Published:Updated:

பெரம்பலூர் டைனோசருக்கு வயசு ஏழு கோடி!

பெரம்பலூர் டைனோசர்
பிரீமியம் ஸ்டோரி
பெரம்பலூர் டைனோசர்

குன்னம் பகுதியில் கிடைக்கப்பெற்றது டைனோசர் முட்டையா என்பதுதான் பெரும் சர்ச்சையாக இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்

பெரம்பலூர் டைனோசருக்கு வயசு ஏழு கோடி!

குன்னம் பகுதியில் கிடைக்கப்பெற்றது டைனோசர் முட்டையா என்பதுதான் பெரும் சர்ச்சையாக இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்

Published:Updated:
பெரம்பலூர் டைனோசர்
பிரீமியம் ஸ்டோரி
பெரம்பலூர் டைனோசர்
பெரம்பலூர்தான் இப்போ ஹாட் டாக் ஆப் தி தமிழ்நாடு!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த வாரம் பெரம்பலூரில் டைனோசர் முட்டைகளைப் போன்ற பெரிய உருண்டை வடிவிலான படிமங்கள் கண்டெடுக்கப்பட்ட செய்தி மீடியாக்களில் வெளியாக, ஏரியாவே பரபரப்பானது! இது டைனோசர் முட்டைகளா, இல்லையா? என்பது குறித்து நீண்ட விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், ‘நாங்கெல்லாம் டைனோசர் முட்டையவே அசால்ட்டா ஆப்பாயில் போட்டு சாப்ட்டவனுங்கடா. மத்த ஊர்லயெல்லாம், ஆடுமாடுகளைத்தான் வளர்ப்பீங்க... நாங்க டைனோசரையே வளர்த்தவங்க தெரியும்ல’ன்னு பேச்சிலும், வாட்ஸப்பிலும் பெரம்பலூர் இளைஞர்கள் மீம்ஸ் போட்டு அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கண்டெடுக்கப்பட்ட உருண்டைகள் டைனோசர் முட்டையா? இல்லையா என்று விசாரிக்கத் தொடங்கினோம்.

காரை, கொளக்காநத்தம், பிளிமிசை, தாமரைக்குளம், பெருயநாகலூர், காட்டுப்பிரிங்கியம் உள்ளிட்ட கிராமப்புறங்களில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட தொல்லுயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சர்வதேசப் புவியியல் ஆய்வாளர்கள் இம்மாவட்டத்தை ‘உலக தொல்லுயிர்களின் கோட்டை’ (World Fossils Mount) எனக் குறிப்பிடுகிறார்கள். உலகளவில் 5 சதுர கி.மீ. பரப்பில் பாழ்நிலப்பகுதி என்னும் புவியியல் ஆச்சர்யம் கொளக்காநத்தம் பகுதியில் இருக்கிறது. இந்தப் பகுதியில் கிடைத்த ‘பிலமனைட் பாசிலை’ இங்கிலாந்து அரசாங்கம் ஸ்டாம்பாக வெளியிட்டு அங்கீகரித்திருக்கிறது. இந்நிலையில் குன்னம் பகுதியில் கிடைக்கப்பெற்றது டைனோசர் முட்டையா என்பதுதான் பெரும் சர்ச்சையாக இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பெரம்பலூர் டைனோசருக்கு வயசு ஏழு கோடி!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசுப் பள்ளிக்கு அருகே இருக்கும் வெங்கட்டான் ஏரியில் தற்போது குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதற்காக ஏரியை ஆழப்படுத்தியபோது, புதைந்திருந்த பெரிய உருண்டை மற்றும் கடல்வாழ் உயிரினப் படிமங்கள் வெளிப்பட்டுள்ளன. இவை டைனோசர் முட்டைகளின் படிமங்கள் என்றும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நத்தை, ஆமை, கல்மரத்துண்டுகள், நட்சத்திர மீன்போன்ற கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் என்றும் கூறப்படுகிறது. இதேபோல பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூரில் எம்.எஸ்.கிருஷ்ணன் என்ற புவியியல் ஆய்வாளர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்மரம் ஒன்றினைக் கண்டறிந்து பதிவு செய்தார். அதன் பின்னர் பல்வேறு கல் மரங்கள் இந்தப் பகுதியில் உள்ள சுற்று வட்டார கிராமங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ’கிரிடேசியஸ்’ காலத்து மரமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அரியலூரில் கண்டெடுக்கப்பட்ட டைனோசர் முட்டை குறித்து `டேன் செம்’ (Tamilnadu Cement Corporation) அதிகாரிகள் சிலரிடம் பேசினோம், ``1974களில் சுண்ணாம்புப் பாறைகளை டேன் செம் அதிகாரிகள் வெடிவைத்துத் தகர்ந்தபோது அதிலிருந்து (MOLLUSCA) மொலுஸ்கா என்ற பாசில்கள் பல வெளிப்பட்டன. அவற்றுடன் சேர்ந்து, சுமார் 20 செ.மீ. விட்டமுடைய உருண்டையான பொருள் ஒன்றும் தென்பட்டது. இதுதான், அரியலூர் படுகையில் கண்டறியப்பட்ட முதல் டைனோசர் முட்டை. ஆனால், இது டைனோசர் முட்டை என்பது, அங்கிருந்த புவியியலாளர் உட்பட யாருக்கும் தெரியவில்லை. காரணம், அவர்கள் யாரும் டைனோசார் முட்டையைப் பார்த்ததும் இல்லை. அறிந்திருக்கவும் இல்லை. ஆயினும், வித்தியாசமாக, உருண்டை வடிவில் இருந்ததால், இது டைனோசர் முட்டை என்பதே தெரியாமல், அரியலூர் டேன்செம் சுரங்க அலுவலத்தில் வைத்திருந்திருக்கிறார்கள்.

பெரம்பலூர் டைனோசருக்கு வயசு ஏழு கோடி!

அப்போது 1980-களில் சபாரத்தினம், பார்த்தசாரதி ஆகியோர் `மைனிங் ஜியாலஜிஸ்டாக’ வேலைக்குச் சேர்ந்தனர். வெளிநாட்டிலிருந்து வந்தப் புவியியல் ஆய்வாளர் ஒருவர் ``இது ஏதோ உயிரினத்தின் முட்டையாக இருக்கும் என நினைக்கிறேன்” என ஒரு தகவலைச் சொல்லியிருக்கிறார். பின்பு இருவரும், ஜெர்மனியிலுள்ள ஆய்வகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டதில் கல்லங்குறிச்சி பாறைத்தொகுப்பில் கிடைத்த இந்த உருண்டைக் கல் டைனோசர் முட்டை என்றும், ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதியில் வாழ்ந்த SAUROPOD டைனோசரின் முட்டை என்பதும் தெரியவந்தது.

நமது நாட்டில் கடல்சார் படிவங்களில் கிடைத்த டைனோசர் முட்டை இதுதான். வடஇந்திய மாநிலங்களில் அனைத்து டைனோசர் முட்டைகளும் ஆறுசார் படிவங்களிலேயே கண்டறியப்பட்டன. இப்போது அந்த முட்டை தற்போது சென்னையில் உள்ள டேன்செம் அலுவலகத்தில் இருக்கிறது” என்றனர். இதுகுறித்துப் புவியிலாளர் அரியலூர் சந்திரசேகரிடம் பேசினோம்.

``1970-களில் அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி பகுதியில் டைனோசர் முட்டை கண்டெடுக்கப்பட்டது உண்மைதான். ஆனால், குன்னம் பகுதிகளில் கிடைக்கப்பெற்றது டைனோசர் முட்டைகள் இல்லை. அரியலூர், பெரம்பலூர், கடலூர்போன்ற மாவட்டங்கள் 81 மில்லியன் ஆண்டுகள் முன்பு கடல் பகுதிகளாக இருந்துள்ளன. விண்கல் பூமியின்மீது விழுந்ததில் கடல் உள்வாங்கியபோது அதிலிருந்த கடல் நத்தை, ஆமைகள், மீன், சங்கு, பவளப் பூச்சிகள் ஆகியவை படிந்து இன்று தொல்லுயிரிகளாகக் காட்சியளிக்கின்றன. அதுபோலத்தான் இவையும் ஒரு வகைத் தொல்லுயிரிகள். இது எப்படி முட்டை வடிவத்தில் இருக்கிறது என்ற சந்தேகம் வரலாம். இவை அனைத்தும் படிமப்பாறைகளாக (concretions) உருவாகும்போது, ஒரு இடத்தில் ஒரு சிறிய தொல்லுயிர் எச்சமோ அல்லது ஒரு சிறு பொருள் இருந்தால் அதைச் சுற்றித் தாதுக்கள் (mineral precipitate), சிறு சிறு அடுக்குகளாகச் சேர்ந்து முட்டை வடிவில் உருமாறி இருக்குமே தவிர, இவை உண்மையான முட்டைகள் அல்ல” என்றார்.

பெரம்பலூர் டைனோசருக்கு வயசு ஏழு கோடி!

திருச்சி அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவகுமார் மற்றும் அரியலூர் மாவட்ட புதை உயிரி அருங்காட்சியக (பொ) காப்பாட்சியர் உமாசங்கர் ஆகியோர் குன்னம், ஆனைவாரி பகுதியில் மேற்கொண்ட கள ஆய்விற்குப் பிறகு மீடியாக்களுக்கு அளித்த பேட்டியில், ”குன்னம் ஏரியில் குடிமராமத்துப் பணியின்போது கண்டறியப்பட்ட உருண்டைகள் டைனோசர் முட்டைகள் கிடையாது. அதில் மூன்று உருண்டைகளின் மையத்தில் அமோனைட் எனப்படும் கடல் வாழ் நத்தைகளின் படிமங்கள் உள்ளன. அதாவது, நத்தைகளின் படிமங்கள்மீது அம்மோனைட் படிவதால் ஏற்படும் உருண்டைதான் இது. அமோனைட் மற்றும் கடலில் வாழும் உயிரினத்தின் ஓடுகளான கிளிஞ்சல்கள் குன்னம் பகுதியில் பல இடங்களில் அதிகம் கண்டறியப்பட்டு வருகிறது” என்றனர்.

இப்போது கிடைத்திருப்பவை டைனோசர் முட்டைகள் இல்லை என்றாலும், ஏற்கெனவே டைனோசர் முட்டைகள் கிடைத்த தொன்மையான பகுதிதான் தமிழகம்.