Published:Updated:

பென்னிகுயிக் பயன்படுத்திய பொருள்கள் பாதுகாக்கப்படுமா?

மிதவைப் படகு
பிரீமியம் ஸ்டோரி
News
மிதவைப் படகு

எதிர்பார்ப்பில் தேனி மக்கள்

முல்லைப் பெரியாறு அணை... பொறியியல் துறையின் போற்றுதலுக்குரிய கட்டுமானம்; ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்துக்கான ஆதாரம். அதனால்தான் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கை தெய்வமாக வழிபடுகின்றனர் தேனி மாவட்ட மக்கள். இந்த மாவட்டத்தில், சுபநிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்களில் கடவுள் படம் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் முல்லைப் பெரியாறு அணை மற்றும் பென்னிகுயிக் படங்கள் இருக்கும். `‘நூற்றாண்டைக் கடந்தும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் பென்னிகுயிக். ஆனால், அணை கட்டுமானத்தின்போது அவர் பயன்படுத்திய பொருள்கள் அழியும் நிலையில் இருக்கின்றன’’ என்று கலங்குகின்றனர் தேனி மாவட்ட மக்கள்.

பென்னிகுயிக் பயன்படுத்திய 
சாய்வு நாற்காலி
பென்னிகுயிக் பயன்படுத்திய சாய்வு நாற்காலி

முல்லைப் பெரியாறு அணை கட்டியபோது பயன்படுத்தப்பட்ட மிதவைப்படகு, கலவை இயந்திரம் மற்றும் பென்னிகுயிக்கின் சாய்வு நாற்காலி ஆகியவை முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்பில்லாமல் கிடக்கின்றன. `அழியும் நிலையில் உள்ள அவற்றை மீட்டு, லோயர் கேம்பில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்’ என, பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியம் கிடையாது. ஏனோ தெரியவில்லை, அதைச் செய்யாமல் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கின்றனர் ஆட்சியாளர்கள்.

இதுகுறித்து அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் தேனி மாவட்டச் செயலாளர் திருப்பதி வாசகனிடம் பேசினோம்.

‘‘தமிழகத்தில் தை முதல் தேதி அன்றுதான் பொங்கல் என்றாலும், தேனி மக்களுக்கு பென்னிகுயிக் பிறந்த நாளான தை 2-ம் தேதிதான் பொங்கல். பென்னிகுயிக்கை, எங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கிறோம். அவர் மட்டும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியிருக்க வில்லையெனில், இங்கு வாழ்வாதாரம் இருந்திருக்காது. அதனால்தான் அவரை நாங்கள் தெய்வமாக வழிபடுகிறோம். அணை கட்டுமானப்பணியின்போது பயன்படுத்தப்பட்ட இரும்புப்படகு, அணையின் கரை அருகே துருப்பிடித்துக் கிடக்கிறது. சிமென்ட் கலவை இயந்திரங்கள் ஷட்டர் பகுதிக்கு அருகே இருக்கின்றன. இவைமட்டுமல்ல, பென்னிகுயிக் தங்கியிருந்த வீடும், அதனுள்ளே அவர் பயன்படுத்திய சாய்வு நாற்காலியும் இருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
மிதவைப் படகு
மிதவைப் படகு

இவை அனைத்தும் பராமரிப்பில்லாமல் கேட்பாரற்றுக் கிடப்பது எங்களுக்கு வேதனையளிக்கிறது. ‘அவை சாதாரண பொருள்கள் அல்ல, வரலாற்றுச் சுவடுகள். அந்தப் பொருள்களை எடுத்துவந்து லோயர் கேம்பில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்தில் வைக்க வேண்டும்’ என்று ஆட்சியாளர்கள் அனை வரிடமும் நூற்றுக்கணக்கான மனுக்கள் கொடுத்துவிட்டோம். ஆனால், இதுவரை எந்தப் பலனுமில்லை. இதைச் செய்வதில் என்ன சிக்கல் எனத் தெரியவில்லை. ஏதோ புதிதாக ஒரு அணையையே கட்டச் சொன்னதுபோல் மலைக்கின்றனர். அணை கட்டுமானத்தின்போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பொருள்களையும் மீட்டு அதனுடன் வைக்க வேண்டும்’’ என்றார்.

கலவை இயந்திரம்
கலவை இயந்திரம்

முல்லைப் பெரியாறு அணையின் முன்னாள் செயற்பொறியாளர் சுதந்திர அமல்ராஜிடம் பேசினோம்.

‘‘மனிதன் கடக்கவே முடியாத காட்டாற்றின் ஓட்டத்தைத் தடுத்து அதன் குறுக்கே கட்டப்பட்டதுதான் முல்லைப் பெரியாறு அணை. சீறிப்பாயும் காட்டாற்றில் அணை கட்டத் தேவையான மணலை எடுக்க முடியாது. எனவே, இரும்பினால் ஆன மிதவைப்படகை (Treging Boat) அப்போது பயன்படுத்தினர். அந்தப் படகில் ஆற்றில் சிறிது தூரம் பயணித்து மணலை அள்ளிக்கொண்டு வந்திருக்கின்றனர். அணை கட்டத் தொடங்கிய நாள் முதல் அணை கட்டி முடிக்கப்படும் வரை அந்தப் படகு பயன் பட்டிருக்கிறது. அணை கட்டுமானப் பணியில் பென்னிகுயிக்குடன் வேலைசெய்த பொறியாளர் ஜான் மெக்கன்சி எழுதியுள்ள புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். அப்பேர்பட்ட வரலாற்றுப் பொக்கிஷம் இன்று புதருக்குள் கிடக்கிறது. வரும் தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் அதைப் பாதுகாப்பதும் அவசியம்’’ என்றார்.

முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணை

இதுதொடர்பாக முல்லைப் பெரியாறு அணையின் செயற்பொறியாளர் சாம் இர்வினிடம் பேசினோம்.

‘‘சாய்வு நாற்காலியை உடனே சரிசெய்கிறேன். கலவை இயந்திரம் மற்றும் மிதவைப்படகை லோயர் கேம்ப் கொண்டுவருவது குறித்து என்னுடைய மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கிறேன். அவர்களின் அறிவுரையின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

பென்னிகுயிக் பயன்படுத்தியவை வெறும் பொருள்கள் அல்ல... பொக்கிஷங்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிசயம்... ஆச்சர்யம்..!

1870-களின் கடைசியில் சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பஞ்சம், பிரிட்டிஷ் அரசாங்கத்தை முல்லைப் பெரியாறு அணை கட்டும் திட்டத்தைக் கையிலெடுக்கத் தூண்டியது. தொடர் ஆய்வுகளுக்குப் பிறகு, 1887-ல் 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முல்லைப் பெரியாறு அணை கட்டுமானப்பணி தொடங்கியது. 1895 அக்டோபர் 10-ம் தேதி கட்டுமானப்பணி நிறைவுபெற்று, அப்போதைய சென்னை மாகாண கவர்னர் லார்டு வென்லாக் என்பவரால் திறக்கப்பட்டது.

பென்னிகுயிக் பயன்படுத்திய பொருள்கள் பாதுகாக்கப்படுமா?

திறப்பு விழாவில் பேசிய அவர், ‘`முல்லைப் பெரியாறு அணையின் உறுதியும் நவீன தொழில்நுட்பமும் பொறியியல் உலகில் ஆச்சர்யமாகப் பேசப்படும்... அதிசயமாகப் பார்க்கப்படும்’’ என்றார். அந்த அதிசயத்தை நிகழ்த்தியவர்தான், ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்.