தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?

சிங்கம்புணரி கைமுறுக்கு
பிரீமியம் ஸ்டோரி
News
சிங்கம்புணரி கைமுறுக்கு

சிங்கம்புணரி கைமுறுக்கு

சித்தர் பூமி என்று அழைக்கப்படும் சிங்கம்புணரி சிவகங்கை மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது. தென்னை, கடலை விவசாயம்தான் இங்கே பிரதானம். இந்தப் பகுதி மக்கள் விவசாயப் பொருள்களை மதிப்புக்கூட்டுப் பொருள்களாக மாற்றுவதில் கைதேர்ந்தவர்கள். அப்படித்தான் கைமுறுக்கும் ஒரு தொழிலாக மாறி தனிச்சுவையைத் தருகிறது. சிங்கம்புணரி பகுதியில் முன்பு பல ஏக்கர் கடலை விவசாயம் இருந்ததால் எண்ணெய் மில்களும் அதிகரித்தன. கடலையெண்ணெய் சார்ந்த தொழில் என்பதால் இந்தப் பகுதி மக்கள் கைமுறுக்கு செய்யத் தொடங்கினர். இதன் சுவை பல இடங்களுக்கும் பரவி, இப்போது சிங்கப்பூர், மலேசியா, துபாய் என வெளிநாடுகளுக்கும் சென்று சேர்ந்துள்ளது. விலைவாசி காரணமாக எண்ணெய் வகை மாறினாலும் சிங்கம்புணரியின் சுவை மாறவில்லை.

சிங்கம்புணரி கைமுறுக்கு
சிங்கம்புணரி கைமுறுக்கு

``ஒருவேளை சோறு கிடைக்காமல் கஷ்டப்பட்ட நிலைமையில், எங்க அம்மா இந்தத் தொழிலை செய்துதான் எங்களை கரை சேர்த்தார். நான் இந்தத் தொழிலை பல பெண்களின் கைப்பக்குவத்தில் தொடர்ந்து செய்கிறேன். புழுங்கல் அரிசி, மிளகாய், மிளகு, பொட்டுக்கடலை உள்ளிட்ட பொருள்களை நாங்களே பக்குவமாக அரைத்துத் தயாரிக்கும் கைமுறுக்கின் சுவை மெய்ம்மறக்கச் செய்யும். சிங்கம்புணரி சந்தைக்கு வரும் வெளியூர்க்காரர்கள் ஒரு பாக்கெட்டு கைமுறுக்காவது வாங்காமல் செல்ல மாட்டார்கள்” என்கிறார் கைமுறுக்கை குடிசைத்தொழிலாகச் செய்துவரும் செல்வி.

எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?

கைமுறுக்கிலிருந்து பலவிதமான கார வகைகளை 1970, 80-களில் விற்பனை செய்து செல்வந்தரான ராமுடு என்பவரின் பெயர் சிங்கம்புணரி பகுதியில் நிலைத்து நிற்பது கைமுறுக்குக்குக் கிடைத்த பெருமை!