Published:Updated:

6,892 ஏக்கர் நிலம்... புகுந்து விளையாடிய அதிகாரிகள்... விஸ்வரூபம் எடுக்கும் பி.ஏ.சி.எல் நில மோசடி!

பி.ஏ.சி.எல் நில மோசடி!
பிரீமியம் ஸ்டோரி
பி.ஏ.சி.எல் நில மோசடி!

நான் அனுப்பிய புகாரில், எங்கெல்லாம் பி.ஏ.சி.எல் நிறுவன இடங்கள் தடையை மீறிப் பதிவுசெய்யப்பட்டன என்ற விவரத்துடன், அதில் தொடர்புடைய கே.வி.சீனிவாசன் உள்ளிட்ட பதிவுத்துறை அலுவலர்கள் விவரத்தையும் குறிப்பிட்டிருந்தேன்.

6,892 ஏக்கர் நிலம்... புகுந்து விளையாடிய அதிகாரிகள்... விஸ்வரூபம் எடுக்கும் பி.ஏ.சி.எல் நில மோசடி!

நான் அனுப்பிய புகாரில், எங்கெல்லாம் பி.ஏ.சி.எல் நிறுவன இடங்கள் தடையை மீறிப் பதிவுசெய்யப்பட்டன என்ற விவரத்துடன், அதில் தொடர்புடைய கே.வி.சீனிவாசன் உள்ளிட்ட பதிவுத்துறை அலுவலர்கள் விவரத்தையும் குறிப்பிட்டிருந்தேன்.

Published:Updated:
பி.ஏ.சி.எல் நில மோசடி!
பிரீமியம் ஸ்டோரி
பி.ஏ.சி.எல் நில மோசடி!

நீதிமன்றம் முடக்கிவைத்த பி.ஏ.சி.எல் நிறுவனத்துக்குச் சொந்தமான 6,892 ஏக்கர் சொத்துகளை மற்றவர்களுக்குப் பதிவுசெய்து வசமாக மாட்டியிருக்கிறார்கள் பத்திரப்பதிவுத்துறை அலுவலர்கள். இந்த விவகாரத்தில் தொடர்புடைய கூடுதல் பதிவுத்துறைத் தலைவர் கே.வி.சீனிவாசன் மீதே லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவுசெய்திருப்பதால், மற்ற அலுவலர்களெல்லாம் பீதியில் இருக்கிறார்கள்.

என்ன நடந்தது?

`குறைந்த விலைக்கு வீட்டுமனை’ என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தை வெளியிட்ட பி.ஏ.சி.எல் நிறுவனம், சுமார் ஆறு கோடி முதலீட்டாளர் களிடமிருந்து ரூ.49,000 கோடியை, சட்டவிரோதமாகத் திரட்டியது. 2013-ல் நடைபெற்ற இந்த விவகாரத்தில், முதலீட்டாளர்களுக்கு வீட்டு மனையோ அல்லது பணமோ பி.ஏ.சி.எல் நிறுவனம் கொடுக்கவில்லை. எனவே பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் சொத்துகளை உச்ச நீதிமன்றம் முடக்கியது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் முதலீட்டுத் தொகையைத் திரும்ப அளிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் விசாரணை கமிட்டியும் அமைத்தது. இதைத் தொடர்ந்து பி.ஏ.சி.எல் நிறுவன சொத்துகளை விற்பனை செய்வதற்கான பூர்வாங்க வேலைகளில் ‘செபி’ இறங்கியது.

6,892 ஏக்கர் நிலம்... புகுந்து விளையாடிய அதிகாரிகள்... விஸ்வரூபம் எடுக்கும் பி.ஏ.சி.எல் நில மோசடி!

ஆனால், அதற்கு முன்பே தமிழகத்தில் பி.ஏ.சி.எல் நிறுவனம் வைத்திருந்த 6,892 ஏக்கர் நிலமும் பதிவுத்துறையிலிருக்கும் கறுப்பு ஆடுகள் மூலம் களேபரம் செய்யப்பட்டதுதான் அதிர்ச்சி. அதாவது, பி.ஏ.சி.எல்-லுக்கு தங்கள் நிலத்தை ஏற்கெனவே விற்றவர்கள், பதிவுத்துறையினரின் உதவியுடன் அதே இடத்தை வேறொருவருக்கு விற்றுள்ளனர்.

