Published:Updated:

தீபாவளிக்கு ரூ.1 கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள்? - மனதில் நிரம்பிக்கிடக்கும் எதிர்பார்ப்புகள்!

ரூ.1 கோடி
பிரீமியம் ஸ்டோரி
ரூ.1 கோடி

செலவுக்கான திட்டம் மட்டும் இருந்தால் போதாது, அந்தத் தொகையை எப்படிச் சேர்ப்பது என்கிற திட்டமும் நம்மிடம் இருக்க வேண்டும்!

தீபாவளிக்கு ரூ.1 கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள்? - மனதில் நிரம்பிக்கிடக்கும் எதிர்பார்ப்புகள்!

செலவுக்கான திட்டம் மட்டும் இருந்தால் போதாது, அந்தத் தொகையை எப்படிச் சேர்ப்பது என்கிற திட்டமும் நம்மிடம் இருக்க வேண்டும்!

Published:Updated:
ரூ.1 கோடி
பிரீமியம் ஸ்டோரி
ரூ.1 கோடி
தீபாவளிக்கு உங்களுக்கு ரூ. 1 கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று பலரிடம் கேட்டோம்.

கால்நடைப் பண்ணை அமைப்பேன்

மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன், இவர் திருச்சியில் ஹோட்டல் ஒன்றில் செஃப்பாகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி, மூன்று மகன்கள் உள்ளனர்.

‘‘கொரோனா பாதிப்பால் வேலை இழந்த பலரும் தங்களின் சொந்தக் கிராமத்துக்கு வந்துவிட்டார்கள். கிராமத்தில் பால் பண்ணை, ஆட்டுப் பண்ணை, விவசாயத் தோட்டங்கள் வைத்திருந்தவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. அவர்களுக்கு எப்போதும்போல் வேலை இருந்தது. கூடவே நல்ல வருமானமும் கிடைத்தது. எனக்கு கோடி ரூபாய் கிடைத்தால் வீட்டின் அருகே இரண்டு ஏக்கர் நிலம் வாங்குவேன். இதற்கு ரூ.20 லட்சம் செலவாகும். அந்த இடத்தில் நாட்டுக் காளைகள், பசுக்கள், வெள்ளாடுகள், நாட்டுக் கோழிகள் இவற்றை வாங்கி தனித்தனியே செட் போட்டு பண்ணை அமைப்பேன்.

தீபாவளிக்கு ரூ.1 கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள்? - மனதில் நிரம்பிக்கிடக்கும் எதிர்பார்ப்புகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தக் கால்நடைகளை பராமரிக்க, அவற்றுக்குத் தேவையான உணவுகளான புல், வைக்கோல், பிண்ணாக்கு ஆகியவற்றை நானே தயார் செய்வேன். அதற்காக சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்வேன். ஏற்கெனவே வீட்டிலேயே சிறிதாக இவற்றைச் செய்து பழகியிருப்பதால், எனக்கு இது ஒன்றும் கஷ்டமான காரியமாக இருக்காது.

நாட்டுக் கோழி முட்டைகளுக்கு எப்போதுமே அதிக தேவை இருக்கிறது. கொரோனா காலத்தில் நாட்டுக்கோழி முட்டை ஒன்றின் விலை ரூ.15, ரூ.20 விற்றது. நான்காயிரத்துக்கு விற்ற ஆடுகள் கொரோனா காலத்தில் ரூ.7,000 – ரூ.8,000 என நல்ல விலைக்கு விற்கப்பட்டன.

இந்தப் பண்ணையில் உற்பத்தியாகும் பொருள்களைச் சுற்றுப்புறத்தில் இருப்பவர் களுக்குதான் முதலில் விற்பனை செய்வேன். தாத்தா, பாட்டி விவசாயத்தில் இருப்பதால் அவர்களின் அனுபவத்தையும் பயன்படுத்திக் கொள்வேன்’’ என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தஞ்சாவூர் பள்ளிக்கு ரூ.10 லட்சம்...

சென்னையைச் சேர்ந்தவர் எஸ்.சாந்தி. மாநில அரசுப் பணியாளர். “ரஜினி, அருணாசலம் படத்தில் 30 கோடி ரூபாயை 30 நாளில் செலவு செய்ததுபோல் எனக்கு ஒரு கோடி கிடைத்தால் செய்ய வேண்டிய செலவுப் பட்டியல் மிகவும் நீளமாக உள்ளது.

தீபாவளிக்கு ரூ.1 கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள்? - மனதில் நிரம்பிக்கிடக்கும் எதிர்பார்ப்புகள்!

எனது வாழ்நாள் ஆசை நயாகரா நீர்வீழ்ச்சி சென்று பார்ப்பது. நயாகரா நீர்வீழ்ச்சி என்றதும் என் நினைவில் வருவது எழுத்தாளர் சுஜாதாதான். அவர் நயாகரா நீர்வீழ்ச்சி பார்த்ததைப் பற்றி சிரி(ற)ப்பாக எழுதிய சிறுகதைதான் என்னுள்ளும் நயாகரா பார்க்கத் தூண்டியது. தஞ்சை பெரிய கோயிலைப் போல பிரமாண்டமாகக் கட்டப் பட்டுள்ள கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோயில்களைச் சென்று பார்க்க வேண்டும் என்றும் ஆசை.

சென்ற வருடம் லே லடாக் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதி மற்றும் உலகின் உயரமான வாகனம் செல்லும் பகுதிக்கும் சென்றோம். அங்கே திரும்பிய பக்கமெல்லாம் பனிதான். நம்மால் வாகனத்தை விட்டு இறங்கி குளிரில் சில நொடிகள்கூட நிற்க முடியவில்லை. இன்னும் கடினமான பனியில் நமது ராணுவ வீரர்கள் நாட்டைக் காக்கப் பாடுபடுவது போற்றுதலுக்குரியது. அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசை.

குமரேசன், எஸ்.சாந்தி
குமரேசன், எஸ்.சாந்தி

நான் பயின்ற தஞ்சாவூர் கல்யாண சுந்தரம் பள்ளியின் பெயரில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்து பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பெறும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ரொக்கப் பரிசு வழங்க ஏற்பாடு செய்வேன்.

பொதுவாக, கிராமங்களில் பெண்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி சரியாக இருக்காது. பெண்ணாகிய எனக்கு அதன் கஷ்டம் அதிகம் தெரியும் என்பதால், சரியான கழிப்பறை வசதி செய்து தருவது மற்றும் நாப்கின் வழங்கும் இயந்திரம், நாப்கின் அழிக்கும் இயந்திரம் ஆகியவற்றை வாய்ப்பு வசதி இல்லாத கிராமப் பள்ளிக் கூடங்களுக்கு செய்துகொடுப்பேன்’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவசாயிகளுக்கு மாசச் சம்பளம் கொடுப்பேன்..!

22 வயதான பொறியியல் பட்டதாரி என். பொன்முகில், தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள தளிகை விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர்.

‘‘விவசாயத்துல எனக்கு ரொம்ப ஆர்வம். ரூ.1 கோடி கிடைச்சா அதை வச்சு, சிறப்பா விவசாயம் செய்யலாம். இங்க ஒரு குழி இடம் 25,000 ரூபா போகுது. 100 குழி வாங்க 25 லட்சம் ரூபா தேவைப்படும். இது போக ஆழ்துளைக் கிணறு (போர்வெல்) போட்டு, நவீன விவசாய கருவிகளின் உதவியுடன் விவசாயம் செய்வேன். முக்கியமா, சொந்தமா ஒரு டிராக்டர், காய் கறிகளை சந்தைக்கு எடுத்துக்கிட்டு போக சரக்கு வண்டி, காய்கனிகள் கெட்டுப் போகாமல் இருக்க குளிர்சாதன வசதி ஆகியவற்றை ஏற்படுத்திக் கொள்வேன்.

பொன்முகில், எஸ்.ராஜாஜி
பொன்முகில், எஸ்.ராஜாஜி

ஒரு கோடி ரூபாயை ஒரே நேரத்தில் செலவு செய்ய மாட்டேன். விவசாயிகளுக்கு சம்பளம் கொடுக்க, இடு பொருள்கள் வாங்க எனச் சில லட்சங்களை தனியே இப்பவே பேங்க்கில் போட்டுடுவேன். விவசாயிகளை கௌரவப்படுத்தும் விதமா அவங்களுக்கு மாசம் எல்லா நாளும் சம்பளம் கொடுப்பேன். தீபாவளி, தமிழ்ப் புத்தாண்டு, பொங்கலுக்கு போனஸ் எல்லாம் கொடுப்பேன்.

நான் வளர்க்கிற பயிர், செடி, மரங்களுக்கு எக்காரணம் கொண்டும் ரசாயன உரம், பூச்சிக் கொல்லி பயன்படுத்த மாட்டேன். என் மக்களுக்கு நஞ்சு இல்லா நல்ல காய்கறிகள், பழங்கள் மற்றும் வேளாண் பொருள்களை விளைவிச்சுக் கொடுப்பேன். இதற்கான ஆடு, மாடுகளையும் என் நிலத்தின் அருகிலேயே வளர்ப்பேன்’’ என்றார் நம்பிக்கையுடன்.

காலத்துக்கேற்ற வணிகம்..!

புதுச்சேரியைச் சேர்ந்தவர் எஸ்.ராஜாஜி (வயது 46) என்பவருக்கு இரண்டு மகள்கள் (வயது 14 மற்றும் 8) இருக்கிறார்கள்.

தீபாவளிக்கு ரூ.1 கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள்? - மனதில் நிரம்பிக்கிடக்கும் எதிர்பார்ப்புகள்!

‘‘எனக்கு ரூ.1 கோடி கிடைத்தால் அதைக் கொண்டு பிள்ளைகளின் படிப்புக்கு (ரூ.18 லட்சம் மற்றும் ரூ.12 லட்சம்), கல்யாணத்துக்கு (தலா ரூ.10 லட்சம்) இப்போதே முதலீடு செய்து வைத்துவிடுவேன்.

என் ஓய்வுக்காலத்துக்கு ரூ.30 லட்சம் இப்போதே முதலீடு செய்து வைத்துவிடுவேன். மீதியிருக்கும் 20 லட்சம் ரூபாயைக்கொண்டு பிசினஸ் செய்வேன்.

பிசினஸ் என்கிறபோது இப்போதைய காலத்துக்கு ஏற்ப மரச்செக்கு எண்ணெய் தயாரித்து விற்கத் திட்டமிட்டுள்ளேன். குறிப்பாக, கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய்க்கு நல்ல தேவை இருக்கிறது. இவற்றை மரச்செக்கில் பொதுமக்கள் முன்னிலையிலேயே ஆட்டி விற்பனை செய்வேன்” என்றார்.

ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வது என்ற திட்டம் எல்லோருக்கும் இருக்கிறது. செலவுக்கான திட்டம் மட்டும் இருந்தால் போதாது, அந்தத் தொகையை எப்படிச் சேர்ப்பது என்கிற திட்டமும் நம்மிடம் இருக்க வேண்டும். வேலைக்குச் சேர்ந்த உடனே நாம் முதலீடு செய்யத் தொடங்கினால், நம்மால் நிச்சயமாக ஒரு கோடி ரூபாயைச் சேர்த்து, நம் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism