Published:Updated:

சாதிப்பாகுபாடு, சர்ச்சைக் கேள்வி, பாலியல் வழக்கு... பெரியார் பல்கலைக் ‘கலகம்’

பெரியார் பல்கலைக்கழகம்
பிரீமியம் ஸ்டோரி
பெரியார் பல்கலைக்கழகம்

பல்கலைக்கழகத்தில் ஜனநாயகரீதியாக எதுவும் நடைபெறவில்லை. சாதியை முன்னிறுத்தித்தான் பல்கலைக்கழகமே இயங்கிவருகிறது

சாதிப்பாகுபாடு, சர்ச்சைக் கேள்வி, பாலியல் வழக்கு... பெரியார் பல்கலைக் ‘கலகம்’

பல்கலைக்கழகத்தில் ஜனநாயகரீதியாக எதுவும் நடைபெறவில்லை. சாதியை முன்னிறுத்தித்தான் பல்கலைக்கழகமே இயங்கிவருகிறது

Published:Updated:
பெரியார் பல்கலைக்கழகம்
பிரீமியம் ஸ்டோரி
பெரியார் பல்கலைக்கழகம்

சாதிப்பாகுபாடு, சர்ச்சைக் கேள்வி, பாலியல் வழக்கு என அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளால் அதிர்ந்து நிற்கிறது சேலம் பெரியார் பல்கலைக்கழகம்!

வாழ்நாள் முழுக்க சாதி ஒழிப்பை முன்னிறுத்திப் போராடிய பெரியாரின் பெயரைத் தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தில், ஆதிக்க சாதி மனப்பான்மை வலுத்துவருகிறது என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே இருந்துவருகிறது. இந்த நிலையில், பல்கலைக்கழக தேர்வு வினாத்தாளில், ‘தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது?’ என்ற சர்ச்சைக்குரிய கேள்வி அண்மையில் கேட்கப்பட்டிருந்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தங்கள் சமுதாயத்தை இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி, நாடார் மஹாஜன சங்கம் சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது. அந்தச் சர்ச்சை அடங்குவதற்குள் ஆராய்ச்சி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக பல்கலைக்கழகப் பதிவாளரே கைதுசெய்யப்பட்டிருப்பது பிரச்னையின் சூட்டை அதிகப்படுத்தியிருக்கிறது.

சாதிப்பாகுபாடு, சர்ச்சைக் கேள்வி, பாலியல் வழக்கு... பெரியார் பல்கலைக் ‘கலகம்’

பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பின் மண்டலத் தலைவர் பிரகாஷ், “பல்கலைக்கழகத்தில் ஜனநாயகரீதியாக எதுவும் நடைபெறவில்லை. சாதியை முன்னிறுத்தித்தான் பல்கலைக்கழகமே இயங்கிவருகிறது. பதிவாளர் உட்பட பல்கலைக்கழகத்திலுள்ள முக்கியப் பொறுப்புகளுக்கு தகுதியான நபர்களை நியமிக்காமல், தனக்கு வேண்டப் பட்டவர்களுக்கும், தனது சமூகத்தைச் சார்ந்தவர்களுக்குமே கூடுதல் பொறுப்பு கொடுத்து அமரவைக்கிறார் துணைவேந்தர். இதற்காகவே ஆட்சிப் பேரவைக் கூட்டத்தைக் (சிண்டிகேட்) கூட்டுவதற்கும் கடந்த இரண்டு வருடங்களாக ஒப்புதல் வழங்காமல் இருக்கிறார். காரணம் கேட்டால், ‘நேரமில்லை’ என்று தட்டிக்கழிக்கிறார். நேரில் முறையிட்டும், அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை’’ என்றார்.

பிரகாஷ்
பிரகாஷ்

இதையடுத்து குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு சேலம், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனிடம் பேசினோம். “தேர்வு வினாத்தாள் சர்ச்சை குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. சம்பந்தப்பட்ட வினாவைத் தயாரித்த பேராசிரியர், வேறு பல்கலைக்கழகத்தின் கீழ் வரக்கூடிய ஆசிரியர் என்பதால் அவர்மீது பெரியார் பல்கலைக்கழகம் சார்பில், எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது. மாணவி பாலியல் சர்ச்சை குறித்து விசாரணை நடைபெற்றுவருவதால், அது குறித்து நான் எதுவும் பேசக்கூடாது.

ஜெகநாதன்
ஜெகநாதன்

துணைவேந்தர் நினைத்தால் யாரை வேண்டுமானாலும், எந்தப் பொறுப்பிலும் அமர்த்தலாம். அந்தவகையில், தகுதியான ஆசிரியர்களைத்தான் பொறுப்பில் அமர்த்துகிறேன். மற்றவர்கள் சொல்வதுபோல், சாதி பார்த்து யாரையும் நியமிக்கவில்லை. அதற்கான அவசியமும் எனக்கில்லை’’ என்றார்.

பெரியார் பெயரைக் கெடுக்காதீர்கள்!