இத்தனைக்கும் பி.ஏ.சி.எல் நிறுவன இடங்களை விற்கவோ, பதிவுசெய்யவோ தடை விதிக்கப் பட்டிருப்பதாக லோதா கமிட்டியும், சி.பி.ஐ-யும் தமிழக அரசுக்கும் பதிவுத்துறைக்கும் அறிக்கை அனுப்பியிருந்தது. 870 பக்கங்கள் கொண்ட விவர அறிக்கை அது. அதன் பிறகுதான் பி.ஏ.சி.எல் நிறுவன இடங்கள் தங்குதடையின்றி விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவன இடங்களைப் பதிவுசெய்ய அனுமதித்து, கூடுதல் ஐ.ஜி-யாக இருந்த கே.வி.சீனிவாசன் எழுதிய கடிதம்தான் இந்த முறைகேட்டின் பிள்ளையார் சுழி. அவர் 5.3.2019-ல் அனுப்பிய கடிதத்தில், ‘சம்பந்தப்பட்ட இடத்தைப் பதிவு செய்யலாம்’ என்று குறிப்பிட் டிருந்தார். இதையடுத்தே பி.ஏ.சி.எல் நிறுவனத் துக்குச் சொந்தமான இடங்கள் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

6,892 ஏக்கர் நிலம்... புகுந்து விளையாடிய அதிகாரிகள்... விஸ்வரூபம் எடுக்கும் பி.ஏ.சி.எல் நில மோசடி!

இந்த ஆண்டு தொடக்கத்தில், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வரதராஜ், கூடுதல் ஐ.ஜி எழுதிய கடித ஆதாரத்தை மத்திய விஜிலென்ஸ், சி.பி.ஐ மற்றும் தமிழக முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு புகார் மனுவாக அனுப்பிவைத்தார். அதனால்தான் விவகாரம் எஃப்.ஐ.ஆர் வரை சென்றிருக்கிறது. இதுகுறித்து வரதராஜிடம் பேசினோம். ``நான் அனுப்பிய புகாரில், எங்கெல்லாம் பி.ஏ.சி.எல் நிறுவன இடங்கள் தடையை மீறிப் பதிவுசெய்யப்பட்டன என்ற விவரத்துடன், அதில் தொடர்புடைய கே.வி.சீனிவாசன் உள்ளிட்ட பதிவுத்துறை அலுவலர்கள் விவரத்தையும் குறிப்பிட்டிருந்தேன். அதனடிப்படையில்தான் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் கே.வி.சீனிவாசன் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்திருக்கிறது. தென்மாவட்டங்களில்தான் அதிக அளவில் இந்த முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் முறைகேடு நடந்திருக்கிறது. எனவே, அங்கு பணியாற்றியவர்கள் மீதும் பெயர் குறிப்பிடாமல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்துள்ளனர்” என்றார்.

வரதராஜ்
வரதராஜ்

இது குறித்து பதிவுத்துறை வட்டாரத்தில் கேட்டபோது, ``பி.ஏ.சி.எல் நிறுவனத்துக்கு தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில், 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. அதில், 6,892 ஏக்கர் நிலத்தை மோசடியாகப் பதிவுசெய்துள்ளனர். கூடுதல் ஐ.ஜி ஒரு தெளிவுரை வழங்கிக் கடிதம் அனுப்புகிறார் என்றால், அது அவரது தன்னிச்சையான முடிவாக இருக்க வாய்ப்பில்லை. பதிவுத்துறைத் தலைவர், கண்காணிப்பாளர், உதவியாளர் ஆகியோருக்கும் அதில் பொறுப்புண்டு. எனவே, முறைகேட்டில் தொடர்புடைய அனைத்துப் பதிவுத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

ஜோதி நிர்மலா
ஜோதி நிர்மலா

இதுகுறித்து விளக்கம் கேட்டு வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர் ஜோதி நிர்மலாவிடம் பேசினோம். “பி.ஏ.சி.எல் நிலம் விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட மாவட்டப் பதிவாளர் உட்பட 20 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவுத்துறை ஆவணங்களில், தமிழகத்திலுள்ள பி.ஏ.சி.எல் நிறுவன சொத்துகள் அனைத்தையும் மீண்டும் அதே நிறுவனத்தின் பெயரில் பதிவுசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஐ.ஜி கே.வி.சீனிவாசன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்திருக் கிறோம்” என்றார்.

வில்லங்கச் சொத்துகளை விரும்பிப் பதிவுசெய்வதில், பதிவுத்துறை அலுவலர்களுக்கு அப்படி என்னதான் ஆர்வமோ தெரியவில்லை!