Published:Updated:

பசுமைப் பட்டாசு... இந்த தீபாவளிக்கு வெடிக்குமா, வெடிக்காதா?

பசுமைப் பட்டாசு
பிரீமியம் ஸ்டோரி
பசுமைப் பட்டாசு

மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், எட்டு வகையான பட்டாசுகளை அக்டோபர் 5-ம் தேதி டெல்லியில் அறிமுகப்படுத்தினார்.

பசுமைப் பட்டாசு... இந்த தீபாவளிக்கு வெடிக்குமா, வெடிக்காதா?

மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், எட்டு வகையான பட்டாசுகளை அக்டோபர் 5-ம் தேதி டெல்லியில் அறிமுகப்படுத்தினார்.

Published:Updated:
பசுமைப் பட்டாசு
பிரீமியம் ஸ்டோரி
பசுமைப் பட்டாசு

அவை அனைத்தும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம் (NEERI - நீரி) கொடுத்த ஃபார்முலாவில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள். தற்போது தீபாவளி நெருங்கிவிட்ட நிலையில், ‘‘வழக்கமான பட்டாசுகளில் கிடைக்கும் திருப்தி, இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் பட்டாசுகளில் இருக்காது’’ என்று பட்டாசு தயாரிப்பாளர்களில் இன்னொரு தரப்பினரே திரி கொளுத்துகிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பேரியம் நைட்ரேட், பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியப் பவுடர், கந்தகம் போன்ற வேதிப்பொருட் களைக் கலக்காமல் தயாரிக்கும் பட்டாசுகள் மூலம் 35 சதவிகித மாசுவைக் கட்டுப்படுத்தலாம். இது ‘நீரி’ வழங்கிய ஆய்வு அறிக்கை. இதன்படி தயாரிக்கப்பட்ட பட்டாசு களைத்தான் பசுமைப் பட்டாசு என்கிறது, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை, ‘இப்படித் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை மட்டும்தான் இனி விற்பனை செய்ய முடியும்’ என்று கடந்த வருடமே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி பழைய முறையில் தயாரித்த பட்டாசுகளை பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பியுள்ள சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள், அதற்கு எதுவும் பிரச்னை வருமா என்ற கவலையில் இருக்கின்றனர். பட்டாசு வெடிப்பதற்குத் தடை வேண்டித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் தீபாவளிக்கு முன் விசாரணைக்கு வரவுள்ளதால், அவர்களின் அச்சம் இன்னும் கூடியுள்ளது.

பசுமைப் பட்டாசு
பசுமைப் பட்டாசு

பசுமைப் பட்டாசு தயாரிக்க மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ள நாட்டிலுள்ள 230 பட்டாசு ஆலைகளில் சிவகாசி ஆலைகளின் எண்ணிக்கை மிகச் சொற்பமே என்கிறார்கள். பெரும்பாலான பட்டாசுத் தயாரிப்பாளர்கள் இதில் ஒப்பந்தம் போடவில்லை. அதனால், ஒப்பந்தம் போட்ட தயாரிப்பாளர்களுக்கும் ஒப்பந்தம் போடாத தயாரிப்பாளர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, ‘பசுமைப் பட்டாசும் வெடிக்க வேண்டாம்’ என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சமீபத்தில் கூறியது, பட்டாசு தயாரிப்பாளர்களை மேலும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. பட்டாசுத் தொழிலையும் பாரம்பர்ய நம்பிக்கையையும் அழிக்க வெளிநாட்டு சக்திகள் பிரசாரம் செய்வதாக கூறிவந்த பி.ஜே.பி தலைவர்கள், ஜவடேகரின் கருத்துக்கு எந்த எதிர்வினையையும் ஆற்றாமல் இருப்பது புரியாதப் புதிராக உள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பட்டாசு தொழில் சார்ந்தவர்கள் சிலர், “பட்டாசுத் தொழிலைச் சார்ந்து சரக்கு வாகனப் போக்குவரத்து, உள்ளூர் வியாபாரம் என பல்வேறு தொழில்கள் உள்ளன. வறட்சிக்கு வாழ்க்கைப்பட்ட விருதுநகர் மாவட்ட மக்கள், தெரிந்தோ தெரியாமலோ இந்த கந்தக வாழ்க்கைக்குள் அகப்பட்டுக்கொண்டுதான் நேரடியாகவும் மறைமுகமாகவும் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இப்போது அதற்கும் குந்தகம் ஏற்பட்டுவிடுமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டிய ஆளுங்கட்சி, இடைத்தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக உள்ளது. இந்த மாவட்டத்தின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்தப் பிரச்னையைக் கண்டுகொள்ளாமல் தினமும் யாரைப்பற்றியாவது கதாகாலட்சேபம் செய்துகொண்டிருக்கிறார். இப்படி பிரச்னைகள் வரும் என்று எதிர்பார்த்தே, இவற்றுக்குத் தீர்வு காண சிவகாசியில் கடந்தாண்டு மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினோம். அப்போது மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர், ‘பட்டாசுத் தொழிலைக் காக்கும் வகையில் நடவடிக்கை எடுப்போம்’ என்று வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், அதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

பசுமை பட்டாசு அறிமுக நிகழ்வில்...
பசுமை பட்டாசு அறிமுக நிகழ்வில்...

சமூக ஆர்வலர் அர்ஜுன் கோபால் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு பட்டாசு வெடிப்பதற்கு சில நிபந்தனைகளை விதித்தது. அதன்படி, ‘தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும். சுற்றுச்சூழலை அதிகம் பாதிக்கும் பேரியம், சல்பர் போன்ற வேதிப்பொருள்களை, பட்டாசுத் தயாரிப்பில் பயன்படுத்தக் கூடாது. இனி பசுமைப் பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும்’ என்று சொன்னது. மேலும், இந்த விதிமுறைகளை மீறுவோரைக் கண்காணிக்கும்படியும் மாநில அரசுகளுக்கும் சுற்றுச்சூழல் துறைக்கும் உத்தரவிட்டது.

இதனால் கடந்த ஆண்டு நாடு முழுவதும் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கவே மக்கள் பயந்தார்கள். பல ஊர்களில் பட்டாசு வெடித்தவர்கள்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. பட்டாசுக்கடைகள் வைப்பதற்கு விதிக்கப்பட்ட கடுமையான விதிமுறைகளைக் கண்டு பயந்து பலரும் கடை போடவில்லை. பட்டாசுமீதான இந்த உத்தரவுகள் மற்ற மாநிலங்களைவிட, தமிழக மக்களை மிகவும் பாதித்தது. இந்த நிலையில்தான், இந்தாண்டு பசுமைப் பட்டாசுகளைத் தயாரிப்பதில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. பட்டாசு உற்பத்தியாளர்கள் இரண்டு அணியாகப் பிரிந்து நிற்கிறார்கள்’’ என்றார்கள்.

‘நீரி’யிடம் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளாத ஆலை உரிமையாளர்கள் தரப்பில் பேசினோம். ‘‘நடைமுறையில் பார்த்தால் பசுமைப் பட்டாசு என்ற ஒன்றைத் தயாரிக்கவே முடியாது. அப்படித் தயாரித்தாலும் அது பட்டாசாக இருக்காது. பட்டாசுத் தயாரிக்க பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு நிறுவனம்தான் (PESO - பெஸோ) அனுமதி அளிக்க வேண்டும். பட்டாசில் என்னென்ன வேதிப்பொருள் சேர்க்க வேண்டும் என்றும் அவர்கள்தான் சொல்ல வேண்டும். ‘நீரி’க்கு அந்த அதிகாரம் இல்லை. அப்படி இருக்கும்போது இங்குள்ள சில பெரிய நிறுவனங்கள், ‘நீரி’யுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு பசுமைப் பட்டாசு தயாரித்ததாகக் கூறுவது பொய். வழக்கமான முறையில்தான் தயாரித் துள்ளார்கள். பசுமைப் பட்டாசுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல், சிறிய பட்டாசு ஆலைகளை அழிக்கப் பார்க்கிறார்கள்’’ என்றார்கள்.

‘நீரி’யுடன் ஒப்பந்தம்போட்டுக்கொண்ட பசுமைப் பட்டாசு உற்பத்தியாளர் அபிரூபனிடம் பேசினோம். ‘‘தற்போது இங்கு 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. எல்லோரும் தொழிலைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென்றால் நீதிமன்ற வழிகாட்டலை கடைப்பிடிக்க வேண்டும். ‘காற்றில் மாசு அதிகம் ஏற்படுகிறது. அதனால், அதிக மாசு உண்டாக்கும் வேதிப்பொருள்களைக் குறைத்து பசுமைப் பட்டாசு தயாரியுங்கள்’ என்றது நீதிமன்றம். பசுமைப் பட்டாசு எப்படித் தயாரிப்பது என்று கேட்டதற்கு, மத்திய அரசு நிறுவனமான ‘நீரி’யிடம், ‘வேதிப்பொருள்களைக் குறைவாகச் சேர்த்து பட்டாசு தயாரிக்க ஆராய்ச்சி செய்யுங்கள்’ என்று உத்தரவிட்டது நீதிமன்றம். ஆய்வுகளை முடித்த ‘நீரி’ ஆய்வாளர்கள் சிவகாசிக்கு வந்து, பட்டாசுத் தயாரிப்பிலுள்ள பல விஷயங்களைப் பார்த்துவிட்டு பேரியம், நைட்ரேட் கலக்காமல் பட்டாசுகளை உருவாக்கி டெமோ செய்து காட்டினர். அவர்களுடன் பட்டாசு ஆலைகள் ஒப்பந்தம் போட்டு செயல்பட்டோம். அப்போது பல பட்டாசு உற்பத்தியாளர்கள் சேரவில்லை.

ஒருசிலர் மட்டும் நீரியின் ஃபார்முலாவை வாங்கி பட்டாசுகள் தயாரித்தோம். அதற்கு ‘நீரி’க்கு முப்பதாயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தொழிலைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றால், இதைச் செய்துதானே ஆக வேண்டும். ஆனால், பசுமைப் பட்டாசுக்கு நாங்கள் மாற மாட்டோம் என்று சொன்னால், என்ன செய்வது? இப்போது சிவகாசியிலுள்ள பெரும்பாலான பட்டாசு ஆலை உரிமையாளர்கள், ‘நாங்களும் நீரியுடன் இணைந்துகொள்கிறோம்’ என்று வருகிறார்கள். ஒருசிலர் மட்டும் தேவையில்லாத அவதூறுகளைப் பரப்பிவருகிறார்கள். ’’ என்றார்.

குழப்பத்தில் கிடக்கிறது சிவகாசி!