Published:Updated:

சொந்த மக்களைக் கைவிடுகிறதா கடவுள் தேசம்?

கேரளா
பிரீமியம் ஸ்டோரி
கேரளா

கிட்-களை அனுப்பினாலும் சம்பந்தப்பட்ட நாடுகள் அதை ஏற்றுக்கொள்ளுமா, ஏற்றுக்கொண்டாலும் உடனடியாக நடைமுறைப்படுத்துமா எனப் பல கேள்விகள் எழுகின்றன.

சொந்த மக்களைக் கைவிடுகிறதா கடவுள் தேசம்?

கிட்-களை அனுப்பினாலும் சம்பந்தப்பட்ட நாடுகள் அதை ஏற்றுக்கொள்ளுமா, ஏற்றுக்கொண்டாலும் உடனடியாக நடைமுறைப்படுத்துமா எனப் பல கேள்விகள் எழுகின்றன.

Published:Updated:
கேரளா
பிரீமியம் ஸ்டோரி
கேரளா
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழும் கேரள அரசு, இப்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக வெளிநாட்டிலிருக்கும் மலையாளிகள் பலரும் கேரளாவுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அப்படி வருபவர்களை, ‘கேரளாவுக்கு வர வேண்டுமென்றால், கொரோனா பரிசோதனை செய்து ரிப்போர்ட்டுடன் வர வேண்டும்’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளதுதான் சர்ச்சைக்குக் காரணம்.
பினராயி விஜயன்
பினராயி விஜயன்

‘‘தொற்று உள்ளவர்கள் தனி விமானத்திலும், தொற்று இல்லாதவர்கள் தனி விமானத்திலும் வர வேண்டும் என்பதற்காகத்தான், `கொரோனா பரிசோதனை செய்து ரிப்போர்ட்டுடன் வர வேண்டும்’ என்று முதல்வர் பினராயி விஜயன் கூறுவதாகச் சொல்கின்றனர். வளைகுடா நாடுகளில் கொரோனா சோதனை செய்துகொள்வது இயலாத காரியம். `அப்படி வசதி இல்லாத நாடுகளுக்கு மத்திய அரசு மூலம் கிட்கள் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்படும்’ என்கிறது கேரள அரசு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிட்-களை அனுப்பினாலும் சம்பந்தப்பட்ட நாடுகள் அதை ஏற்றுக்கொள்ளுமா, ஏற்றுக்கொண்டாலும் உடனடியாக நடைமுறைப்படுத்துமா எனப் பல கேள்விகள் எழுகின்றன.

கொரோனாவால் கேரளாவில் உயிரிழந்தவர்களைவிட வெளிநாடுகளில் உயிரிழந்த மலையாளிகளின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகம். எனவே, `சொந்த ஊர் வந்தால் உயிர் பிழைக்கலாம்’ என்றுதான் விமானம் பிடித்து ஊருக்கு வர அவசரம் காட்டு கின்றனர். இதில் கொரோனா பரிசோதனை ரிப்போர்ட் கேட்பது முட்டுக்கட்டை போடும் செயல். இந்த விஷயத்தில் கால தாமதம் செய்வது மரணத்தை அதிகரிக்கும் என்பதால் நிபந்தனையில்லாமல் அவர்களை ஊருக்குள் அனுமதிக்க வேண்டும்’’ என்கிறார்கள் கேரள மக்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேரளத்தில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் கிடையாது. வேலைக்காகவும் வியாபாரத்துக்காகவும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 27,00,000 பேர் உலகின் பிற நாடுகளில் வசித்துவருகின்றனர். வளைகுடா நாடுகளில் தொழில் செய்பவர்களால் கிடைக்கும் வருவாய்தான் கேரளத்தின் பிரதான வருவாய். அவர்கள் மூலம் கேரளத்துக்கு ஓராண்டுக்கு சுமார் 1,00,000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது! இது கேரளப் பொருளாதாரத்தில் 30 சதவிகிதம்.

 வீ.டி.சதீசன், 
 எம்.டி.ரமேஷ், பி.ராஜீவ்
வீ.டி.சதீசன், எம்.டி.ரமேஷ், பி.ராஜீவ்

இது மட்டுமல்ல... பேரிடர் காலங்களில் கேரளத்துக்கு உதவுவதில் பெரும்பங்கு வகிப்பதும் வெளிநாடுவாழ் மலையாளி களே. வெளிநாடுவாழ் மலையாளிகளால் இவ்வளவு பலனடைந்தும் அவர்களைச் சொந்த ஊருக்குக் கொண்டுவரும் விஷயத்தில் கேரள அரசு போதிய அக்கறை காட்டவில்லை என்ற குரல்கள் கேட்கின்றன. எதிர்க்கட்சிகளும் இந்த விஷயத்தைக் கையிலெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

சொந்த மக்களைக் கைவிடுகிறதா கடவுள் தேசம்?

இது குறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் கேரள மாநில துணைத் தலைவர் வீ.டி.சதீசன், “இந்தியாவிலேயே கேரள அரசு மட்டுமே இது போன்ற விதியை அறிவித்துள்ளது. சுமார் 3,00,000 மலையாளிகள் கொரோனாவால் வெளிநாட்டில் சிக்கி யிருந்தனர். இதுவரை சுமார் 80,000 பேர் மட்டுமே சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இன்னும் சுமார் 2,20,000 பேர் வர வேண்டியிருக்கிறது. `விமானத்தில் வந்தால், அவர்களுடன் வருபவர்களுக்கும் நோய் பரவும்’ என்று அரசு சொல்கிறது. வெளிநாடுகளிலிருந்து ஊருக்கு வந்த 80,000 பேரில் 725 பேருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது 0.8 சதவிகிதம்தான். கேரளத்தில் கொரோனாவால் 21 பேர் இறந்துள்ளனர். ஆனால், வெளிநாடு களில் வசிக்கும் மலையாளிகள் 260 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இந்தச் சூழலில் வெளிநாடுகளில் கொரோனா சோதனை நடத்துவது நடைமுறையில் சாத்தியம் அல்ல. எனவே, வெளிநாடுவாழ் மலையாளிகளை இங்கே வரவழைத்து, கொரோனா பரிசோதனை நடத்தி, தொற்று இருக்கும்பட்சத்தில் அவர்களுக்குச் சிகிச்சையளித்துக் காப்பாற்ற வேண்டும்” என்றார்.

பா.ஜ.க-வின் கேரள மாநிலப் பொதுச் செயலாளர் எம்.டி.ரமேஷ், “வெளிநாடுகளி லிருந்து வருபவர்களைத் தனிமைப்படுத்து வதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்தவில்லை. அதனாலேயே இந்த அரசு மலையாளிகள் ஊர் திரும்புவதை தடுக்கும்விதமாக, ‘கொரோனா பரிசோதனை ரிப்போர்ட் இருந்தால்தான் அனுமதிப்போம்’ என்று அறிவித்துள்ளது. கேரள அரசின் இந்த முடிவால் வெளிநாட்டில் மலையாளிகளின் மரணம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது” என்றார் ஆவேசமாக.

சொந்த மக்களைக் கைவிடுகிறதா கடவுள் தேசம்?

இது குறித்து சி.பி.எம் கேரள மாநிலக்குழு உறுப்பினரான பி.ராஜீவிடம் விளக்கம் கேட்டோம். “கொரோனா தொற்று உள்ளவர்களும், தொற்று இல்லாதவர்களும் ஒரே விமானத்தில் பயணம் செய்தால் தொற்று அதிகரிக்கும். எனவேதான், `கொரோனா சோதனை செய்து தொற்று உள்ளவர்கள் தனி விமானத்திலும், தொற்று இல்லாதவர்கள் தனி விமானத்திலும் வர வேண்டும்’ என்றும் கூறுகிறோம். கொரோனா பரிசோதனை செய்ய வாய்ப்பில்லாத நாடுகளுக்கு மத்திய அரசு மூலம் பரிசோதனைக் கருவிகளை அனுப்பிவைக்க கேரள அரசு தயாராக உள்ளது. வெளிநாடுவாழ் மலையாளிகளை நாங்கள் கைவிடவில்லை. அதேசமயம் கேரளம் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு இது போன்ற நடவடிக்கைகள்தான் காரணம்” என்றார்.

வெளிநாடுகளில் பரிதவிக்கும் மக்களின் வேதனைக் குரல்களையும் கேரள அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். கடவுளின் தேசம் சொந்த மக்களைக் கைவிடாது என்றே நம்புவோம்!