Published:Updated:

`கிளீன் & கிரீன் தென்காசி’ - ஓவியங்களால் அழகுபெறும் அரசு கட்டடச் சுவர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அரசு சுவர்களில் வரையப்படும் ஓவியங்கள்
அரசு சுவர்களில் வரையப்படும் ஓவியங்கள்

தென்காசி நகரில் அனுமதியின்றி அரசு சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் பள்ளி மாணவர்கள் மூலம் ஓவியங்கள் வரையும் பணி நடந்து வருகிறது.

புதிதாக உதயமான தென்காசி மாவட்டத்தின் முதல் கலெக்டராக அருண் சுந்தர் தயாளன் பொறுப்பேற்றது முதல், மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். விவசாயிகள் மற்றும் சாமானிய மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி வருகிறார்.

போஸ்டர்களை அகற்றும் பணி
போஸ்டர்களை அகற்றும் பணி

தென்காசி மாவட்டத்தில் பொது இடங்களில் ஒட்டப்படும் போஸ்டர்கள் காரணமாகப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இது தொடர்பாக மாவட்ட காவல்துறை சார்பாக தென்காசி துணை கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன் தலைமையில் அரசியல்வாதிகள், சமூக அமைப்பினர், வர்த்தகப் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என முடிவெடுக்கப்பட்டது.

தென்காசி: `ஆர்ப்பரிக்கும் அருவிகள்; ஆளில்லா குற்றால சீஸன்!’ - கலங்கும் வியாபாரிகள்

காவல்துறை சார்பாக தென்காசி பகுதியில் மூன்று இடங்கள் ஒதுக்கித் தரப்பட்டு அங்கு மட்டுமே போஸ்டர்கள் ஒட்டிக் கொள்ளலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது. பிற இடங்களில் உள்ள போஸ்டர்களை அகற்றவும் டி.எஸ்.பி தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

போஸ்டர்களை அகற்றும் தன்னார்வலர்கள்
போஸ்டர்களை அகற்றும் தன்னார்வலர்கள்

அதன்படி, அனுமதி இல்லாமல் அரசு சுவர்களில் ஒட்டப்படும் போஸ்டர்களை அகற்றும் பணிகள் நடைபெற்றன. கோயில்கள், பேருந்து நிலையம், அரசு அலுவலகக் கட்டடங்கள் உள்ளிட்டவற்றில் அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள், தனியார் வணிக நிறுவனத்தினர் ஒட்டிய போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போஸ்டர்களை அகற்றும் பணியில் காவல்துறையினருடன் `மழை நண்பர்கள் குழு’ அமைப்பினரும் ஈடுபட்டார்கள். இது குறித்துப் பேசிய அந்த அமைப்பின் நிறுவனர் சுந்தரமகேஷ், தலைவர் ராமசுப்பிரமணியன் ஆகியோர், ``தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் இருந்து இந்தப் பணிகளைத் தொடங்கியுள்ளோம்.

சான்றிதழ் வழங்கும் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன்
சான்றிதழ் வழங்கும் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன்

போஸ்டர்களால் நகரம் அசிங்கமாவதுடன், சர்ச்சைக்குரிய கருத்துகளால் சமூக அமைதியும் சீர்குலையும் ஆபத்து உள்ளது. அதனால் நாங்கள், என்.எஃப்.எஸ் டிரஸ்ட், அறம் அமைப்பு, விதைகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் இந்தப் பணியில் ஆர்வத்துடன் பங்கேற்றோம்.

போஸ்டர்கள் கிழிக்கப்பட்ட சுவர்களில் மீண்டும் அவற்றை ஒட்டிவிடக் கூடும் என்பதால் அந்தச் சுவரில் ஓவியங்களை வரைய முடிவு செய்தோம். இது தொடர்பாகப் பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக ஓவியப் போட்டி நடத்தினோம்.

தாங்கள் வரைந்த ஓவியத்தை சுவரில் காணும் மாணவிகள்
தாங்கள் வரைந்த ஓவியத்தை சுவரில் காணும் மாணவிகள்

ஓவியப் போட்டியில் பங்கேற்ற 50-க்கும் அதிகமான படங்களில் தேர்வான ஓவியங்களை அரசு சுவர்களில் மாணவர்களின் பெயருடனே வரைகிறோம். படங்களை வரைந்து அனுப்பிய மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினோம்” என்றார்கள்.

பசுமை மற்றும் அழகுபடுத்தும் முயற்சியாக தென்காசி நகரத்தில் தொடங்கப்பட்டிருக்கும் இந்தப் பணியை மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களுக்கும் தொடர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுவர் ஓவியங்களுடன் மாணவர்கள்
சுவர் ஓவியங்களுடன் மாணவர்கள்

ஓவியங்களால் புதுப்பொலிவு பெறும் தென்காசி நகரத்தின் பாரம்பர்ய சின்னமான காசி விஸ்வநாதர் கோயில், பேருந்து நிலையம் , அரசு கட்டடங்கள் உள்ளிட்டவை நகர மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு