Published:Updated:

பாகிஸ்தான்: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் 'சிம்' பயன்பாடு முடக்கம்!

தடுப்பூசி
தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி குறுகிய காலத்திற்குள் செலுத்தப்பட வேண்டும் என்பதால் அரசு பிரசாரங்கள் மூலம் மட்டும் இவற்றை செயல்படுத்த முடியாது, சட்டங்களை இயற்றி தடுப்பூசி செலுத்தவேண்டும்.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் கைபேசியின் சிம் கார்டுகளின் பயன்பாட்டை முடக்க அந்த மாகாண அரசு முடிவு செய்துள்ளது.பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில வாரங்களாக விதிக்கப்பட்டுள்ள பலகட்ட கட்டுப்பாடுகளையும் மீறி கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை பாதிப்பு ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இப்படி ஒரு அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டு மக்கள் தொகையில் ஒரு சதவிகித மக்களே இதுவரை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். தடுப்பூசி குறித்தான பயம், தடுப்பூசி போட்டு இரண்டு வருடங்களில் கருவுறும் தன்மையை இழத்தல், இரண்டு வருடங்களில் மரணம் ஏற்படும் போன்ற வதந்திகளால் மக்கள் பலர் தடுப்பூசி போட்டு கொள்வதில்லை, இதனால் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் கைபேசியின் சிம் கார்டு பயன்பாடு முடக்கபடும் என அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

முன்னதாக இது குறித்தான திட்டம் மட்டுமே இருந்ததாகவும், மக்கள் பலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்ற எண்ணத்திலுமே தற்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பஞ்சாப் ஆரம்ப சுகாதாரத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஹம்மத் ராசா கூறினார். மேலும் இந்த நடவடிக்கையை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை மாநில தொலைத் தொடர்பு நிறுவனம் முடிவு செய்யும் என்றார்.

பாகிஸ்தானின் கல்வியறிவு குறைவாக உள்ளது. தடுப்பூசிகள் குறித்து மக்கள் வதந்திகளையும் தவறான தகவல்களையும் பரப்புகிறார்கள்" என்று பாகிஸ்தானின் இளம் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சல்மான் ஹசீப் கூறியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி குறுகிய காலத்திற்குள் செலுத்தப்பட வேண்டும் என்பதால் அரசு பிரசாரங்கள் மூலம் மட்டும் இவற்றை செயல்படுத்த முடியாது, சட்டங்களை இயற்றி தடுப்பூசி செலுத்தவேண்டும் என்றார்.முன்னதாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு புதிய சலுகைகளாக சினிமாக்கள், கொண்டாட்ட அரங்குகள் மற்றும் சிவாலயங்களுக்கு செல்ல அனுமதியும், அதே நேரத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வணிகங்களுக்கு கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

மேலும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி சென்றடைய ஆலயங்களுக்கு வெளியே மொபைல் தடுப்பூசி மையம் அமைக்கபடும் என தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ள தடுப்பூசி முகாம்கள் மூலம் கடந்த சில வாரங்களில் ஒவ்வொரு நாளும் 2 லட்சத்திற்கும் அதிகமான அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. ஆனால் இது 220 மில்லியன் மக்கள்தொகையில் ஒரு பகுதியை மட்டுமே சேர்க்கிறது.

இதுவரை பாகிஸ்தானில் ஏறக்குறைய 10.5 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான தடுப்பூசிகளைசீனா வழங்கி வருகிறது. கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற சுமார் 300,000 பெறுநர்கள் இரண்டாவது டோஸ் போட்டு கொள்ளவில்லை என்பதையும் தேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் மாகாண அரசின் இந்த அறிவிப்பிற்கு முன்னதாக சிந்து மாகாண அரசு தடுப்பூசி போட்டு கொள்ளாத அரசு அதிகாரிகளின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என கூறியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு