Published:Updated:

எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?

செட்டிநாடு சீப்பு சீடை
பிரீமியம் ஸ்டோரி
News
செட்டிநாடு சீப்பு சீடை

`செட்டிநாடு ஸ்நாக்ஸ்' உரிமையாளர் மெய்யம்மையிடம் பேசினோம்.

சிங்கப்பூர் முதல் ஶ்ரீலங்கா வரை பறக்கும் செட்டிநாடு சீப்பு சீடை!

செட்டிநாடு உணவுகளைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. இவற்றில் நொறுக்குத்தீனிகளுக்கு நறுக்கென்று தனி இடம் உண்டு. அப்படிப்பட்டவற்றில் ஒன்றுதான் சீப்பு சீடை. செட்டிநாடுகளில் தயாராகும் சீப்பு சீடைகளை சிங்கப்பூர் முதல் ஶ்ரீலங்கா வரை தமிழர்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதுகுறித்து, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டையூர் `செட்டிநாடு ஸ்நாக்ஸ்' உரிமையாளர் மெய்யம்மையிடம் பேசினோம்.

எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``செட்டிநாட்டுப் பலகார வரிசையில் சீப்பு சீடைக்குத் தனி இடம் உண்டு. ஆரம்பத்தில் வீட்டு விசேஷங்களுக்கு அவர்களது வீடுகளில் மட்டுமே செய்யப்பட்டவைதாம் செட்டிநாட்டுப் பலகாரங்கள். இப்போது பல இடங்களுக்கும் ஆர்டரின் பெயரில் செய்துகொடுக்கிறோம். நாங்கள் கடந்த 22 ஆண்டுகளாக செட்டிநாட்டுப் பலகாரங்கள் செய்கிறோம். கோட்டையூரில் தயார்செய்து ஶ்ரீராம் நகரில் உள்ள கடையில் விற்பனை செய்கிறோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பொதுவாகவே செட்டிநாட்டுப் பலகாரங்கள் விரைவாக கெட்டுப் போகாது. சீப்பு சீடையையும் நீண்ட நாள்களுக்கு வைத்துச் சாப்பிடலாம். விறகு அடுப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் இதன் சுவை கூடுதலாக இருக்கும். தேங்காய்ப்பால், பச்சரிசி மாவு, பாசிப்பருப்பு மாவும் கலந்து, அச்சில் போட்டு சீப்பு சீடையைச் சுட்டெடுப்போம். ஒருநாள்விட்டு ஒருநாள்தான் இதைத் தயார் செய்வோம். அப்போதுதான் எண்ணெய் இறங்கி பலகாரங்கள் சாப்பிட ஏதுவாக இருக்கும்.

செட்டிநாடு சீப்பு சீடை
செட்டிநாடு சீப்பு சீடை

எங்களுடைய தயாரிப்பில் அதிக அளவு பெண்கள் ஈடுபட்டுள்ளதால், பலகாரங்களில் வீட்டுச் சுவை தங்கியிருக்கும். கால் கிலோ சீப்பு சீடையின் விலை 65 ரூபாய். கல்யாண சீர்வரிசைக்கு சீப்பு சீடை அதிக அளவு விற்பனையாகும்” என்கிறார் மெய்யம்மை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கை கால் வலியை ஏற்படுத்தாத ஆத்தங்குடி டைல்ஸ்!

96செட்டிநாடு கிராமங்களையும் அலங்கரித்த ஆத்தங்குடி டைல்ஸ், இப்போது வெளி மாநிலங்களில் கட்டப்படும் வீடுகளையும் அழகூட்டி வருகின்றன. மற்ற செராமிக்ஸ் கற்களைவிட ஆத்தங்குடி டைல்ஸ் மிகச் சிறப்பானவை என்கின்றனர் பழைமை விரும்பிகள். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த எஸ்.டி.ஆர் டைல்ஸ் கம்பெனி உரிமையாளர் எஸ்.டி.ரவிக்குமாரிடம் பேசினோம்.

எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?

‘‘நாங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிப்பில் இருக்கிறோம். ஆரம்பித்ததிலிருந்தே டைல்ஸ் பிசினஸ் ஏறுமுகத்தில் இருக்கிறது. ஆத்தங்குடி டைல்ஸ் செய்யும் மூலப் பொருள்களை மும்பையில் இருந்து வாங்கி, இங்குள்ள பல நிறுவனங்களுக்கு சப்ளை செய்கிறோம். சிமென்ட், ஆக்சைடு, ஆத்தங்குடி ஓடை மணல், கண்ணாடி, ஆஸ் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி இந்த டைல்ஸைத் தயாரிக்கிறோம்.

தயார் செய்யப்படும் அனைத்துக் கற்களும் நிழல் காய்ச்சலில் இருக்கும். இதனால் கற்கள் முழுமையாகத் தயாராக 15 நாள்கள் வரை ஆகலாம்.

ஆத்தங்குடி டைல்ஸ்
ஆத்தங்குடி டைல்ஸ்

500-க்கும் மேற்பட்ட மாடல்களில் ஆத்தங்குடி டைல்ஸ் செய்கிறோம். இதில் சொக்கட்டான், முருகன் ஒத்தப்பூ, ஒத்த முட்டு, குளோடி, மின்னல் கொடி உள்ளிட்ட மாடல்கள் மக்களால் அதிக அளவில் விரும்பப்படுகின்றன. கேரளம், கர்நாடகம் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என்று வெளிநாடுகளுக்கும் ஆத்தங்குடி டைல்ஸ் ஏற்றுமதியாகிறது.

இந்தக் கற்கள் கை கால் வலியை ஏற்படுத்தாது. வெயிலுக்குக் குளிர்ச்சியாகவும், குளிருக்கு மித வெப்பமாகவும் இருக்கும். 10-க்கு 10-க்கு இன்ச் ஒரு கல் வரிகள் உட்பட 40 ரூபாய்க்கு விற்கிறோம்.

காரைக்குடி பள்ளத்தூரில் ஒரு அரண்மனையில் ஆத்தங்குடி கல் பதித்திருப்பார்கள். பார்க்கவே மனத்தைக் கொள்ளை கொள்ளும்’’ என்று சிலாகிக்கிறார் ரவிக்குமார்.