதிக்கப்பட்ட சிறுமி என்ன புகார் கொடுத்தாரோ அதைத்தான் எஃப்.ஐ.ஆரில் பதிவு செஞ்சுருப்பாங்க. சிறுமி என்ன புகார் கொடுத்திருக்கிறார் என்பதை இன்னொரு தடவை செக் பண்றேன். மற்றபடி இந்த விவகாரம் சம்பந்தமாக என்னிடம் யாரும் பேசலை. இன்ஸ்பெக்டருக்கு நான் அழுத்தம் கொடுத்தேன்னு சொல்வதிலும் கொஞ்சம்கூட உண்மையில்லை” என்று மறுத்தார்.

*****

சாந்தி ரவீந்திரநாத்
சாந்தி ரவீந்திரநாத்

சாந்தி ரவீந்திரநாத், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கச் செயலாளர்- மகப்பேறு மருத்துவர்

“கருமுட்டையை தானம் செய்யலாமே ஒழிய, விற்பனை செய்யக் கூடாது. பாதிக்கப்பட்ட சிறுமி சொல்லலைன்னா இந்த விஷயத்தை நாம கண்டுபிடிச்சிருக்கவே முடியாது. கருமுட்டை எடுக்கப் போடப்படும் ஹார்மோன் ஊசிகளால் கருவகப் புற்றுநோய் வரும் வாய்ப்பும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலும் இருக்கின்றன. மருத்துவமனை மீது குற்றம் சொல்லி மட்டுமே இந்தப் பிரச்னையை நீர்த்துப்போகச் செஞ்சுடுறோம். இந்தச் செயற்கை கருவுறுதல் மையம் மற்றும் கருமுட்டை, உயிரணுக்கள் சேமிப்பு வங்கிகளைக் கண்காணிக்க மத்திய, மாநில அரசு அமைப்புகள் இருக்கின்றன. அவை சரியாகச் செயல்பட்டிருக்கணும். தொடர் கண்காணிப்பும் நடவடிக்கையும் அவசியம். அதேபோல ஆதார் கார்டில் யார் வேண்டுமானாலும் மாற்றம் செய்து போலியானவற்றை உருவாக்க முடியும் என்பது எவ்வளவு ஆபத்தான செயல்... அதையும் தடுத்திருக்க வேண்டும். ஆக, அரசினுடைய சிஸ்டத்தில் இருக்கக்கூடிய ஓட்டைகளால்தான் இது போன்ற சம்பவங்கள் துணிச்சலாக நடக்கின்றன!’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism