Published:Updated:

அச்சுறுத்தும் ஆலை... மரண பயத்தில் மக்கள்...

அச்சுறுத்தும் ஆலை...
பிரீமியம் ஸ்டோரி
அச்சுறுத்தும் ஆலை...

கண்டுகொள்ளாத மாசுக்கட்டுப்பாடு வாரியம்!

அச்சுறுத்தும் ஆலை... மரண பயத்தில் மக்கள்...

கண்டுகொள்ளாத மாசுக்கட்டுப்பாடு வாரியம்!

Published:Updated:
அச்சுறுத்தும் ஆலை...
பிரீமியம் ஸ்டோரி
அச்சுறுத்தும் ஆலை...

‘‘எங்கள் ஊரில் செயல்படும் நிறுவனத்தால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துபோனதோடு பல்வேறு நோய்களும் பரவுகின்றன. இந்த நிறுவனத்தை மூட வேண்டும்” என்ற கோரிக்கையோடு பல ஆண்டுகளாகப் போராடிவருகிறார்கள், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகில் உள்ள புதுக்குடி கிராம மக்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அச்சுறுத்தும் ஆலை... மரண பயத்தில் மக்கள்...

இத்தாலி நாட்டு நிறுவனம் ஒன்றுடன், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு தனியார் நிறுவனங்கள் இணைந்து புதுக்குடி கிராமத்தில், ‘சிக்ஜில்சால்’ என்ற பெயரில் தொழிற்சாலை ஒன்றை நடத்திவருகின்றன. காற்றிலிருந்து ரசாயன வாயுக்களைப் பிரித்தெடுக்கும் இந்தத் தொழிற்சாலை மீதுதான், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் குற்றம்சாட்டிவருகிறார்கள்.

புதுக்குடியைச் சேர்ந்த ராஜேந்திரபிரசாத் இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசினார். ‘‘கடந்த 2011-ம் ஆண்டு, ‘சேவா காஸ்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்தத் தொழிற்சாலையில் ஆக்சிஜன், நைட்ரஜன் ஆகியவை மட்டுமே பிரித்தெடுக்கப்பட்டன. பிறகு, இத்தாலி நாட்டு நிறுவனமான சிக்ஜில்சால் கைக்கு மாறிய பிறகு, ஆர்கான் வாயுவையும் எடுக்கத் தொடங்கினர். தண்ணீரில் பலவித வேதிப்பொருள்களைக் கலந்து, அதற்குள் காற்றை அதிவேகத்தில் பீய்ச்சி வாயுக்கள் பிரிக்கப்படுகின்றன. இந்த வாயுக்கள், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அச்சுறுத்தும் ஆலை... மரண பயத்தில் மக்கள்...

‘வாயுக்களைப் பிரித்தெடுப்பதற்கு ரசாயனங்களைப் பயன்படுத்தக் கூடாது. தினமும் 40,000 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தினமும் 140 லிட்டர் கழிவுநீரை மட்டுமே நிலத்துக்குள் விடவேண்டும்’ என்பன உள்ளிட்ட பல விதிமுறைகளில், எதையுமே சிக்ஜில்சால் நிறுவனம் பின்பற்றுவதில்லை.

இந்த நிறுவனம், தினமும் 1.50 லட்சம் லிட்டர் தண்ணீரை நிலத்திலிருந்து உறிஞ்சியதோடு, 35,000 லிட்டர் ரசாயனக் கழிவுநீரை நிலத்துக்குள் விட்டுவந்தது. ஒருமுறை இந்த நிறுவனத்தின் கழிவுநீர் வயலுக்குள் சென்றதால், மொத்த பயிரும் கருகிவிட்டது. அந்த ரசாயனங்களின் விளைவு குறித்து தெரியவந்த பிறகுதான் போராட்டங்களைத் தொடங்கினோம்” என்றார்.

அச்சுறுத்தும் ஆலை... மரண பயத்தில் மக்கள்...

அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன், “இந்த நிறுவனம் அதிக நீரை உறிஞ்சுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்குப் போய்விட்டது. கழிவுகள் நிலத்துக்குள் விடப்படுவதால், பூமிநீர் கடின நீராக மாறிவிட்டது. இதனால், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நீரைக் குடிப்பதால் பலரும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, எங்கள் ஊரில் 10 பேர் இறந்துவிட்டனர். கிட்டத்தட்ட 100 பேர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். அந்தத் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று பல போராட்டங்கள் நடத்தினோம். இதனால், மூன்று மாதங்களுக்கு முன்பு அந்தத் தொழிற்சாலைக்கான உரிமத்தைப் புதுப்பிக்காமல் நிறுத்திவைத்த மாசுக் கட்டுப்பாடு வாரியம், மீண்டும் அனுமதி வழங்கியிருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன் சோதனை ஓட்டமும் நடந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் கிராமமும் சுற்றி உள்ள 10 கிராமங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அந்்தத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுமாறு அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தஞ்சை மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர் யோகன், விடுப்பில் இருக்கிறார். தற்போது கூடுதல் பொறுப்பில் இருக்கும் திருச்சி மாவட்டப் பொறியாளர் லெ‌ஷ்மியிடம் பேசினோம்.

கண்டுகொள்ளாத மாசுக்கட்டுப்பாடு வாரியம்!
கண்டுகொள்ளாத மாசுக்கட்டுப்பாடு வாரியம்!

‘‘நான் பொறுப்பு அதிகாரி. எனக்கு முழுவிவரம் தெரியவில்லை. அதுகுறித்த முழுவிவரங்கள் யோகனுக்குத்தான் தெரியும். ஆனாலும், அந்தத் தொழிற்சாலையால் மக்களுக்குப் பாதிப்புள்ளதா என ஆய்வுசெய்கிறேன்’’ என்றார்.

சிக்ஜில்சால் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் மோகனிடம் பேசினோம். “இந்தப் பகுதியில் நாங்கள் நிறுவனம் தொடங்குவதற்கு முன்பிருந்தே தண்ணீர்ப் பிரச்னை உள்ளது. தண்ணீர் அதிகம் பயன்படுத்துவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது என்று கிராமத்தினர் சொன்னார்கள். அதனால், நாங்கள் வெளியிலிருந்து தண்ணீர் வாங்க ஆரம்பித்தோம். பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய்க் கிணற்றில் கழிவுநீரை விடுகிறோம் என்று புகார் கிளம்பியதால், ஊர் மக்களை வரவழைத்து அவர்கள் மூலமாகவே அந்தக் கிணற்றை மூடினோம். தற்போது ‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால், ஒரு சொட்டு கழிவுநீர்கூட நிலத்துக்குள் போவதில்லை. அவர்களுக்கு எதனால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது என்று எங்களுக்குத் தெரியவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்கள்மீது பொய்க் குற்றச்சாட்டு களைக் கிளப்பிவருகிறார்கள். விதிமுறைப்படி நாங்கள் 100 சதவிகிதம் சரியாகத்தான் செயல்படுகிறோம்” என்றார்.

இந்த விஷயத்தில் அரசு அலட்சியம் காட்டாமல், உடனடியாக விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism