Published:Updated:

இயற்கையுடன் வாழ்வது என்பது இயல்பாக வாழ்வது!

தற்சார்பு வாழ்வியல் பயிற்சி
பிரீமியம் ஸ்டோரி
தற்சார்பு வாழ்வியல் பயிற்சி

- அவள் விகடன் - பசுமை விகடனின் தரமான முன்னெடுப்பு...

இயற்கையுடன் வாழ்வது என்பது இயல்பாக வாழ்வது!

- அவள் விகடன் - பசுமை விகடனின் தரமான முன்னெடுப்பு...

Published:Updated:
தற்சார்பு வாழ்வியல் பயிற்சி
பிரீமியம் ஸ்டோரி
தற்சார்பு வாழ்வியல் பயிற்சி

அவள் விகடன் மற்றும் பசுமை விகடன் சார்பில் ‘நல்வாழ்வு நம் கையில்’ - என்ற தற்சார்பு வாழ்வியல் பயிற்சி, திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள பாபநாசத்தில் ஆகஸ்ட் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. விகடன் குழுமத்தின் புது முயற்சி யாக இந்தப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது. உலகத் தமிழ் மருத்துவக் கழகத்தின் நிறுவனரும் சித்த மருத்துவரு மான மைக்கேல் செயராசு தலைமையில் பயிற்சி நடைபெற்றது.

“ரசாயனத் துறையில் பணியாற்றும் எனக்கு இயற் கையின் வழியில் வாழ்க்கை யைத் தொடங்க வேண்டும்”, “என் கணவருக்கு தற்சார்பு வாழ்க்கை பற்றிய தேடல் இருக்கிறது. அவர் வெளிநாட்டில் இருப்பதால் இங்கு என்னையும் என் ஒன்பது வயது மகனையும் அனுப்பினார்”, “இயற்கைக்கு பாதகம் விளைவிக்கும் பட்டாசுத் தொழிலைக் கைவிட்டு இயற்கை அங்காடி வைக்க விருப்பம்”, “இரைச்சல் மிகுந்த நகரத்திலிருந்து கிராமத்துப் பக்கம் செல்ல விரும்புகிறோம்” எனப் பல்வேறு நோக்கங்களுடனும் தேடல்களுடனும் பெங் களூரு, சென்னை, கரூர், தஞ்சை, சிவகாசி, சிவகங்கை உள்ளிட்ட இடங்களிலிருந்து 22 பேர் பயிற்சியில் பங்கேற்றனர்.

 பாரம்பர்ய விளையாட்டு
பாரம்பர்ய விளையாட்டு
இயற்கையுடன் வாழ்வது என்பது இயல்பாக வாழ்வது!

முதல் நாள் சித்தர் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அம்பா சமுத்திரத்தைச் சேர்ந்த இயற்கை நெல் உற்பத்தியாளர் லட்சுமி தேவி, “பல ஆண்டுகளாக தைராய்டு உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப் பட்டு வந்தேன். ஒருகட்டத்தில் நாம் சாப்பிடும் உணவுதான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் என்பது புரிந்தது. முதலில் எனக்கு மட்டும் நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஒரு நிலம் வாங்கினேன்.

வீட்டுக் கொல்லையில், தோட்டத்தில் சில காய்கறிகள், கீரைகள் பயிரிட்டேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி பயன்படுத்தக் கூடாது என்று முடிவெடுத்தேன். மூன்றே ஆண்டுகள் எல்லா உடல்நலப் பிரச்னைகளிலிருந்தும் மீண்டு வந்துவிட்டேன். நான் பெற்ற நன்மையை என் மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக இயற்கை விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினேன்” என்றவர் சமீபத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினிடம் `பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பர்ய நெல் பாது காவலர் விருது’ பெற்றிருக்கிறார்.

 யோகா
யோகா
 மூலிகை நடை
மூலிகை நடை

தற்சார்பு வாழ்க்கை பற்றிய விளக்கம், யோகா, அன்றாட வாழ்க் கைக்குத் தேவையான மூலிகைகள் குறித்து அறிந்துகொள்ளும் மூலிகை நடை, தாமிரபரணி தீபாராதனை, ஆற்றில் குளியல், தீக்களியாட்டம் (Camp Fire) என மூன்று நாள்களும் கலவையான நிகழ்ச்சிகள் நடை பெற்றன. ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம்’ என நம் பாரம்பர்ய விளையாட்டுகளில் ஒன்பது வயது சிறுவன் முதல் 68 வயது முதியவர் வரை களமிறங்கினர்.

மும்பையில் ஐடி வேலையைவிட்டு தற் சார்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கும் சுதாகர், நிரந்தர வேளாண்மையில் (Permaculture) ஈடுபட்டு வரும் பெலிக்ஸ் ஆகியோரின் வீடு, தோட்டத்துக்குச் சென்று அவர்களின் தற்சார்பு வாழ்க்கையைக் நேரடியாகப் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொண்டனர் பங்கேற்பாளர்கள். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக கடைசி நாள் பயிற்சியில் அருகம்புல் தைலம், ஆடாதோடை மணப்பாகு, அரக்குச் சூரணம் எனச் சில மருந்துகளை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களே தயாரித்தனர்.

 மருந்து தயாரிப்பு
மருந்து தயாரிப்பு
 தற்சார்பு வாழ்க்கை - ஸ்பாட் விசிட்
தற்சார்பு வாழ்க்கை - ஸ்பாட் விசிட்

ஆர்கானிக் உணவு!

காலை 6 மணிக்கு கருப்பட்டி காபியில் தொடங்கி வரகரிசிப் பொங்கல், அவல் கேசரி, சிறுதானிய இட்லி, கோதுமை ரவை கேசரி, சாமை சாம்பார் சாதம், குதிரைவாலி காய்கறி பிரியாணி, பால் கொழுக்கட்டை, தினைப் பாயசம் என மூன்று நாள்களும் மூன்று வேளைகளும் நவதானியங்களால் சமைக்கப்பட்ட ஆர்கானிக் உணவுகள் பரிமாறப் பட்டன. இரண்டு நாள்களும் மொட்டை மாடி நிலவொளியில் இரவு உணவு பரிமாறப்பட்டது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

“அந்தக் காலத்தில் அதிகாலை 4 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வீட்டிலிருக்கும் கஞ்சியை எடுத்துக்கொண்டு 7 மணிக்கெல்லாம் வயலுக்குச் சென்றுவிடுவார்கள். வேலையின் நடுவே 11 மணியளவில் கஞ்சியைக் குடித்துவிட்டு சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு மீண்டும் வயலுக்குச் செல்வார்கள். மீதமிருக்கும் கஞ்சியை 3 மணியளவில் குடித்துவிட்டு, வீட்டுக்குக் கிளம்பும்போது வேலியில் வளர்ந்துள்ள கீரைகள், காய்கறிகளைப் பறித்துச் செல்வார்கள். அனைத்தை யும் ஒரே பாத்திரத்தில் போட்டு ஒரே சமையல் செய்வார்கள். 7 மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்று விடுவார்கள். இதுபோன்ற வாழ்க் கையை வாழ்ந்ததால்தான் சர்க்கரைநோய், தைராய்டு, பிசிஓடி என வாழ்வியல் சார்ந்த நோய்கள் எதுவும் இல்லாமல் இருந்தனர்.

இயற்கையுடன் வாழ்வது என்பது இயல்பாக வாழ்வது!
இயற்கையுடன் வாழ்வது என்பது இயல்பாக வாழ்வது!
 அறுசுவை விருந்து
அறுசுவை விருந்து

அந்த வாழ்க்கைதான் பெண்களுக்கு அடுப்படி யிலிருந்து சுதந்திரத்தைக் கொடுத்தது. காரணம், ஒருவேளைதான் சமையலே நடக்கும். ஆனால் இன்றோ காலை, முன்பகல், மதியம், மாலை, இரவு என எந்நேரமும் சாப்பிட்டுக்கொண்டே இருக் கிறோம். இயற்கையோடு ஒன்றி இயல்பாக வாழ்ந்தால் நோய் நொடியின்றி வாழலாம்” என்ற கருத்தோடு நிகழ்ச்சியை நிறைவு செய்தார் சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு.

பயிற்சியில் பங்கேற்ற அனைவரும் இந்த மூன்று நாள் பயிற்சியின் நிறைவில் ‘இயற்கையுடனான வாழ்க்கையில் முதல் அடியை வைத்து விட்டோம்’ என்று உணர்வுபொங்க தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து விடைபெற்றனர்.

விரைவில் மீண்டும் தற்சார்பு வாழ்வியல் பயிற்சி நடைபெறவுள்ளது! எங்கே... எப்போது...அறிவிப்பு விரைவில்!