என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

என் பேரு பட்டிமன்றம் இல்லீங்க!

அன்னபாரதி
பிரீமியம் ஸ்டோரி
News
அன்னபாரதி

- அன்னபாரதி

‘குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது பாயசமா, ஐஸ்க்ரீமா...’ என்ற தலைப்பில், `ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு சளி பிடிக்கும். பாயசம் சாப்பிட்டா சளி பிடிக்காது’ என்று நகைச் சுவையாகப் பேசி, கைதட்டல் வாங்கி ஐந்தாம் வகுப்பிலேயே பட்டிமன்ற மேடையேறியவர் அன்னபாரதி. திருநெல்வேலிக்காரர்.

“நான் பேசுற தமிழை எல்லாரும் செமையா கலாய்ப்பாங்க. ‘கொசு கடிக்கி’ன்னு சொன்னா, ‘அதென்ன நிக்கி, விக்கி, திக்கின்னு பாதி யிலேயே நிக்குற’ன்னு கேப்பாங்க. எங்க பகுதியில பசிக்கிறதுக்கு, ‘வயிறு பசிக்கி’ன்னு தான் சொல்வாங்க. அப்படி நான் சொல்லிட் டேன்னா வயிறுதான பசிக்கும். கைகால் எல்லாத்துக்கும் தனித்தனியா பசிக்குமா’ன்னு கிண்டல் பண்ணுவாங்க”

- ஓப்பனிங்கிலேயே நம்மையும் நெல்லை பக்கம் அழைத்துச்சென்றவர், 15 ஆண்டுகளாக மேடையேறி கலக்கி வருகிறார்.

“பாரதியார் பல்கலைக்கழகத்துல எம்.பில் படிக்கும்போதே அறிவொளியின் தலைமை யிலான பட்டிமன்றத்துக்கு துபாய் போனேன். நிகழ்ச்சி முடிஞ்சதும் கலந்துகிட்ட எல்லார் கிட்டயும் அவங்கவங்க மேடை அனுபவம் பத்திக் கேட்டாங்க. ஆனா, என்கிட்ட ‘இந்த வயசுல எப்படி உங்க கணவர் இவ்ளோ தூரம் வந்து பேசுறதுக்கு அனுமதிச்சாரு'ன்னு கேட்டாங்க.

அப்போதான் புரிஞ்சுது திருமணத்துக்குப் பிறகு, ஒரு பெண் இத்தனை தூரம் வர்றதுகூட ஒரு பெரிய விஷயம் போலன்னு. ஒரு பெண் வெற்றிகரமாக இருக்கணும்னா குடும்பப் பிணைப்பு நிச்சயமா வேணும்”

- சென்டிமென்ட்டாகப் பேசுகிறார்.

என் பேரு பட்டிமன்றம் இல்லீங்க!

ஆல் இந்தியா ரேடியோவில் ஓராண்டு `இரவின் மடியில்' என்ற இரவு நேர நிகழ்ச்சி யைத் தொகுத்து வழங்கியிருக்கிறார் அன்ன பாரதி. தொடர்ந்து தனியார் வங்கியின் சேல்ஸ் டீமில் இரண்டாண்டுகள் பணியாற்றி இருக்கிறார். கலைத்துறையின் மீதான ஆர்வத்தால் தொலைக்காட்சி பக்கம் வந்திருக்கிறார்.

“மக்கள் தொலைக்காட்சியில உரிமைக் குரல், சன் டிவி அரட்டை அரங்கம், கே டிவி மங்கையர் மன்றம்னு சீரியஸ் மோடுல பேசிட்டு இருந்த எனக்கு சன் டிவி காமெடி ஜங்ஷன் நிகழ்ச்சியில ஸ்டாண்ட் அப் காமெடிங்கிற புது கதவு திறந்துச்சு. ஸ்டாண்ட் அப் காமெடி, பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர், ஆன்மிகச் சொற்பொழிவு, ஆங்கரிங்ன்னு 3,000 மேடைகளுக்கு மேல் பர்ஃபாம் பண்ணிட்டேன்” என்பவர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவராக இருந் தாலும் இந்து கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவுகளும் செய்கிறாராம்.

“குடிச்சிட்டு நிகழ்ச்சிக்கு வர்றவங்கதான் நம்ம பேச்சுக்கு கவுன்ட்டர் குடுத்திட்டே இருப்பாங்க. என்ன ஜோக் சொன்னாலும், ‘இதெல்லாம் எப்போவோ கேட்டாச்சு...அடுத்து... அடுத்து’னு கலாய்ப்பாங்க. இன்னும் சில ரசிகர்கள் நைட்டு தூங்கிட்டு இருக்கும்போது போன் பண்ணி, ‘ஹலோ! பட்டிமன்றம்தானே’ன்னு கேப்பாங்க. என் பேரு பட்டிமன்றம் இல்லீங்க, பாரதின்னு சொல்லுவேன்.

முன்னல்லாம் ரசிகர்களை நேர்ல பாக்கும்போது உங்களை டிவியில பார்த்தோம்னு சொல்வாங்க. அப்புறம் யூடியூப்ல பார்த்தோம்னு சொல்வாங்க. அப்புறம் டிக்டாக்ல பார்த்தோம்னு சொல் வாங்க... 2021-ல கொரோனா வார்டுல பார்த்தேன்னு சொல்லாம இருக்கணும்” என்பவர் லாக்டௌன் காலத்திலும் வெர்ச்சுவல் ஈவென்ட்டில் பிஸியாக இருந்திருக்கிறார்.

“காமெடி ஜங்ஷன்ல வந்த பிறகு, மதுரை முத்து சாரும் நானும் சேர்ந்த காம்போவுக்கு நிறைய வரவேற்பு இருந்துச்சு அது பட்டிமன்ற மேடைகள் லேயும் எதிரொலிக்குது’’ என்பவர் சுசீந்திரன் இயக்கத் தில் வெளியாக இருக்கும் ‘சிவ சிவா’, ‘குற்றம் குற்றமே’ என இரண்டு படங்களிலும் நடித்திருக்கிறார்.

“இந்த ரெண்டு படங்களும் எங்க ஏரியா பக்கத்துல ஷூட் பண்ணினதால ஒப்புக் கிட்டேன். சிம்புவின் `ஈஸ்வரன்' படத்துலயும் நடிச் சிருக்க வேண்டியது. மிஸ்ஸா யிடுச்சு.

சீரியல் வாய்ப்பும் வருது. சென்னைல இருக்க வேண்டி யிருக்கிறதால ஒப்புக்க முடியல. நான் இருக்கிற பகுதிகள்லயே நிகழ்ச்சிகளுக் கான வாய்ப்புகள் கிடைக்குது. வீடு, மேடைப்பேச்சு ரெண் டையும் சரியா பேலன்ஸ் பண்ண முடியுது. இதுக்கு மேல என்ன வேணும்...”

- நிறைவாகப் பேசுகிறார் அன்னபாரதி.

“வாழ்க்கை எப்போ

ஜம்முன்னு இருக்கும் தெரியுமா மச்சான்?”

“எப்படா?”

“பொண்டாட்டி திட்டும்போது உம்முன்னும் பூரிக்கட்டையால அடிக்கும்போது கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்.”

“திருமணமான ஆண்கள் எப்போ சந்தோஷமா இருப்பாங்க தெரியுமா?”

“எப்போ?”

“ஒண்ணு அமைஞ்ச மனைவி வரமா இருக்கணும்... இல்லைன்னா ஊருக்குப் போன மனைவி வராம இருக்கணும்.”